Published:Updated:

கோவிட் 19: தொடங்கியது 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை... எப்படி நடக்கும்?

COVAXIN
COVAXIN

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி இரண்டாம் மற்றும் மூன்றாம்கட்ட பரிசோதனை நடத்த வேண்டும் என்று பாரத் பயோ டெக் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. அதற்கு மத்திய அரசு, குழந்தைகளிடம் பரிசோதனை நடத்துவதற்கு ஒப்புதல் அளித்ததுள்ளது.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவிட்-19 தொற்று தடுப்பூசியான கோவாக்சினின் செயல்திறன் குறித்து குழந்தைகளிடம் பரிசோதிக்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி இரண்டாம் மற்றும் மூன்றாம்கட்ட பரிசோதனை நடத்த வேண்டும் என்று பாரத் பயோ டெக் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. அதற்கு மத்திய அரசு, குழந்தைகளிடம் பரிசோதனை நடத்துவதற்கு ஒப்புதல் அளித்ததுள்ளது.

Bharat Biotech (File Pic)
Bharat Biotech (File Pic)
AP Photo/Mahesh Kumar A.

இதனையடுத்து 2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இதுபற்றி பேசியுள்ள நிதி ஆயோக்கின் சுகாதாரத்துக்கான உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், ``இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கி பரிசோதனை செய்வதற்கு அனுமதி அளித்துள்ளார்.

இன்னும் 10 முதல் 12 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்தும் பரிசோதனை தொடங்கும் என்றும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

எப்படி நடக்கும்?

2 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எவ்வித பிரச்னையுமின்றி ஆரோக்கியமாக இருக்கும் 525 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். இந்தத் தடுப்பூசியானது தற்போது பெரியவர்களுக்கு வழங்கப்படுவது போலவே ஊசி மூலம் (Intramuscular) குழந்தைகளுக்கும் செலுத்தப்படும். முதல் தவணை தடுப்பூசி செலுத்திய 28 நாள்களுக்குப் பிறகு, இரண்டாவது தவணை வழங்கப்படும்.

Children
Children

இந்தியாவில் மூன்றாம் அலை ஏற்பட்டால் அது குழந்தைகளை அதிகம் பாதிக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கி நடத்தும் ஆய்வு வெற்றியடையும் பட்சத்தில் அடுத்ததாகக் குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு