Published:Updated:

ஐசோலேஷன், குவாரன்டைன்... என்ன வித்தியாசம்? #CoronaVirus

குவாரன்டைன்
குவாரன்டைன்

ஒருவேளை தொற்று இருக்குமோ என்ற பயம் வந்துவிட்டால் உடனடியாக, மருத்துவப் பரிசோதனை செய்து அந்த பயத்திலிருந்து வெளியே வந்துவிடுங்கள்.

கொரோனா வைரஸ் தொற்று உலகத்தில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து ஐசோலேஷன் (Isolation), குவாரன்டைன் (Quarantine) ஆகிய வார்த்தைகள் செய்திகள் எங்கும் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று பொது மருத்துவர் அர்ஷத் அகீலிடமும் மேலே சொன்ன இரண்டு நிலைகளுக்கு மனிதர்கள் ஆளாகும்போது, அவர்கள் மனரீதியாக அதிலிருந்து எப்படி மீள்வது என்று மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவனிடமும் கேட்டோம். முதலில் பேசியவர் அர்ஷத் அக்கீல்.

Isolation
Isolation

ஐசோலேஷன் (Isolation) என்றால் என்ன?

ஓர் உதாரணத்துடன் சொல்ல வேண்டுமென்றால், சமீபத்தில் கனடா நாட்டின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்ததும், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். தன் அறைக்குள்ளேயே இருந்தவர், வெளியில் எங்கும் செல்லவே இல்லை. இதுதான் ஐசோலேஷன் (Isolation). கொரோனாவுக்கான அறிகுறி ஏதாவது உங்களுக்கு இருக்கிறது என்றால், அறிகுறிக்கான சிகிச்சையுடன் அது முற்றிலும் சரியாகும்வரையிலும் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொண்டால், மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும்.

குவாரன்டைன் (Quarantine) என்றால் என்ன?

கொரோனா வைரஸ் தொற்று இருக்கிற வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், தன் சொந்த நாட்டு விமான நிலையத்துக்கு வந்தவுடன், `அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம்' என்ற முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் அவர்களை இரண்டு வாரங்கள் தனியாக வைத்துக் கண்காணிப்பார்கள். இப்படி, அரசாங்கமே சிலரைத் தனியாக வைத்து, அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதி செய்வதைத்தான் குவாரன்டைன் (Quarantine) என்கிறோம். இதன் பிறகு, தொற்று இருந்தால் சிகிச்சைக்கும், இல்லையென்றால் வீட்டுக்கும் அனுப்பிவிடுவார்கள்.

Quarantine Vs Isolation
Quarantine Vs Isolation

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்று பயப்படுவர்களும் மனதளவில் பெரும் பயத்தில் இருப்பார்கள். அவர்களை மனதளவில் எப்படி தைரியப்படுத்துவது என்று சொல்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.

``கொரோனாவும் ஒரு வகை ஃப்ளூதான் என்ற மருத்துவ உண்மையை மனதுக்குள் அடிக்கடி சொல்லிக்கொள்ளுங்கள். ஒருவேளை தொற்று இருக்குமோ என்ற பயம் வந்துவிட்டால் உடனடியாக, மருத்துவப் பரிசோதனை செய்து அந்த பயத்திலிருந்து வெளியே வந்துவிடுங்கள்.

ஒருவேளை தொற்று இருந்தால், குவாரன்ட்டைன் முறையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். பலபேர் அரசு மருத்துவமனையில் தனிமையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதை நினைத்துதான் பயப்படுகிறார்கள். இந்த நேரத்தில் அரசாங்கத்தையும் அரசு மருத்துவமனைகளையும் நம்புவதுதான் பயத்தில் இருந்து வெளியே வருவதற்கான வழி.

Quarantine
Quarantine
`மனிதர்களிடம் சோதிக்கப்படாதது; 14 மாத ஃபாலோ அப்!'- #Corona தடுப்பூசி சோதனையில் கலந்துகொண்ட முதல்நபர்

எனக்கு வந்துவிட்டால், என்னையே நம்பியிருக்கிற என் குடும்பம், குழந்தைகள் என்ன ஆவார்கள் என்ற பயம்தான் இதுபோன்ற நெருக்கடி நேரங்களில் மனிதர்களின் மனதில் ஏற்படும். உங்களுக்கு ஏற்பட்ட தொற்று உங்களை நம்பியிருக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பரவக்கூடாதில்லையா... எனவே, இந்த பயத்தை பரிசோதனைகள் மற்றும் சரியான நேரத்துச் சிகிச்சைகள் வழியாகத்தான் கடக்க வேண்டும்'' என்கிறார்

அடுத்த கட்டுரைக்கு