Published:Updated:

சுயமருத்துவம்... சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக்கொள்ளாதீர்கள்!

சுயமருத்துவம்
பிரீமியம் ஸ்டோரி
சுயமருத்துவம்

பல பெண்களும் தினமும் தலைவலியை உணர்வார்கள். வலி வரும்போது தலைவலிக்கான மாத்திரையைப் போட்டுக்கொண்டு அதை மறந்து விடுவார்கள்

சுயமருத்துவம்... சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக்கொள்ளாதீர்கள்!

பல பெண்களும் தினமும் தலைவலியை உணர்வார்கள். வலி வரும்போது தலைவலிக்கான மாத்திரையைப் போட்டுக்கொண்டு அதை மறந்து விடுவார்கள்

Published:Updated:
சுயமருத்துவம்
பிரீமியம் ஸ்டோரி
சுயமருத்துவம்
நித்யா ராமச்சந்திரன்
நித்யா ராமச்சந்திரன்

அஷ்டாவதானிகளாக இருந்தாலும் பெண்களுக்கு எப்போதும் தன்னலம் இரண்டாம்பட்சம்தான். குடும்ப உறுப்பினர்களில் யாருக்கு உடல்நலமில்லாவிட்டாலும் துடித்துப்போகிறவர்கள், தனக்கு உடல்நலம் பாதிக்கப்படும்போது அதை அலட்சியம் செய்துவிட்டு இயல்பு வாழ்க்கையில் ஐக்கியமாவது பல வீடுகளிலும் சகஜம். தலைவலியில் தொடங்கி, ‘வீட்ல விசேஷம்’ என மாதவிடாயைத் தள்ளிப்போட, அடிக்கடி வரும் யூரினரி இன்ஃபெக்‌ஷனுக்கு என அவர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்னைகளுக்கும் அவர்களே மருத்துவர்களாகி, சுயமருத்துவம் செய்துகொள்வதும் பெரும்பான்மை வீடுகளில் வழக்கம்.

நேரத்தையோ, செலவையோ மிச்சப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அவர்கள் கையில் எடுக்கும் சுய மருத்துவம் என்கிற ஆயுதம் அவர்களைக் காப்பதற்கானதல்ல, அழிப்பதற்கானது என்பதை அவர்கள் அறிந்திருப்பதில்லை. சுய மருத்துவம் ஏன் கூடாது... அதன் பின்னணியில் உள்ள பயங்கரங்கள் என்னென்ன... விளக்கமாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

சுயமருத்துவம்... சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக்கொள்ளாதீர்கள்!

தலைவலி

பல பெண்களும் தினமும் தலைவலியை உணர்வார்கள். வலி வரும்போது தலைவலிக்கான மாத்திரையைப் போட்டுக்கொண்டு அதை மறந்து விடுவார்கள். இவர்களுக்கு ஏற்பட்டது `மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலியாக இருக்கலாம். மூளையில் ஏற்பட்ட கட்டியின் அறிகுறியாக இருக்கலாம். உடலில் ஏதோ பிரச்னை இருக்கிறது, கவனிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறிதான் அந்த வலி. ஆனால் அதை அலட்சியப்படுத்தி, சுய மருத்துவம் செய்வது பிரச்னையை இன்னும் தீவிரமாக்கும். எனவே தலைவலி தொடரும்பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

சுயமருத்துவம்... சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக்கொள்ளாதீர்கள்!

செரிமான பிரச்னை

நாம் அதிகம் அலட்சியப்படுத்தும் அறிகுறிகளில் முதன்மையானது அஜீரணம். செரிமானமில்லையா... உடனே சோடா குடிப்பது, மருந்துக் கடைகளில் ஆன்டாசிட் மாத்திரையோ, சிரப்பையோ வாங்கிப் பயன்படுத்துவது என அதை எளிதில் கடந்து கொண்டிருக் கிறோம். அந்த நேரத்துக்கு அறிகுறி மட்டுப்படுமே தவிர, அந்த அறிகுறிக்கு காரணமான பிரச்னை மறுபடியும் வெடித்துக் கிளம்ப நேரம் பார்த்துக்கொண்டிருக்கும். சரியான நேரத்துக்குச் சாப்பிடாதது, மிச்சம் மீதியை சாப்பிடுவது போன்றவற்றால் பெண்களுக்கு அஜீரண பிரச்னை அடிக்கடி வரும். இளவயதில் இப்படி அறிகுறிகளை அலட்சியப்படுத்திக் கொண்டே இருப்பவர் களுக்கு, 40 ப்ளஸ் வயதில் அது அல்சராக மாறியிருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே அஜீரணத்தை அலட்சியமாக நினைக்காதீர்கள்.

சுயமருத்துவம்... சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக்கொள்ளாதீர்கள்!

மாதவிலக்கை தள்ளிப்போடும் மாத்திரைகள்

வீட்டில் ஏதோ விசேஷம், கோயில் பிரார்த்தனை, முக்கிய மான நிகழ்வு என எதையோ காரணம் சொல்லி அந்த நாள்களில் பீரியட்ஸ் வராமல் இருக்க மாத்திரைகள் எடுத்துக்கொண்ட அனுபவம் பல பெண்களுக்கும் இருக்கும். எப்போதோ ஒருமுறை மருத்துவர் பரிந்துரைத்த அதே மாத்திரையை வருடங்கள் கடந்தும் எடுத்துக் கொண்டிருப்பார்கள் அல்லது அவர்கள் வீட்டுப் பெண் களோ, தோழிகளோ, தெரிந்தவர்களோ தாங்களும் உபயோகப்படுத்தியதாகச் சொன்னதைக் கேட்டு அதே மாத்திரைகளைப் பயன்படுத்துவார்கள். மாத்திரையை நிறுத்திய பிறகும் பீரியட்ஸ் வராமல் கவலையோடு மருத்துவரிடம் வருவார்கள். பீரியட்ஸ் வராததற்கு அவர்கள் கருத்தரித்திருப்பதுகூட காரணமாக இருக்கலாம். அது அவர்களுக்கே தெரிந்திருக்காது. இந்த நிலையில் அந்த கர்ப்பத்தைத் தொடரலாமா, கூடாதா என்பது பெரும் குழப்பமாக இருக்கும். பீரியட்ஸை தள்ளிப்போட எடுத்துக் கொண்ட ஹார்மோன் மாத்திரைகளால் அந்த கர்ப்பம் சரியாக உருவாகி இருக்குமா, அதைத் தொடர்வதில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்றெல்லாம் யோசிப்பார்கள்.

பீரியட்ஸை தள்ளிப்போட கொடுக்கப்படும் மாத் திரைகளில் பிரதானமாக இருப்பது புரொஜெஸ்ட்ரான் என்ற ஹார்மோன். இது நம் உடலில் இயற்கையாகவே சுரக்கக்கூடியதுதான். கர்ப்பப்பையின் உள் லைனிங் பகுதிதான் உதிர்ந்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாயாக வெளியேறுகிறது. இந்த ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது கர்ப்பப்பையின் லைனிங் பகுதியானது தடிமனாகும். இந்த மாத்திரைகளை குறிப்பிட்ட நாள்களுக்கு எடுத்துக்கொண்டு பிறகு நிறுத்தும்போது மீண்டும் பீரியட்ஸ் வரும்.

புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வோருக்கு மனநிலையில் மாற்றங்கள், வாந்தி, தலைச்சுற்றல் போன்ற பொதுவான அறிகுறிகள் ஏற்படும். சிலருக்கு நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம், ரத்தம் உறைதல் போன்ற பயங்கரமான விளைவுகளும் ஏற்படலாம். இந்த ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்போது ரத்தம் உறையத் தொடங்கும். அது உடலில் நுரையீரல், மூளை, இதயம் என எந்த உறுப்பையும் பாதிக்கலாம். சுவாசம் தடைப்பட்டு எமர்ஜென்சி நிலைக்குப் போகலாம். ஹார்ட் அட்டாக் ஆகவோ, பக்கவாதமாகவோ வெளிப்படலாம். இந்த வாரம் ஒரு பூஜை, அடுத்த வாரம் ஒரு பண்டிகை என சிலர் இந்த மாத்திரைகளை கணக்கே இல்லாமல் தொடர்ந்து எடுத்துக் கொள்வார்கள். அது இன்னும் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

‘10 வருடங்களுக்கு முன்பு மருத்துவரை பார்த்து அவர் பரிந்துரைத்த அதே மாத்திரையைதான் இப்போதும் எடுத்துக்கொண்டேன். அப்போது ஏற்றுக்கொண்ட உடல் இப்போது மட்டும் ஏற்றுக்கொள்ளாதா?’ என்று சிலர் கேட்கலாம். 10 வருடங்களுக்கு முன்பு உங்களுக்கு உடல் பருமனோ, நீரிழிவோ, இதய பாதிப்புகளோ, வேறு இணை நோய்களோ இல்லாமல் இருக்கலாம். இப்போது அந்தப் பிரச்னைகள் வந்திருக்கலாம். பிஎம்ஐ அளவு 30-க்கு மேல் இருப்பவர்களுக்கு இயல்பிலேயே ரத்தம் உறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்த நிலையில் இதுபோன்ற ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது பேராபத்தை ஏற்படுத்தும்.

ஒருவர் ஆஸ்துமா நோயாளியாகவோ, மைக்ரேன் உள்ளவராகவோ, வலிப்பு நோய் உள்ளவராகவோ அவற்றுக்கான சிகிச்சையில் இருக்கலாம். அவர்கள் நரம்பியல் மருத்துவரின் ஆலோசனை இன்றி எவ்விதமான ஹார்மோன் மாத்திரைகளையும் எடுக்கக் கூடாது. ஒரு மருந்துடன் இன்னொரு மருந்தை எடுக்கும்போது அது மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. எந்தெந்த மருந்துகளை எந்தெந்த மருந்துகளுடன் எடுக்க லாம், எடுக்கக் கூடாது என்ற விஷயம் மருத்துவர்களுக்கு மட்டுமே சரியாகத் தெரியும்.

சுயமருத்துவம்... சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக்கொள்ளாதீர்கள்!

வலி நிவாரணிகள்

பீரியட்ஸ் நாள்களில் ஏற்படும் வலிக்கு பெயின் கில்லர் எடுத்துக்கொள்வது பெரும்பான்மையான பெண்களின் வழக்கம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஒன்றிரண்டு மாதங்களுக்கு பீரியட்ஸின்போது எடுத்துக்கொள்வது தவறல்ல. வலி தொடர்ந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிவது மிகவும் முக்கியம். பீரியட்ஸின் முதல் அல்லது இரண்டாவது நாளில் லேசான வயிற்றுவலி, இடுப்புவலி ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். அதைத் தாண்டி தாங்க முடியாத அளவுக்கு வலியை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். சினைப்பையில் அல்லது கர்ப்பப்பையில் உள்ள கட்டி, எண்டோமெட்ரியாசிஸ், அடினோமயோசிஸ் போன்ற பல பிரச்னைகளின் காரணமாக உங்களுக்கு பீரியட்ஸ் நாள்களில் வலி வரலாம். எனவே காரணத்தைக் கண்டறியாமல் நீங்களாக மாதக்கணக்கில் வலி நிவாரணி களை எடுத்துக்கொள்வது சரியானதல்ல.

சுயமருத்துவம்... சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக்கொள்ளாதீர்கள்!

கருக்கலைப்பு மாத்திரைகள்

கருவைக் கலைப்பதற்காக தாமாகவே மாத்திரைகள் வாங்கிப் பயன்படுத்திவிட்டு அதீத ரத்தப்போக்குடன் மருத்துவரிடம் வரும் பெண்கள் பலர். கர்ப்பத்தைத் தொடர்வதா, வேண்டாமா என்ற முடிவு முழுக்க முழுக்க அந்தப் பெண்ணின் முடிவு. வேண்டாம் என்று முடிவெடுக் கும்பட்சத்தில் மருத்துவரை அணுகி அவர் பரிந்

துரைக்கும் சிகிச்சையுடன் கருவைக் கலைப்பதுதான் பாதுகாப்பானது. சில பெண்களுக்கு கருக்குழாயில் கருத்தரித்திருக்கலாம். அந்த நிலையில் அது தெரியாமல் கருக்கலைப்புக்கான மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்போது அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்த லாம்.

சுயமருத்துவம்... சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக்கொள்ளாதீர்கள்!

சிறுநீர்த் தொற்று

மெனோபாஸை நெருங்கும் பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படுவது சகஜம். அவர்களது உடலில் ஹார்மோன் அளவுகள் குறையத் தொடங்குவதால் வெஜைனா பகுதி வறண்டு போகும். அந்த வறட்சி, சிறுநீர்த் தொற்றுக்கு காரணமாகலாம். அடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படுவது நீரிழிவு பாதிப்புக்கான அறிகுறி யாகவும் இருக்கலாம். எனவே மருத்துவரை அணுகினால் மட்டுமே அவர் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு நீரிழிவு இருக்கிறதா என்பதை சந்தேகித்து அதற்கான டெஸ்ட்டை எடுக்கச் சொல்வார். நீரிழிவு இல்லாதவர்களுக்கு, அடிக்கடி தொற்று வராமலிருக்க வழிகளைச் சொல்வார்.

சிறுநீர்த் தொற்று ஏற்படும்போது மருத்துவர் சிறுநீர் பரிசோதனைக்குப் பரிந்துரைப்பார். அந்தச் சோதனையில் தொற்றுக்கு காரணமான கிருமி கண்டுபிடிக்கப்பட்டு அதற்கேற்பவே மருந்துகள் பரிந்துரைக்கப்படும். ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஐந்து நாள்கள் முதல் இரண்டு வாரங்கள்வரை தீவிரத்தைப் பொறுத்து மருத்துவர் பரிந்துரைப்பார். ஆனால், பலரும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்த ஒன்றிரண்டு நாள்களிலேயே பிரச்னை சரியானதாக உணர்ந்ததும் மீதமுள்ள மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல் நிறுத்தி விடுவார்கள்.

பரிந்துரைத்த நாள்களுக்கு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல் விடும் பட்சத்தில் அடுத்த முறை அதே ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் அந்த நபரின் உடலில் வேலை செய்யாது. பொதுவாக ஆன்டிபயாடிக் பரிந்துரைக்கும்போது குறைவான வீரியத்திலிருந்துதான் தொடங்குவார்கள். அந்த மருந்து வேலை செய்யவில்லை என்ற நிலையில் தான் அதன் தீவிரம் அதிகரிக்கப்படும். ஆன்டி பயாட்டிக்கை முழுமையாக எடுத்துக்கொள்ளாமல் பாதியிலேயே நிறுத்தும்போது அடுத்த முறை பாதிப்போடு வரும்போது அந்த நபருக்கு அதே மருந்து வேலை செய்யாது. வேறுவழியே இன்றி, வீரியமான ஆன்டிபயாடிக்கை பரிந்துரைக்க வேண்டி வரும். இது யூரினரி இன்ஃபெக்‌ஷனுக்கு மட்டுமல்ல, சளி இருமல் உள்ளிட்ட எந்தவிதமான தொற்றுக்குப் பரிந்துரைக்கும் மருந்துக்கும் பொருந்தும். எனவே மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை, பிரச்னை குணமானதும் பாதியோடு நிறுத்தாமல், முழுமையாக எடுத்து முடித்துவிடுங்கள்.

சுய மருத்துவம் குறித்து மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் அளித்துள்ள முழு பேட்டியை https://bit.ly/3vxpWc3

இந்த லிங்க்கில் அல்லது அருகில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து பார்க்கலாம்.