Published:Updated:

Doctor Vikatan: எந்தத் தடுப்பூசியாக இருந்தாலும் பக்க விளைவுகள் வராதா?

Vaccine ( AP Illustration/Peter Hamlin )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: எந்தத் தடுப்பூசியாக இருந்தாலும் பக்க விளைவுகள் வராதா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Vaccine ( AP Illustration/Peter Hamlin )

அடிக்கடி வாக்சின் போடுவதால் பக்க விளைவுகள் வருமா? (எந்த வாக்சினாக இருந்தாலும்)

- மதுமிதா சதீஷ்குமார் (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் குமாரசாமி
டாக்டர் குமாரசாமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.

``பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையிலும், அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும்தான் தடுப்பூசிகளுக்கான பரிந்துரைகள் வழங்கப்படும். ஒரு தடுப்பூசியை உருவாக்க முடிவெடுத்தால், அது எந்தக் காரணத்துக்காக உருவாக்கப்பட வேண்டும் என்பதை முதலில் ஆராய்வோம். அதன் பிறகு phase 1, phase 2, phase 3 என வேறுவேறு நிலைகளில் கிளினிகல் ட்ரையல்ஸ் நடைபெறும். அந்த ட்ரையல்களில் அந்தத் தடுப்பூசிகள் மனிதர்களுக்கு எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை, எத்தனை நாள்களுக்கொரு முறை, எந்த அளவில் கொடுக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் ஆய்வு செய்து அதன் பிறகுதான் பரிந்துரையே வழங்கப்படும்.

இன்று கோவிட் தொற்றுக்கெதிரான தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்த பிறகு, 3 மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ், 6 - 9 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் எனப் பரிந்துரைக்கப் பட்டதன் பின்னணியிலும் இப்படிப் பல்வேறு ஆய்வுகளும் கிளினிகல் ட்ரையல்களும் இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதேபோல வேறு தடுப்பூசிகள் நிறைய இருக்கின்றன. உதாரணத்துக்கு, ஹெபடைட்டிஸ் பி தொற்றுக்கான தடுப்பூசி. இதுவும் 3 டோஸ் போடப்படும். முதல் டோஸ் போட்ட ஒரு மாதம் கழித்து இரண்டாவது டோஸ், பிறகு ஆறாவது மாதம் இன்னொரு டோஸ் போடப்படும். மஞ்சள்காமாலைக்கு காரணமான ஹெபடைட்டிஸ் கிருமியைத் தடுப்பதற்கான ஊசி இது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெண்களுக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு ஹெச்பிவி (ஹியூமன் பாப்பிலோமா வாக்சின்) போடப்படும். அதிலும் வேறு வேறு டோஸ் உண்டு. அதாவது 15 வயதுப் பெண் குழந்தைக்குப் போடுவதென்றால் இரண்டு டோஸ் போடுவோம். 15 வயதுக்கு மேல் என்றால் மூன்று டோஸ் போடப்படும். இவை எல்லாமே முறையான ஆய்வுகளுக்குப் பிறகு முடிவெடுத்துச் செயல்படுத்தப்படுபவை.

A doctor prepares to administer Covaxin vaccine
A doctor prepares to administer Covaxin vaccine
AP Photo/Rafiq Maqbool

இந்த நடைமுறை எல்லா தடுப்பூசிகளுக்கும் பொருந்தும். எனவே, தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் வருமோ என்ற உங்கள் பயம் தேவையற்றது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?