Published:Updated:

வேலைகளில் கவனச்சிதறல் ஏற்படுகிறதா? - இந்த 10 நிமிட விதிமுறையைப் பின்பற்றுங்கள்!

10-minute rule
10-minute rule

"சொல்லப்போனால் நமக்கு மிகவும் பிடித்த விஷயங்களில்கூட அதிக நேரம் கவனம் செலுத்த முடியாது. கண்டிப்பாக ஏதாவதொரு கவனச்சிதறல் ஏற்படும். ஏனென்றால் நம் மனநிலை அப்படி."

'எந்த வேலையிலும் அதிக நேரம் கவனம் செலுத்த முடியல! அடிக்கடி கவனச்சிதறல் ஏற்படுது. படிக்கும்போது ஏற்பட்ட இந்தப் பிரச்னை வேலைக்கு வந்த அப்புறமும் தீரவேயில்ல'ன்னு தினந்தினம் புலம்பிக்கொண்டிருப்பவரா நீங்கள்? கவலையே வேண்டாம்.
ஸ்ட்ரெஸ்
ஸ்ட்ரெஸ்

`கவனச்சிதறல்' என்பது ஒரு குறைபாடு இல்லை. இது எல்லாருக்கும் ஏற்படும் இயல்பான ஒரு விஷயம்தான். இதிலிருந்து விடுபட '10 நிமிட விதிமுறை' உங்களுக்கு உதவும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

அது என்ன 10 நிமிட விதிமுறை... அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும்..? உளவியல் ஆலோசகர் ஸ்ரீதேவியிடம் கேட்டோம்.

"கவனச்சிதறல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்படும் ஒன்றுதான். எந்த ஒரு விஷயத்திலும் நம் முழு கவனத்தை அதிக நேரம் செலுத்த முடியாது. சம்பந்தப்பட்ட விஷயத்தை விட்டுவிட்டு வேறு எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்போம். இது நாம் பள்ளியில் படிக்கும்போதே ஏற்பட்டிருக்கும்.

உளவியல் 
ஆலோசகர்  ஸ்ரீதேவி
உளவியல் ஆலோசகர் ஸ்ரீதேவி

சொல்லப்போனால் நமக்கு மிகவும் பிடித்த விஷயங்களில்கூட அதிக நேரம் கவனம் செலுத்த முடியாது. கண்டிப்பாக ஏதாவதொரு கவனச்சிதறல் ஏற்படும். ஏனென்றால் நம் மனநிலை அப்படி. அதனுடன் சேர்ந்து இப்போது நம் கவனத்தைத் திசைதிருப்ப சமூக வலைதளம், மொபைல் கேம்ஸ் என்று எத்தனையோ விஷயங்கள் வந்துவிட்டன.

உளவியலில் கவனச்சிதறல் என்பது குறைபாடாகப் பார்க்கப்படுவதில்லை. ஆனால் உங்களின் படிப்பு, வேலை அல்லது அன்றாட வாழ்க்கைமுறை அதனால் பாதிக்கப்படும் பட்சத்தில் அது ஒரு பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. இதிலிருந்து விடுபட '10 நிமிட விதிமுறை' என்ற வழியானது சிறந்த தீர்வாகக் கூறப்படுகிறது.

Work
Work
`இன்சோம்னியா பிரச்னையால் தூக்கத்தைத் தொலைத்தவரா நீங்கள்?'- நிபுணர் தரும் தீர்வுகள்!

10 நிமிட விதிமுறையானது கேட்பதற்கும் செயல்படுத்துவதற்கும் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், நிச்சயம் பலனளிக்கக்கூடியது. ஒரு வேலையைச் செய்ய நமக்கு அதிக நேரம் இருக்கும்போது 'அப்புறம் செய்துகொள்ளலாம்' என்ற அலட்சியமும், அதைத் தொடர்ந்து பலவித கவனச்சிதறலும் அந்த வேலையில் ஏற்படும். இதன் காரணமாக போதுமான நேரம், வசதிகள் இருந்தும் அந்த வேலையை நம்மால் சரியாகச் செய்ய முடியாது. இந்நேரத்தில் 10 நிமிட விதிமுறையை நாம் பின்பற்றலாம்.

இதுதான் 10 நிமிட விதிமுறையின் ஃபார்முலா!
"ஒரு செயலை முடிக்க உங்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே இருந்தால், இயற்கையாகவே அதைச் செய்து முடிப்பதற்கான விரைவான வழியை நீங்கள் முயல்வீர்கள்!"

அதாவது முதலில் ஒருநாளில் உங்களுக்கு உள்ள வேலைகளில் எதற்கு முன்னுரிமை கொடுத்து முதலில் முடிக்க வேண்டும் என்பதைப் பட்டியலிட வேண்டும்.

10-minute rule
10-minute rule

பிறகு, ஒரு முக்கியமான வேலையை முடிக்க உங்களுக்கு அதிக நேரம் இருந்தாலும் அதைக் குறிப்பிட்ட பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் செய்து முடிக்க 10 நிமிடங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது 10 நிமிடங்களுக்குள் செய்து முடித்தே ஆக வேண்டும் என்ற ஒருவிதமான கட்டாயத்தை உங்கள் எண்ணத்தில் கொண்டு வர வேண்டும்.

கட்டாயம் இருக்கும்போது அந்த வேலையை எப்படிக் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்றுதான் யோசிக்கத் தோன்றுமே தவிர, மற்ற விஷயங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்க மாட்டோம். அந்த வேலையையும் விரைந்து முடிப்போம். ஒரு பெரிய வேலையை 10 நிமிட பணிகளாகப் பிரிப்பது உங்களுக்குப் பகுப்பாய்வு செய்யும் திறனைக் கொடுக்கிறது.

work
work
லாக்டெளனில் பிரேக் அப் பிரச்னைகள்... எதிர்கொள்வது எப்படி? உளவியல் ஆலோசகரின் வழிகாட்டல்

நேர நிர்வாகத்தை மேம்படுத்துகிறது. மேலும் 10 நிமிட விதிமுறையில் ஒரு வேலையைச் செய்யும்போது உங்களுக்கு எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படுவது குறைவதாக இது குறித்துச் செய்யப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.

கவனச்சிதறலைத் தவிர்க்க மேலும் சில வழிகள்:

தியானம்
தியானம்
  • ஒருவேலையைச் செய்யும்போது பலவித காரணங்களால் கவனச்சிதறல் ஏற்படலாம். எதனால் கவனச்சிதறல் ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து அதைத் தவிர்க்கலாம்.

  • எந்தவொரு வேலையைச் செய்யும்போதும் கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்க வேலையின் தன்மைக்கு ஏற்ப மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.

  • வேலைகளுக்கு நடுவே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அது நீங்கள் செய்யும் வேலையின் சூழலை பாதிக்கக் கூடாது.

  • தினமும் காலையில் செய்யும் 10 நிமிட தியானமும், மூச்சுப்பயிற்சியும் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த உதவும்."

என்றார் உளவியல் ஆலோசகர் ஸ்ரீதேவி.

அடுத்த கட்டுரைக்கு