Published:Updated:

மாஸ்க், ஹேண்ட் சானிடைஸர் இல்லை... சளி, காய்ச்சலுக்கு ஜி.ஹெச்சா? கொரோனா சந்தேகங்களுக்குப் பதில்!

கொரோனா வைரஸ் தடுப்பு
கொரோனா வைரஸ் தடுப்பு

கொரோனா வைரஸ் தொடர்பாக எத்தனை கட்டுரைகளைப் படித்தாலும் பேட்டிகளைப் பார்த்தாலும், பொதுமக்களுக்கு சில அடிப்படையான சந்தேகங்கள் வரவே செய்யும். அப்படிப்பட்ட சில கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார், பொது மருத்துவர் அஷ்ரத் அகீல்.

மாஸ்க் போட மறுக்கும் குழந்தைகளுக்கு வேறு என்ன மாதிரி பாதுகாப்பு தரலாம்?

corona mask
corona mask

புரிந்துகொள்ளும் குழந்தையென்றால், கண்டிப்பாக மாஸ்க் போட வேண்டுமென்று சொல்லிக்கொடுங்கள். இல்லையென்றால், கொரோனா பயம் தீர்கிறவரை குழந்தைகளை வெளியில் அழைத்துச்செல்லாமல் இருப்பதுதான் பாதுகாப்பு.

மாஸ்க் கிடைக்கவில்லையென்றால் ஷால், கைக்குட்டைகளைப் பயன்படுத்தலாமா ?

Dr. Arshad Akeel
Dr. Arshad Akeel

பயன்படுத்தலாம். ஆனால், ஒரு வாரத்துக்கு ஒரு கைக்குட்டை என்று பயன்படுத்தாமல், தினமும் ஒன்று எனப் பயன்படுத்த வேண்டும். அதேநேரம், மாஸ்க்கை தவிர்த்துவிட்டு இவற்றை மட்டுமே எப்போதும் பயன்படுத்துவதும் இந்த நேரத்தில் பாதுகாப்பில்லை.

கொரோனா பிரச்னை தீரும் வரைக்கும் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டுமா?

Corona Vs Nonveg ?
Corona Vs Nonveg ?

அவசியமில்லை. நன்கு வேகவைத்துச் சாப்பிடுங்கள். தவிர, அசைவ உணவுகளால்தான் கொரோனா வந்திருக்கிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

சாதாரண சளி, காய்ச்சலுக்கும் கொரோனா சளி, காய்ச்சலுக்கும் வித்தியாசத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?

cold and fever
cold and fever

வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம். சிலருக்கு எந்தவித அறிகுறியும் காட்டாமலே கொரோனா வரலாம் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

சளி பிடித்த அன்றே மருத்துவரைப் பார்க்க வேண்டுமா?

corona virus
corona virus

வழக்கமான சளித் தொந்தரவுக்கெல்லாம் அன்றைக்கே மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை. மறுநாள்கூட செல்லலாம். ஆனால், காய்ச்சல், மூச்சுவிடுவதற்கு சிரமம் போன்ற பிரச்னைகள் இருந்தால், உடனே மருத்துவரைப் பார்த்துவிடுவதே நல்லது.

கொரோனாவுக்கான பரிசோதனை மையங்கள் எங்கெங்கு இருக்கின்றன?

Corona
Corona

புனேவிலும் சென்னையில் கிண்டியிலும் இருக்கின்றன.

கொரோனா பீதி ஏற்பட்டதிலிருந்தே வளர்ப்புப் பிராணிகள் மற்றும் கால்நடைகளுடன் நேரடித் தொடர்பில் இருக்காதீர்கள் என்று அறிவுறுத்தப்படுகிறதே...

Corona virus Vs Pet animals..?
Corona virus Vs Pet animals..?

கொரோனா வைரஸ் புதிதாக வந்துள்ள பாதிப்பு என்பதால், அது நம்மிடமிருந்து விலங்குகளுக்குப் பரவுமா, அவற்றிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுமா என்றெல்லாம் இன்னும் தெளிவாகவில்லை. விலங்குகளிடமிருந்து பரவும் என்பதும் நிரூபிக்கப்படவில்லை. அதனால், முன்புபோல வளர்ப்புப் பிராணிகள் மற்றும் கால்நடைகளிடம் நெருக்கம் காட்ட வேண்டாம். அப்படியே செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டாலும் மாஸ்க் போட்டுக்கொண்டுசெல்லுங்கள்.

ஹேண்ட் சானிட்டைஸர் கிடைக்கவில்லையென்றால் சோப்பால் கைகழுவினால் போதுமா?

hand wash
hand wash

தாராளமாகச் செய்யலாம்.

சைனஸ் தொந்தரவு இருப்பவர்களை கொரோனா எளிதில் தாக்குமா? இந்த நேரத்தில் அவர்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்?

கொரோனா
கொரோனா

மற்றவர்களைவிட இவர்களுக்கு வாய்ப்பு கொஞ்சம் கூடுதல்தான். ஆனால், இவர்கள் மாஸ்க் அணிவது, கூட்டம் அதிகமான இடங்களுக்குச் செல்லாமல் இருப்பது, வாயைப் பொத்தி தும்மல் போட்டவுடனே ஹேண்ட் சானிட்டைஸர் பயன்படுத்துவது என்று கவனமாக இருந்தால் பயப்பட வேண்டாம்.

வீட்டிலேயே தெர்மா மீட்டர் வைத்து டெம்பரேச்சர் செக் செய்வது சரியா?

fever
fever

அக்குள் பகுதியில் வைத்து செக் பண்ணலாம். வாயில் வைத்து செய்யவே கூடாது.

கொரோனா வராமல் தடுக்க, தவிர்க்கவேண்டிய உணவுகள்...

corona
corona

அப்படி எதுவும் இல்லை. எந்த உணவாக இருந்தாலும் நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பேருந்து, ரயில்களில் கூட்டநெரிசலில் பயணிக்கும்போது மூச்சுக்காற்றின் வழியே வைரஸ் பரவுமா?

public transport and corona
public transport and corona

இன்றைய நிலைமையில் இதுதான் ஆபத்தான விஷயமே. அதனால், பயணங்களின்போது கட்டாயம் மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். வண்டியைவிட்டு இறங்கியவுடனே கைகளை ஹேண்ட் சானிட்டைஸரால் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

சளி, காய்ச்சல் வந்தாலே ஜி.ஹெச்சுக்குத்தான் போகவேண்டுமா, அருகிலுள்ள ஏதேனும் மருத்துவமனையில் பரிசோதனை செய்யக்கூடாதா?

Government Hospial
Government Hospial

எளிதில் சரியாகிற சளி, காய்ச்சலுக்கெல்லாம் ஜி.ஹெச்சுக்குப் போகவேண்டிய அவசியமில்லை. இதையும் தாண்டி அதிகப்படியான காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் உடனே சென்றுவிடுங்கள்.

வைரஸ் தொற்று இல்லாமல், சாதாரண காய்ச்சல், சளி இருப்பவரை கொரோனா தொற்றுமா?

fever and cold
fever and cold

கட்டாயம் தொற்றும் என்று சொல்ல முடியாது. மற்றவர்களைவிட இவர்களுக்கு வருகிற வாய்ப்பு கொஞ்சம் கூடுதல் என்று சொல்லலாம்.

கொரோனா அல்லாத வேறு சில காரணங்களுக்காக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

handwash
handwash

மருத்துவமனைக்குச் செல்லும்போது மாஸ்க் அணிவதும், வீட்டுக்கு வந்தவுடன் கைகளைச் சுத்தமாகக் கழுவுவதும்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

தொற்று ஏற்படாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?

Is Vitamin C save from corona ?
Is Vitamin C save from corona ?

எலுமிச்சை, ஆரஞ்சு மாதிரியான வைட்டமின் 'சி' நிறைந்த பழங்களை அதிகமாகச் சாப்பிடுங்கள் அல்லது மருத்துவர்களிடம் கேட்டு, மல்ட்டி வைட்டமின் மாத்திரைகள் அல்லது வைட்டமின் 'சி' மாத்திரைகளைச் சாப்பிடலாம்.

``இந்தியாவில் கொரோனாவை சமாளிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம்!'' - மருத்துவர் விளக்கம்

பொதுக் கழிப்பறையை உபயோகிப்பது பாதுகாப்பானதா ? அவசியம் ஏற்பட்டால் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள்?

hand santizer
hand santizer

இந்த நேரத்தில் பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்துவது பாதுகாப்பில்லைதான். ஒருவேளை பயன்படுத்தினீர்களென்றால், உடனே கைகளை சோப் போட்டு நன்கு கழுவிவிடுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு