Published:Updated:

பிரசவ வலியை கணவன்கூட இருந்து பார்க்கணும்!

பிரசவ வலியை கணவன்கூட 
இருந்து பார்க்கணும்!
பிரீமியம் ஸ்டோரி
பிரசவ வலியை கணவன்கூட இருந்து பார்க்கணும்!

- மருத்துவரின் நெகிழ்ச்சிப் பதிவுகள்

பிரசவ வலியை கணவன்கூட இருந்து பார்க்கணும்!

- மருத்துவரின் நெகிழ்ச்சிப் பதிவுகள்

Published:Updated:
பிரசவ வலியை கணவன்கூட 
இருந்து பார்க்கணும்!
பிரீமியம் ஸ்டோரி
பிரசவ வலியை கணவன்கூட இருந்து பார்க்கணும்!

“ஹாய் ஃபிரெண்ட்ஸ்... இத்தனை நாள் தொடர்ந்து அப்டேட்ஸ்லாம் பார்த்து ருப்பீங்க. இப்போ நாம ஃபைனலா அந்த எக்ஸைட்டிங் மொமென்ட்டுக்கு வந்துட்டோம். ரெண்டு மூணு நாளா அவங்களுக்கு வலி ஆரம்பிச்சிருச்சு. வலியை மறக்குறதுக்காக... படம் பார்த்தாங்க, டான்ஸ் ஆடினாங்க, போட்டோ ஷூட் பண்ணோம். இன்னிக்கு வலி அதிகமாகிட்டே இருக்கு. உட்கார்ந்து சாப்பிடக்கூட முடியாம சிரமப்படுறாங்க. பார்க்கவே எனக்கு கஷ்டமா இருக்கு. வலியைத் தாங்கிக்கிற வலிமை அவங்களுக்கு இருந்தாலும், அவங்க சிரமப்படுறதைப் பார்க்கிற வலிமை எனக்கு இல்ல. இப்போ 15 நிமிஷத்துக்கு ஒருமுறைதான் வலி வருது. அஞ்சு நிமிஷத்துக்கு ஒருமுறை வலி வர ஆரம்பிச்ச பிறகுதான் ஹாஸ்பிட்டலுக்குப் போகணும். இதையே என்னால தாங்கிக்க முடியல. அப்போ எப்படி இருக்கும்னு தெரியலை” - பரிதவிப்பும் எதிர்பார்ப்பும் போட்டிபோடும் உணர்வுகளுடன் அந்த வீடியோவில் பேசுகிறார் இயற்கை மருத்துவர் முத்துக்குமார்.

மருத்துவரீதியாக எவ்வளவோ முன்னேறிய பிறகும், இன்றைய தலைமுறை பெண்களுக்குப் பிரசவம் குறித்த புரிந்துணர்வு இல்லை. இப்படியான சூழலில், ஒரு மருத்துவரே தனது கர்ப்ப கால அனுபவத்தில் ஒவ்வொரு முக்கிய மான தருணத்தையும் சமூக வலைதளம் வாயிலாகப் பகிர்வது ஆச்சர்யம்தானே...

 பிரசவ வலியின்போது...
பிரசவ வலியின்போது...

கோவை சாய்பாபா காலனியில் இயற்கை மருத்துவ சிகிச்சை மையம் ஒன்றை நடத்தி வரும் இயற்கை மருத்துவர்களான பாரதி - முத்துக்குமார் தம்பதியர் விழிப்புணர்வு முயற்சியாக அதைச் செய்திருக்கின்றனர். தான் கர்ப்பமான நாள்முதல் செய்யும் உடற்பயிற்சிகள், உட்கொள்ளும் உணவுகள், கணவரும் உறவுகளும் தரும் அரவணைப்புகள் என அனைத்தையும் முகநூல் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களாகப் பகிர்ந்து வருகிறார் மருத்துவர் பாரதி. பிரசவத்துக்குச் செல்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் அவரின் கணவர் முத்துக்குமார் கொடுத்த அப்டேட்டைத் தான் தொடக்கத்தில் படித்தீர்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே இயற்கை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

மருத்துவர் பாரதிக்கு வாழ்த்துகள் சொல்லிப் பேசினோம், “நானும் என் கணவரும் நேச்சுரோபதி மருத்துவர்கள். என் கணவர் முதுகுத்தண்டுவட பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கிறார், நான் மகப்பேறு மற்றும் பெண்கள் சார்ந்த பிரச்னைகளைப் பார்க் குறேன். எங்ககிட்ட வர்ற நோயாளிகள் கேட்கும் கேள்விகளைக் கவனிச்ச பிறகுதான், மக்களுக்கு சின்னச் சின்ன அடிப்படையான விஷயத்துலகூட தெளிவு இல்லைங்கிறது புரிஞ்சது. நம்மைத் தேடி வர்றவங்களுக்கு சிகிச்சையளிக்கிறது மட்டும் போதாது. நமக்குத் தெரிஞ்ச விஷயத்தை நாலு பேருக்கு சொல்லணும். அதுதான் நம்ம படிச்ச படிப்புக்கு மரியாதைன்னு நானும் என் கணவரும் முடிவெடுத்தோம். சின்னச் சின்ன பிரச்னை களுக்கான காரணத்தையும் தீர்வுகளையும் விளக்கி ஃபேஸ்புக்ல வீடியோ வெளி யிட்டோம்.

இதற்கிடையிலதான், நாங்க குழந்தைக்காகத் திட்ட மிட்டோம். ரெண்டு மாசத் துக்கு முன்னாடியே சத்தான உணவுகள் எடுத்துக்கிறது, எங்களோட அறையை மொபைல் ஃப்ரீயா வெச்சுக் கிறதுன்னு இயற்கை பிரசவத் துக்கு ஆயத்தமானோம். இயற்கை பிரசவத்துக்கும் அலோபதி முறைகள்ல நடக் கிற சுகப்பிரசவத்துக்குமே நிறைய வேறுபாடுகள் இருக்குன்னு இங்கே பலருக் கும் தெரியலை. இயற்கை பிரசவத்துல எந்தவித மருந்து களும் கிடையாது. முப்பது நாப்பது வருஷங்களுக்கு முன்னால வீட்டுல எப்படி இயல்பா குழந்தை பிறந்ததோ அதேபோல ஹாஸ்பிட்டல்ல செய்யுறதுக்குப் பேர்தான் இயற்கை பிரசவம். அதுல எந்தவிதமான மருந்துகளும் கிடையாது. ஆனால், அலோபதி முறையில் சுகப்பிரச வத்தில் மருந்துகள் உண்டு. இயற்கை பிரசவத்தில் கர்ப்பிணிக்கு வசதியான பொசிஷனில் குழந்தையைப் பெற்றுக் கொள்ள லாம். ஆனால், வழக்கமான சுகப்பிரசவத்தில் படுத்த நிலையிலேயேதான் பிரசவிக்கணும். இப்படி நிறைய வேறுபாடுகள் இருக்கு.

ஆனா, இது பெரும்பாலான மக்களுக்குத் தெரியலை. தெற்காசியாவில் 100 சதவிகிதத்தில் 15 சதவிகிதம்தான் சிசேரியனுக்கான தேவை இருக்குன்னு உலக சுகாதார நிறுவனம் சொல்லுது. ஆனால், இங்கு 70-லிருந்து 80 சத விகிதம் சிசேரியன் நடக்குது. அதை உடைப்ப தற்கு இயற்கை பிரசவம் குறித்த சரியான புரிந்துணர்வு தேவை. ஆகவே, கர்ப்பமான நாள் முதலா என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யுறேன், என்னென்ன உணவு சாப்பிடுறேன்னு வீடியோ மூலமா சொன்னா நல்லா இருக்குமேன்னு தோணுச்சு. என் கணவர்கிட்ட சொன்னேன். நல்ல ஐடியான்னு அவரும் உடனே சம்மதிச்சுட்டார். அதன் பிறகுதான், என்னுடைய கர்ப்ப காலம் பத்தின வீடியோக்களை வெளியிட ஆரம்பிச்சேன்” தன் மூன்று மாத குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே பேசுகிறார் பாரதி...

“ஒருசில வீடியோக்களுக்குப் பிறகு, ‘மேடம் உங்களோட வீடியோ ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு. இந்த உடற்பயிற்சியெல்லாம் செய்யலாம்... இதெல்லாம் சாப்பிடலாம்னு உங்க வீடியோவைப் பார்த்துதான் தெரிஞ்சு கிட்டேன். நீங்க இவ்வளவு எனர்ஜியா இருக்கிறதைப் பார்த்த பிறகு, எனக்கு இருந்த பயமே போச்சு’ன்னு... நிறைய கர்ப்பிணிகள் கால் பண்ணாங்க. கொண்டாட்டமா அனுபவிக்க வேண்டிய கர்ப்ப காலத்தை நம்ம பொண்ணுங்க எந்தளவுக்கு பயத்தோடு கடக்குறாங்கன்னு அப்பதான் புரிஞ்சது. வெறும் ஆலோசனை மட்டும் சொல்லாம, உடற்பயிற்சி செய்ய முடியாத நேரத்துல ஸ்ட்ரெச் பண்ணிவிடுறது; வாக்கிங் கூட்டிட்டுப் போறதுன்னு எனக்கு என் கணவர் செய்யுற சப்போர்ட்டையும் வீடியோவா வெளியிட்டேன். காரணம், மனைவியோட கர்ப்ப காலத்துல கணவன் எப்படி நடந்துக்கணும்னே பல பேருக்குத் தெரியலை. நான் இன்னிக்கு நினைச்சபடி இயற்கை முறையில எந்த மருந்தும் இல்லாம ஒரு குழந்தையைப் பிரசவிச்சிருக்கேன்னா அதுல என் கணவரோட பங்கு நிறைய இருக்கு.

 குழந்தை பிறந்ததும்...
குழந்தை பிறந்ததும்...

ஏதோ ஆபரேஷன் தியேட்டருக்குள்ள அழைச்சுட்டுப் போறாங்க குழந்தை வந்துருதுன்னு சிலர் நினைச்சுடுறாங்க. பிரசவத்தின்போது மனைவி அனுபவிக்கிற வலியை கணவன்கூட இருந்து பார்க்கணும். அப்படிப் பார்த்துட்டாங்கன்னா யாரும் தன் மனைவியை மரியாதை இல்லாம நடத்த மாட்டாங்க.

என் கணவருக்கு குழந்தைங்கன்னா ரொம்ப இஷ்டம். பிரசவத்தின்போது என் கூடவேதான் இருந்தார். நான் அனுபவிக்கிற வலியை உணர்ந்து துடிச்சுப் போயிட்டார். குழந்தை பிறந்ததும் அது ஆணா, பொண்ணான்னுகூட அவர் பார்க்கல... என்னைப் பார்த்து ‘நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்ட நமக்கு ஒரு குழந்தையே போதும்’னார். அதன் பிறகு, அவரே குழந்தையின் தொப்புள் கொடியைக் கட் பண்ணினார். அந்த நொடி வார்த்தையால விவரிக்க முடியாதது. அந்த வீடியோவை யெல்லாம் அடுத்தடுத்து வெளியிடுவோம். நாளைக்கு இந்த வீடியோவைப் பார்க்குற என் பையனுக்கு என் மேல மட்டுமல்ல அவனோட வருங்கால மனைவி மேலயும் மரியாதை கூடும்” என்கிறார் தீர்க்கமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism