Published:Updated:

ஃபிரிட்ஜில் வைத்த காபித்தூள் ஆபத்தாக மாறியதேன்? வாட்ஸ்அப் தகவலும் மருத்துவ விளக்கமும்

Fridge (Representational Image)
News
Fridge (Representational Image) ( Photo by nrd on Unsplash )

தற்போது ஃபுட் பாய்சன் பிரச்னையால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அதனால் முடிந்தவரை வீட்டு உணவுகளை மட்டும் சாப்பிடுவது நல்லது. ஹோட்டல் உணவுகள், அசைவ உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

காபியில் தொடங்கி சாப்பாடு வரை அனைத்துமே இன்ஸ்டன்ட் ஆகிவிட்டது. எதையும் நேரமெடுத்துச் செய்யவோ சாப்பிடவோ யாருக்கும் பொறுமையோ நேரமோ இருப்பதில்லை. இன்ஸ்டன்ட் காலத்தில் அதுதொடர்பான ஆபத்துகளும் பெருகிக்கொண்டேதான் இருக்கின்றன. சமீபத்தில் வாட்ஸ்அப்பில் ஓர் ஆடியோ அதிகம் ஃபார்வேர்டு செய்யப்பட்டு வருகிறது. அதில் பேசும் நபர், தான் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்த ஒரு நபரின் பதிவு பற்றி விவரிக்கிறார்.

பதிவை இட்டிருந்த நபருக்கு இரண்டு குழந்தைகள். ஒருநாள் மாலை அவர் வீடு திரும்பியபோது வீட்டில் கதவு திறந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பவில்லை. மனைவியை வீடு முழுக்கத் தேடுகிறார்... காணவில்லை.

Food poison
Food poison

கடைசியில் பாத்ரூமில் அவர் நினைவிழந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். உடனடியாக அருகிலிருந்த மருத்துவரிடம் மனைவியைக் கொண்டு செல்கிறார். அங்கிருந்த மருத்தவர் இது தீவிர ஃபுட் பாய்சனிங் பிரச்னை. நிலைமை மோசமாக இருப்பதால் வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்கிறார். அப்படியே வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. மருத்துவரோ இது எப்படி நேர்ந்தது என்பது தெரியவில்லை. ஆனால், நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உடனடியாக எந்தவித உத்தரவாதமும் தர முடியாது. ஓரிரு தினங்கள் பார்த்துவிட்டுதான் எதையும் சொல்ல முடியும் என்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தீவிர சிகிச்சைக்குப் பிறகு மனைவிக்கு நினைவு திரும்பி, சிகிச்சை முடிந்து, குணமாகி வீடு திரும்புகிறார். பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக மனைவியிடம் விசாரித்தபோது கடைசியாக இன்ஸ்டன்ட் காபி குடித்ததாக மனைவி கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து வீட்டு குப்பைத்தொட்டியில் அந்த காபி பவுடர் பாக்கெட்டைத் தேடி கண்டுபிடித்துப் பார்த்தால் அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி இருப்பது தெரியவந்துள்ளது" என்பதாக நீள்கிறது அந்த ஆடியோ.

Preserved food
Preserved food

பொதுவாகவே ஃபிரிட்ஜில் வைக்கப்படும் பொருள்கள் கெட்டுப் போகாது என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கை. காய்கறி, பழங்கள் அல்லது சமைத்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்து கெட்டுப்போய்விட்டால் அதைக் குப்பையில் போட்டுவிடுவோம். இதுபோன்று பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட பொருள்கள் என்றால் ஆண்டுக்கணக்காக உள்ளேயே வைத்திருப்போம். இதுபோன்ற உணவுகளைச் சாப்பிடுவது தீவிர உடல்நலப் பிரச்னையில் கொண்டு போய்விடலாம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபற்றி விளக்குகிறார் அவசரகால சிகிச்சை மருத்துவர் சாய் சுரேந்தர்.

``இன்ஸ்டன்ட் வாழ்கையை நோக்கி ஓட ஆரம்பித்த பிறகு, நம் பாரம்பர்ய வாழ்க்கை முறையை மறந்துகொண்டு வருகிறோம். அதில் நமது உணவுமுறையும் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது.

முன்பெல்லாம் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகள் வயதானவர்களுக்குத்தான் வந்தன. ஆனால், இன்று 20-களில் உள்ளவர்களுக்கே வாழ்க்கைமுறை சார்ந்த இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், பெண் பிள்ளைகள் சீக்கிரம் பூப்பெய்துவது, ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவது, புற்றுநோய் போன்ற பல பிரச்னைகளுக்கு உணவுமுறைதான் காரணமாக அமைகிறது.

obesity
obesity

வேலைப்பளுவைக் குறைக்கும் என்பதற்காகவோ பசித்த உடன் சாப்பிட வேண்டும் என்பதற்காகவோ பல உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாகிவிட்டது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்குவதையும் அவற்றை ஃபிரிட்ஜில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். அவற்றில் கலந்திருக்கும் ரசாயனங்கள் உணவுகெடாமல் பாதுகாக்கும், ஆனால், அவற்றைச் சாப்பிடுபவர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

நாம் வாங்கும் பொருள்களில் உற்பத்தி நாள் (Manufacturing date) உள்ளிட்ட சில விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் உண்மையாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. சில பொருள்களில் பொய்யான தேதிகளும் குறிப்பிட்டு இருக்கலாம். அதனால் முடிந்தவரை பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. வீட்டில் சமைத்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம். ஆனாலும், ஓரிரு நாள்களுக்கு மேல் வைத்துப் பயன்படுத்த வேண்டாம்.

Emergency consultant Dr.Sai Surendar
Emergency consultant Dr.Sai Surendar

இன்ஸ்டன்ட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட பொருள்கள், பாக்கெட் உணவுகளில் `Store in cool place' என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பார்த்தவுடன் அந்தப் பொருள்களை ஃபிரிட்ஜில் வைத்து விடுகிறோம். அதுபோன்ற பொருள்களை கிச்சனிலோ வீட்டில் ஏதாவது ஓர் அறையிலோ சற்று குளிர்ச்சியான இடத்தில் வைத்தாலே போதுமானது. அப்படி வைக்கும்போது அதில் சேர்க்கப்பட்டிருக்கும் ரசாயனத்தின் தன்மை சிறிது நாள்களில் காற்றோடு போய்விடும்.

அவற்றை ஃபிரிட்ஜில் வைக்கும்போது வைத்ததையே மறந்து போய்விடுவோம். எதேச்சையாகப் பார்க்கும்போது அல்லது தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்துகிறோம். ஃபிரிட்ஜில் நீண்டநாள்கள் வைப்பதால் அதிலிருக்கும் ரசாயானத் தன்மையும் அதிலேயே தங்கிவிடும். கடைகளில் வாங்கும் சாஸ், மயோனைஸ், ஜாம் போன்றவை கெட்டுப் போனாலும் அவற்றின் சுவை மாறாது. அப்படியிருக்கும்போது அவற்றை உட்கொண்டால் ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

காலாவதியான உணவைச் சாப்பிடும்போது வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற ஜீரண மண்டலம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம். மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் பிரச்னையைச் சரிசெய்துவிடலாம். அதுவே அந்த நபருக்கு ஒவ்வாமை, குறைந்த ரத்த அழுத்தம் இருந்தால் மயக்கம் ஏற்படலாம்.

Food (Representational Image)
Food (Representational Image)

தற்போது மழை, குளிர் எனப் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனுடன் ஃபுட் பாய்சன் பாதிக்கவும் வாய்ப்புள்ளது. தற்போது ஃபுட் பாய்சன் பிரச்னையால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அதனால் முடிந்தவரை வீட்டு உணவுகளை மட்டும் சாப்பிடுவது நல்லது. ஹோட்டல் உணவுகள், அசைவ உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சூடான உணவுகளையும் கொதிக்க வைத்த தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டில் பருகினாலே போதுமானது" என்றார்.