Published:Updated:

போதைக்கு அடிமையானால் தூக்க மாத்திரைகள் கொடுப்பதுதான் சிகிச்சையா? - நான் அடிமை இல்லை - 24

Tablets (Representational Image)
News
Tablets (Representational Image) ( Pixabay )

``ஒருவர் போதைக்கு அடிமையான ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவதற்கு அழைத்து வந்தால் சீக்கிரம் குணமடைந்து போதைப் பழக்கத்திலிருந்து மீண்டுவிடுவார். நீண்ட நாள் மருத்துவமனையில் தங்கியிருக்கத் தேவையில்லை. மாத்திரை சாப்பிடும் அளவும் குறைவாகவே இருக்கும்."

போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களுக்கு முதலில் அளிக்கப்படும் டீடாக்சிஃபிகேஷன் சிகிச்சை பற்றியும் அடுத்து கொடுக்கப்படும் டீஅடிக்ஷன் சிகிச்சை பற்றியும் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அரசு மனநல மருத்துவமனைகளில் போதை அடிமைகளுக்கான சிகிச்சைகள் எப்படியிருக்கும் என்பதை விளக்குகிறார், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் மனநல மருத்துவரும் உதவிப் பேராசிரியருமான தேவி.

தேவி
தேவி

``போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது சிரமம். காரணம், போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என்பது குடும்பத்தினர், நண்பர்கள், பள்ளி, கல்லூரியில் இருப்பவர்களுக்குத் தெரிய வராது. தூக்கமும், பிறருடன் பேசுவதும் குறையும், சில நேரங்களில் அதிகமாகக் கோபப்படுவது போன்ற மிகச்சிறிய மாற்றங்களே தெரியும். அப்படி சிறிய மாறுதல்கள் தென்படுவதாகச் சந்தேகம் வந்தால் உடனே மருத்துவரை அணுகித் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது. பிறரிடம் பகிர்ந்துகொள்ளாததைக்கூட பல நேரங்களில் மருத்துவர்களிடம் பகிர்ந்துகொள்கின்றனர். மருத்துவரிடம் அழைத்து வரும்போது இப்படிப்பட்டவர்களுக்கு மனம்விட்டுப் பேசுவதற்கு ஒரு வாய்ப்பை அமைத்துக்கொடுத்தது போலவும் இருக்கும்.

ஆண்கள் Vs பெண்கள்

போதைக்கு அடிமையான ஆண்கள், பெண்கள் இருவருக்கும் சிகிச்சையில் மாறுபாடுகள் இருக்காது. ஆனால், அவர்களைக் கையாள்வதில் சில மாறுதல் தேவைப்படும். பெண்கள் எனும் பட்சத்தில் அவர்களை மருத்துவரிடமோ மருத்துவமனைக்கோ அழைத்துச் செல்வதற்கே பெற்றோர் தயங்குகின்றனர். அப்படி மருத்துவரிடம் அழைத்து வந்தாலும் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதித்து அவர்களுக்கு சிகிச்சையைத் தொடர்வதில் சிக்கல் இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்படி சிகிச்சை பெறுவது வெளியில் தெரிந்தால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்று அச்சத்தால் வெகு சீக்கிரம் சிகிச்சையை முடித்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்புவார்கள். அதற்குப் பிறகு கண்காணிப்புக்காக அடிக்கடி மருத்துவரிடம் அழைத்து வருவதிலும் தயக்கம் நீடிக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒருவர் போதைக்கு அடிமையான ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவதற்கு அழைத்து வந்தால் சீக்கிரம் குணமடைந்து போதைப்பழக்கத்திலிருந்து மீண்டுவிடுவார். நீண்ட நாள் மருத்துவமனையில் தங்கியிருக்கத் தேவையில்லை. மாத்திரை சாப்பிடும் அளவும் குறைவாகவே இருக்கும். உடல்நிலையிலும் மனநிலையிலும் ஏற்படும் பாதிப்பும் குறையும்.

குடிப்பழக்கம், கஞ்சா, தூக்க மாத்திரைகள், போதை ஊசிகள், ஹெராயின் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்கள் இங்கே சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்களுக்கான அடிப்படை சிகிச்சைகள் ஒன்றாக இருந்தாலும், அந்தந்தப் போதைப்பொருள் சார்ந்து சிகிச்சையில் சிறிய மாறுதல்கள் இருக்கும்.

Drug Addiction (Representational Image)
Drug Addiction (Representational Image)
Photo by Ramille Soares on Unsplash

போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவதிலிருந்து தொடங்குகிறது. ஏனென்றால், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவதே சவாலாக இருக்கும். அவர்களை அழைத்து வருவதற்கு அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். அவர்களுடன் இவர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.

அப்படி மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததும் அவர்களுடன் பேசி, அவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்வோம். சிலர், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக்கூட உணர முடியாத நிலையில் இருப்பார்கள். அவர்களின் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட அடிப்படை பரிசோதனைகளுடன் கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை அறிந்துகொள்வதற்கான ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த பரிசோதனைகளின் அடிப்படையில் மருந்துகள் கொடுக்க ஆரம்பிப்போம். தூக்கமின்மை, டென்ஷன், உடல்வலி போன்ற காரணங்களுக்காகத்தான் இந்தப் பழக்கத்தைத் தொடர்வதாக பெரும்பாலானவர்கள் தெரிவிக்கின்றனர். இது ஓரளவு உண்மையும்கூட. இதனால் இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வை அளிப்பதற்காக மருந்துகள் கொடுப்போம். இது ஆரம்ப நிலையிலான சிகிச்சை.

தூக்க மாத்திரைகள் மட்டுமே சிகிச்சையா?

போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சையாக தூக்க மாத்திரைகள் மட்டுமே கொடுக்கப்படும் என்பது தவறான கருத்து. போதைக்கு அடிமையானவர்கள் பெரும்பாலும் தூக்கம் வராமல் சிரமப்படுவார்கள். தூக்கத்தை முறைப்படுத்துவதற்காக ஆரம்ப நிலை சிகிச்சையில் தூக்க மாத்திரைகள் கொடுக்கப்படும். தூங்கும் பழக்கம் முறைப்படுத்தப் பட்டுவிட்டால் அதற்கான மாத்திரைக்கு அவசியமில்லாமல் போய்விடும் என்பதால் அதை நிறுத்திவிடுவோம்.

Tablets (Representational Image)
Tablets (Representational Image)
Image by Michal Jarmoluk from Pixabay

ஆரம்பத்தில் போதைப்பொருள்களைப் பயன்படுத்தும்போது உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, மிகவும் வேகமாகச் செயல்படுவது, தைரியமாகச் செயல்படுவது போன்ற செயல்பாடுகள் இருக்கும். நாள்கள் செல்லச் செல்ல போதைப் பொருள்களைப் பயன்படுத்தியதும் தூங்க ஆரம்பிப்பார்கள். ரத்தத்தில் போதைப்பொருளின் அளவு குறையும்போது தூக்கம் போய்விடும். நரம்புகள் தூண்டப்பட்டு கெட்ட கனவுகள் வருவது, தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதைக் கையாள முடியாமல் மீண்டும் போதைப்பொருளை எடுப்பார்கள். அதனால்தான் மீண்டும் மீண்டும் போதைப்பொருளை நாடுவார்கள். தூக்கமின்மை அதிக நாள் நீடிக்கும்போது காதில் குரல் கேட்பது, கண்ணில் உருவம் தெரிவது, பிறர் தன்னைக் கொலை செய்ய வருவது போன்ற எண்ணங்கள் ஏற்படும். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு தூக்க மருந்துகள் உதவும்" என்றார்.

போதை மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் தாக்கப்படுவார்கள் என்பது உண்மையா? சிகிச்சையின் அடுத்தடுத்த நிலைகள் என்ன... அடுத்த அத்தியாயத்தில்...