Published:Updated:

புறா எச்சம், பராமரிக்கப்படாத ஏ.சி, புகை; நுரையீரலை தற்காத்துக்கொள்ள மருத்துவ ஆலோசனைகள்!

நுரையீரல்

புறாக்கள் போன்ற பறவைகளின் எச்சத்தால் மாசடைந்த காற்றை தொடர்ந்து சுவாசிப்பது, சரியாக பராமரிக்கப்படாத ஏர் கண்டிஷனர்களில் இருந்து வரும் மெல்லிய தூசியை சுவாசிப்பது போன்றவற்றால் தொடர்ந்து நுரையீரலில் ஒவ்வாமை ஏற்படும். காய்ச்சல், இருமல், உடல் வலி, மூட்டு வலி, மூச்சுத்திணறல் ஏற்படும்.

புறா எச்சம், பராமரிக்கப்படாத ஏ.சி, புகை; நுரையீரலை தற்காத்துக்கொள்ள மருத்துவ ஆலோசனைகள்!

புறாக்கள் போன்ற பறவைகளின் எச்சத்தால் மாசடைந்த காற்றை தொடர்ந்து சுவாசிப்பது, சரியாக பராமரிக்கப்படாத ஏர் கண்டிஷனர்களில் இருந்து வரும் மெல்லிய தூசியை சுவாசிப்பது போன்றவற்றால் தொடர்ந்து நுரையீரலில் ஒவ்வாமை ஏற்படும். காய்ச்சல், இருமல், உடல் வலி, மூட்டு வலி, மூச்சுத்திணறல் ஏற்படும்.

Published:Updated:
நுரையீரல்

நடிகை மீனாவின் கணவர், நுரையீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவரது இழப்பு துரதிர்ஷ்டவசமானது. அவர் சோகத்தை நாம் பகிர்ந்துகொள்வோம். இந்நேரத்தில், நுரையீரல் அழற்சி நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

 ஏ.சி
ஏ.சி

ஹைப்பர்சென்சிடிவிட்டி நியூமோனைட்டிஸ்(Hypersensitivity Pneumonitis) எனும் நோய், நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் ஏற்படும் அதிகப்படியான ஒவ்வாமையால் நிகழ்வது. புறாக்கள் போன்ற பறவைகளின் எச்சத்தால் மாசடைந்த காற்றை தொடர்ந்து சுவாசிப்பது, சரியாக பராமரிக்கப்படாத ஏர் கண்டிஷனர்களில் இருந்து வரும் மெல்லிய தூசியை சுவாசிப்பது போன்றவற்றால் தொடர்ந்து நுரையீரலில் ஒவ்வாமை ஏற்படும்.
இத்தகைய ஒவ்வாமை தரும் விசயங்களை சுவாசிக்கும் பொழுது காய்ச்சல், இருமல், உடல் வலி, மூட்டு வலி, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும். ஒவ்வாமை தரும் இந்தப் பொருளை சுவாசிப்பதை நிறுத்திவிட்டால் இந்த அறிகுறிகள் மறைந்து விடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிலருக்கு, ஒவ்வாமை ஏற்படுத்தும் தூசியையோ பறவைகளின் எச்சத்தையோ மிகக் குறைவான அளவில் தொடர்ச்சியாக சுவாசிக்கும் சூழ்நிலை இருக்கும். இவர்களுக்கு நீடித்த நுரையீரல் அழற்சி (Chronic Hypersensitivity Pneumonitis) நோய் உருவாகிவிடலாம். இத்தகைய நிலையை அடைந்து, பின்னர் நுரையீரலில் நாளடைவில் அழற்சி நிலை முற்றி நுரையீரல் சுருக்கம் காண ஆரம்பித்து விடும். இதை Lung Fibrosis என்கிறோம்.


Lung fibrosis நிலையை அடைந்தவர்களுக்கு சுவாசப்பாதை சுருங்கி எப்போதும் இருமிக் கொண்டு இருப்பார்கள். போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறல் ஏற்படும் நிலையில் இருப்பார்கள். இத்தகையோருக்கு ஒவ்வாமையைக் கட்டுப்படுத்தும் ஸ்டீராய்டு மருந்துகள், ஸ்பிரே மற்றும் சுவாசப்பாதையை விரிவடையச் செய்யும் மருந்துகள் தொடர்ந்து தேவைப்படும். ஒவ்வாமையை ஏற்படுத்தும் விசயங்களை சுவாசிக்காமல் தவிர்ப்பது பிரச்னையைக் கட்டுப்படுத்த உதவும். ஒருவேளை நுரையீரல் தொடர்ந்து அழற்சிக்குள்ளானால், தீவிர சுருக்க நிலைக்கு உள்ளாகி, மாற்று நுரையீரல் தேவைப்படும் நிலைக்குச் செல்லக்கூடும்.

Cough (Representational Image)
Cough (Representational Image)

அடங்காத இருமல், மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள், நுரையீரல் சிறப்பு மருத்துவ நிபுணரை அணுகி அவரது பரிந்துரையின்படி நெஞ்சுப்பகுதி எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், நுரையீரல் இயங்கு பரிசோதனை போன்றவற்றை செய்து, இந்த நோயை அடையாளம் காணலாம். முறையான சிகிச்சையைப் பெற்று நோயைக் கட்டுக்குள் வைக்கலாம்.

நோய் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள சில வழிகள்...

1. ஒவ்வாமையை ஏற்படுத்தும் விசயம் எதுவாயினும் அதை சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும்.
2. பறவைகளின் எச்சங்களை கையாளும்போது முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது.
3. புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டால் உடனடியாக அதை கைவிட வேண்டும்

டாக்டர் ஃபரூக் அப்துல்லா
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

4. வீட்டில் இருக்கும் ஏசியை அடிக்கடி சுத்தம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும்.
5. அறிகுறிகள் தோன்றினால் தாமாக சுய மருத்துவம் செய்யாமல் மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை பெற வேண்டும்.