Published:Updated:

ஒமிக்ரான்: `சமூகப்பரவல் ஏற்பட்டதை எப்படி உறுதி செய்கிறார்கள் தெரியுமா?' - விளக்கும் மருத்துவர்

Covid Outbreak ( AP Illustration/Peter Hamlin )

``நம் சுற்றத்தில் நாம் தினமும் சந்திக்கும் ஒரு நபரிடம் இருந்துகூடப் பரவலாம். இதைத்தான் சமூகப் பரவல் என்கிறார்கள். ஒமிக்ரானும் அதே போல பரவியிருப்பதாலேயே `சமூகப் பரவல்' நிலைக்குச் சென்றுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது."

ஒமிக்ரான்: `சமூகப்பரவல் ஏற்பட்டதை எப்படி உறுதி செய்கிறார்கள் தெரியுமா?' - விளக்கும் மருத்துவர்

``நம் சுற்றத்தில் நாம் தினமும் சந்திக்கும் ஒரு நபரிடம் இருந்துகூடப் பரவலாம். இதைத்தான் சமூகப் பரவல் என்கிறார்கள். ஒமிக்ரானும் அதே போல பரவியிருப்பதாலேயே `சமூகப் பரவல்' நிலைக்குச் சென்றுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது."

Published:Updated:
Covid Outbreak ( AP Illustration/Peter Hamlin )

ஒமிக்ரான் தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டது என மத்திய அரசின்கீழ் செயல்படும் இந்திய சார்ஸ் கோவிட்-2 மரபணு ஆராய்ச்சிக்கூட்டமைப்பு INSACOG அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் வைரஸே அந்நியன் போல BA.1, BA.2, BA.3 என்று மூன்று விதமாக உருமாறியுள்ளது. இந்த நிலையில், சமூகப் பரவல் என்றால் என்ன என்று பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் குழந்தைசாமியிடம் கேட்டோம்.

குழந்தைசாமி
குழந்தைசாமி

``யாரிடம் இருந்து யாருக்குப் பரவுகிறது என்பதைக் கண்டறிய முடியாத அளவுக்கு எல்லாருக்கும் நோய் பரவுவதே சமூகப் பரவல் என்கிறோம்.

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குப் பயணிக்கும் பயணிகளாலேயே பரவும் என்பது கிடையாது. எங்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இன்னும் சொல்லப்போனால் நம் நாட்டிலேயே உருமாறி இருக்கலாம்.

நம் சுற்றத்தில் நாம் தினமும் சந்திக்கும் ஒரு நபரிடம் இருந்துகூடப் பரவலாம். இதைத்தான் சமூகப் பரவல் என்கிறார்கள். ஒமிக்ரானும் அதே போல பரவியிருப்பதாலேயே `சமூகப் பரவல்' நிலைக்குச் சென்றுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் முதலில் தாக்குவது தடுப்பூசி செலுத்தாதவர்களையும் கொரோனாவிலிருந்து சிகிச்சை பெற்று குணமாகிய பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளதாவர்களையும்தான். இது தடுப்பூசி செலுத்தாமல் இருக்கும் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் மற்றும் பிற துணை நோய்களைக் கட்டுப்பாட்டில் வைக்காதவர்களையும் அதிகம் பாதிக்கும்" என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``சமூக பரவலாக மாறியிருக்கிறது என்பதை எப்படி உறுதி செய்கிறார்கள்" என்ற கேள்விக்கு, `` `ஜீனோம் சீக்வென்சிங்' என்று அழைக்கக்கூடிய வைரஸின் மரபணு வரிசையைக் கண்டறிவதன் மூலம் கண்டறியப்படுகிறது. கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் மாதிரிகளை ஆய்வு செய்து கண்டறியக்கூடிய பரிசோதனை இது. ரேண்டமாக 2,000 பேர் மாதிரிகளை ஆய்வு செய்தாலே இதனைக் கண்டறிந்துவிடலாம். கொரோனா பாதித்த எல்லாருக்கும் இந்தப் பரிசோதனை அவசியம் இல்லை.

People queue up for COVID-19 vaccine
People queue up for COVID-19 vaccine
AP Photo / Rafiq Maqbool

ஒமிக்ரான் உருமாற்றத்தால் ஏற்பட்டுள்ள சமூகப் பரவல் மற்றும் மூன்றாம் அலை முதல் இரண்டு அலைகளைப்போல் இல்லாமல் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் என்பதை உறுதியாக கூறலாம். எனவே, முழு ஊரடங்குக்கு அவசியம் இருக்காது. தடுப்பூசி, தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகழுவுவது ஆகியவற்றைப் பின்பற்றினாலே இந்த அலையை எளிதில் கடந்துவிடலாம்" என்றார்.