Published:Updated:

மருந்தகங்கள் முதல் வாட்ஸ்அப் க்ரூப் வரை; போதை வலையில் இளைஞர்கள்; மீட்பது எப்படி? நான் அடிமை இல்லை 7

Drugs (Representational Image) ( Photo by MART PRODUCTION from Pexels )

மதுவுக்கு அடிமையாவது போன்றதுதான் போதைப்பொருள் அல்லது போதை தரும் மாத்திரைகளுக்கு அடிமையாவதும். எப்போதும் அந்தப் போதையின் பரவச நிலையிலேயே இருக்க விரும்புவார்கள்.

மருந்தகங்கள் முதல் வாட்ஸ்அப் க்ரூப் வரை; போதை வலையில் இளைஞர்கள்; மீட்பது எப்படி? நான் அடிமை இல்லை 7

மதுவுக்கு அடிமையாவது போன்றதுதான் போதைப்பொருள் அல்லது போதை தரும் மாத்திரைகளுக்கு அடிமையாவதும். எப்போதும் அந்தப் போதையின் பரவச நிலையிலேயே இருக்க விரும்புவார்கள்.

Published:Updated:
Drugs (Representational Image) ( Photo by MART PRODUCTION from Pexels )

எவையெல்லாம் போதையைத் தரும் வஸ்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன எனக் கடந்த வாரங்களில் பார்த்தோம்.

அவை எப்படிக் கிடைக்கின்றன, எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்கிற திடுக்கிடும் தகவல்களைப் பகிர்கிறார் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்.

``வலி நிவாரண மருந்துகள் உபயோகிப்பவர்களுக்கு அதுவே ஒரு கட்டத்தில் போதையாக மாறும் ஆபத்தை அதிகம் பார்க்கிறோம். சிலருக்கு சின்ன வலியைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாது. உதாரணத்துக்கு சிறிது தூரம் நடந்தாலே கால் வலிக்கிறது என உடனே அதற்கு வலி நிவாரணி எடுத்துக்கொள்வார்கள். ஒரு கட்டத்தில் அந்த உணர்வு நன்றாக இருப்பதாக உணர ஆரம்பித்து தேவையே இல்லாமல் வலி நிவாரணிகள் எடுப்பதைத் தொடர்வார்கள். அதற்கு அடிமையும் ஆவார்கள்.

Addiction (Representational Image)
Addiction (Representational Image)
Image by Daniel Reche from Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுவுக்கு அடிமையாவது போன்றதுதான் போதைப்பொருள் அல்லது போதை தரும் மாத்திரைகளுக்கு அடிமையாவதும். எப்போதும் அந்த போதையின் பரவச நிலையிலேயே இருக்க விரும்புவார்கள். அதிலிருந்து கீழே வர விரும்ப மாட்டார்கள். அப்படி இயல்புக்கு வந்தால் எரிச்சலுணர்வு, கைகால் நடுக்கம், வலிப்பு வருவது போன்றெல்லாம் உணர்வார்கள்.

தமிழகத்தில் மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வலி நிவாரணிகளை மருந்துக் கடைக்காரர்கள் கொடுப்பதில்லை. வலி நிவாரணிகள் உள்ளிட்ட பிற போதை தரும் மாத்திரைகளை வாங்குவதற்கான மருத்துவர் பரிந்துரைச் சீட்டு 15 நாள்களுக்குள் பெறப்பட்டதாக இருக்க வேண்டும். 15 நாள்களுக்குப் பிந்தைய தேதியிட்ட பரிந்துரைச் சீட்டுகளுக்கு அந்த மருந்துகளைக் கொடுக்கக் கூடாது. ஆனால், இதிலும் துஷ்பிரயோகம் நடக்கிறது. மருந்துக்கடைகளில் பணியாற்றுபவர்களிடம் கேட்டு அல்லது தங்களுக்குப் பழக்கமான மருந்துக்கடைகளில் ஒரு மாத்திரை, இரண்டு மாத்திரைகள் என வாங்கிக்கொள்கிறார்கள். இதேபோல சில மருந்துக்கடைகளில் ஏறி இறங்கி வாங்கும்போது மொத்தமாக 10, 20 மாத்திரைகளை எளிதாக வாங்கி விடுகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த 5 ஆண்டுகளாகத் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. ஆனாலும், மொத்த வியாபாரிகளிடம் வேலை பார்க்கும் தற்காலிக ஊழியர்கள் இதுபோன்ற மருந்துகளை வெளியே எடுத்து விற்பனை செய்கிறார்கள். மருந்து தயாரிப்புத் துறையில் இதுபோன்ற போதை தரும் மாத்திரைகளின் ஒவ்வோர் அட்டையிலும் ரேடியோ ஃப்ரீக்வன்சி டேக்-ஐ (Radio-frequency Tag) கட்டினால் அந்த மாத்திரை எங்கே போகிறது என்று எளிதாகக் கண்டறிய முடியும்.

புற்றுநோய் மருந்து

மார்பின் என்ற மருந்து மரணத்தின் விளிம்பிலுள்ள புற்றுநோயாளிகளுக்கு வலி நிவாரணத்துக்காகக் கொடுக்கப்படுவது. அது புற்றுநோயாளிகளுக்கு மட்டுமே கிடைக்கும். அந்த மருந்து கிடைப்பது மிகவும் சிரமம். ஆட்சியர் அனுமதியளித்தால் மட்டுமே அதை வாங்க முடியும். இரண்டு பரிந்துரைச் சீட்டுகள் இருக்கும். ஒன்று நோயாளியிடமும் மற்றொன்று மருந்துக் கடைகளிலும் இருக்கும். நோயாளிகள் மருந்துக் கடைகளில் பரிந்துரைச் சீட்டைக் கொடுத்து வாங்கிக்கொள்வார்கள். ஒவ்வோர் ஆண்டும் அதுபற்றி ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்பதால் புற்றுநோயாளிகளுக்கு மட்டுமே இது வழங்கப்படும். புற்றுநோய் சிகிச்சையில் இருப்போருக்கு அந்த வலி மரணவேதனையைத் தரும் என்பதால் அதிலிருந்து அவர்களைத் தற்காலிகமாக மீட்டு, இரவில் நிம்மதியாக உறங்கச் செய்ய குறிப்பிட்ட இந்த வலி நிவாரணி பயன்படும்.

Drug Addiction (Representational Image)
Drug Addiction (Representational Image)
Photo by Mishal Ibrahim on Unsplash

ஒரு வீட்டில் புற்றுநோயாளி இருந்து அவர் இறந்துவிட்டார் என்றால் அவருடைய குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்குத் தகவல் தெரிவித்து மீதமுள்ள மருந்தை எப்படி டிஸ்போஸ் செய்வது என்று பார்க்க வேண்டும். இல்லையென்றால் அந்த வீட்டிலிருக்கும் டீன்ஏஜ் பிள்ளைகள் யாரேனும் அந்த மாத்திரையைப் பயன்படுத்திப் பார்க்கக்கூடும். புற்றுநோயாளிகளுக்கான வலி நிவாரணிகள் தரும் அந்த வலியற்ற நிலையை அறிந்த பலர், அந்த மருந்துகளை துஷ்பிரயோகம் செய்வது நடக்கிறது.

பெத்திடின் என்ற மருந்து அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகான வலி, பிரசவத்தின்போது ஏற்படும் வலி மற்றும் மயக்க மருந்து கொடுக்கும்போது பயன்படுத்தப்படுகிறது. வலி நிவாரணி என்பதால் இந்த மருந்துக்கும் போதை தரும் தன்மை உண்டு. இந்த மருந்து மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டர்களில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அதை எடுத்து வெளியே போதைக்காக விற்பனை செய்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருமலுக்குக் கொடுக்கப்படும் கொடின் (codeine), மனச்சோர்வுக்கும் தூக்கமின்மைக்கும் கொடுக்கப்படும் சில மருந்துகள் போன்றவற்றைப் பயன்படுத்திவிட்டு மீதமுள்ள மாத்திரைகளை அப்படியே தூக்கிப் போடக் கூடாது. அந்த மாத்திரைகளை யாரும் பயன்படுத்தாத வகையில் உடைத்துப்போட வேண்டும். அப்படியே தூக்கிப்போட்டால் அல்லது வைத்திருந்தால் அதை வீட்டிலுள்ள இளம்வயதினர் போதைக்காகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. பெரும்பாலும் 15 முதல் 25 வயதுக்குள்ளவர்கள்தான் இதுபோன்ற பொருளுக்கு அடிமையாகின்றனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா, கொகைன் உள்ளிட்ட போதை மருந்துகள் சர்வசாதாரணமாகப் புழங்குகின்றன. சிறிய டப்பாக்களில் அடைக்கப்பட்ட கஞ்சா, பள்ளி, கல்லூரிகளின் அருகிலுள்ள பெட்டிக்கடைகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது. சாக்லெட், பிஸ்கட்டுகளோடு சேர்த்து வைத்தே விற்பனை செய்கிறார்கள். அந்தக் கடைகளில் வழக்கமாக வாங்குபவர்களுக்கு மட்டுமே கொடுப்பார்கள். புதிதாக யாரும் சென்றால் கொடுக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன்... பேருந்து நிலையத்தில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்பவர்களிடம்கூட மிகச் சுலபமாகப் போதை மருந்துகள் கிடைக்கின்றன. பல இடங்களில் காவல்துறைக்கும் தெரிந்தே இத்தகைய போதை விற்பனை நடைபெறுகிறது.

Alcohol Addiction
Alcohol Addiction
Representational image

படிப்பு ஏறவில்லை என மட்டம் தட்டப்படும் பிள்ளைகள், ஐ.டி வேலையில் மன அழுத்தத்தை எதிர்கொள்பவர்கள், வாழ்க்கையில் தோல்வியை ஏற்றுக்கொள்ளவே முடியாதவர்கள் எனப் பலரும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். ஆண்கள் சற்று எளிதாக இந்தப் பழக்கத்திலிருந்து வெளியேறிவிட முடியும். ஹார்மோன்கள் காரணமாகப் பெண்களால் அவ்வளவு எளிதாக இந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வர முடியாது.

எனவே, பெண்கள் இது போன்ற போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகாமல் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்பப் பிரச்னை, வேலையின்மை, வேலையிடத்தில் பிரச்னை, சம்பளக் குறைவு, காதல் தோல்வி என எந்தப் பிரச்னையானாலும் அதற்குத் தீர்வு போதைப் பழக்கமல்ல. அந்தப் பிரச்னைக்கான காரணத்தைக் கண்டுபிடித்து நிரந்தரமாக வெளியே வருவதற்கு பதில் தற்காலிகத் தீர்வாக, தன்னிலை மறக்கச் செய்யும் போதைக்கு அடிமையாகிறார்கள்.
இன்று குடும்பங்களில் உரையாடல் என்பதே காணாமல் போய்விட்டது.

குறைந்தபட்சம் ஒருவேளையாவது வீட்டிலுள்ள எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிடும்போது யாரும் போன் உபயோகிக்கக் கூடாது. பிரச்னைகளைப் பகிரும்போது அந்த உரையாடலின் மூலம் தீர்வுகள் கிடைக்கும். ஆனால், யாரும் இதைச் செய்யாமல் நண்பர்களுடன், முன்பின் அறிமுகமில்லாத சமூக ஊடக நண்பர்களுடன் வாட்ஸ்அப் க்ரூப் ஆரம்பித்து நெருக்கமாகிறார்கள். அவர்களிடம் பிரச்னைகளைப் பகிரும்போது யாரோ ஒருவர் போதைப்பழக்கத்தை அறிமுகப்படுத்துகிறார்.

அதை எங்கிருந்து வாங்குவது, எப்படி உபயோகிப்பது என அனைத்தும் அந்த க்ரூப்பில் பகிரப்படுகின்றன. ஒருமுறை முயற்சி செய்து பார்... என்று தூண்டப்படுகிறார்கள். ஆனால், போதை என்பது ஒருமுறை முயற்சிசெய்து பார்த்ததோடு மறக்கக்கூடிய விஷயமல்ல. அது தொடர்கதையாகிவிடும்'' என்கிற டாக்டர் கிருஷ்ணகுமார், விடலைப்பருவத்தினர் போதைப் பழக்கத்துக்குள் சிக்காமலிருக்க எளிமையான சில ஆலோசனைகளை முன்வைக்கிறார்.

பள்ளிக்கூடங்களில் விளையாட்டுக்கான நேரம் மறுக்கப்படக் கூடாது. விளையாட்டு மைதானங்கள் இல்லாத பள்ளிக்கூடங்கள் அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி மாணவர் களுக்கு உடலுழைப்பு அதிகமாக இருக்க வேண்டும். மாலையில் இரண்டு மணி நேரம் ஓடியாடி விளையாட அனுமதிக்க வேண்டும். இரண்டு மணி நேரம் விளையாடிவிட்டு வந்தால் அந்த மாணவன் வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டான். வீட்டுக்கு வந்து படித்து, சாப்பிட்டுவிட்டு களைப்பாகி தூங்கிவிடுவான். அந்த மாணவனுடைய வழக்கமான வாழ்க்கை என்பது இப்படி மாறிவிடும்.

டாக்டர் கிருஷ்ணகுமார்
டாக்டர் கிருஷ்ணகுமார்

ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் உளவியல் ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு பெண் ஆலோசகர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். வாரம் ஒரு நாளாவது உளவியல் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள் தவறாமல் நடத்தப்பட வேண்டும். குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களைத் தாழ்வு மனப்பான்மையில் தள்ளும்படி பேசாமல், நடத்தாமல் பக்குவமாக அணுக வேண்டும். எதற்குமே லாயக்கில்லை என ஒதுக்கப்படும் மாணவர்கள்தாம் பெரும்பாலும் இத்தகைய பழக்கத்துக்குள் போகிறார்கள்.

படிப்பை முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்காவிட்டால் பெற்றோரும் மற்றவர்களும் கடுமையாக விமர்சிப்பதும் கூடாது. பிள்ளைகளை பிற மாணவர்களுடன் ஒப்பிடக் கூடாது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் போதை மீட்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உளவியல் ஆலோசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

உங்கள் பிள்ளைகள் அடிக்கடி பார்ட்டி செல்கிறார்களா.... அங்கேயும் மறைந்திருக்கலாம் போதை அரக்கன்... அது பற்றி அடுத்த அத்தியாயத்தில்!

- மீள்வோம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism