Published:Updated:

Doctor Vikatan: டெங்கு பாதித்த நபரை எந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

``பிளேட்லெட் எனப்படும் தட்டணுக்கள் குறைவதுதான் டெங்கு பாதிப்புக்கான அறிகுறி என்கிறார்கள். சாதாரணமாக அந்த எண்ணிக்கை எத்தனை இருக்க வேண்டும்... எப்போது எச்சரிக்கையாக வேண்டும்? டெங்கு பாதித்த நபரை எந்த நிலையில் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்?"

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்
தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

``சாதாரணமாக தட்டணுக்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்க வேண்டும். அது ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்தாலே அந்த நபரை மிகவும் ஜாக்கிரதையாக கண்காணிக்க வேண்டும்.

சருமத்தில் தடிப்புகள், வாயில் ரத்தக் கசிவு, சிறுநீர் அல்லது மலம் கழிக்கும்போது ரத்தமும் சேர்ந்து வெளியேறுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.

தீவிர வாந்தி, உடலில் நீர்ச்சத்து வறட்சி போன்றவை ஏற்பட்டால் மருத்துவமனையில் சேர்த்து நரம்பு வழியே குளூக்கோஸ் ஏற்ற வேண்டியிருக்கும்.

Hospital (Representational Image)
Hospital (Representational Image)
Photo: Pixabay
Doctor Vikatan: சோரியாசிஸ் பாதிப்புக்கு அலோபதியா, சித்தாவா; எது சிறந்தது?

டெங்கு பாதித்தவர்களைப் பார்த்துக்கொள்பவர்கள், சம்பந்தப்பட்ட நோயாளிகள் தாராளமாக திரவ உணவுகளை எடுத்துக்கொள்கிறார்களா என்று கவனித்து அதை உறுதிசெய்ய வேண்டும்.

அவர்கள் போதுமான அளவு திரவ உணவு எடுக்க மறுத்தாலோ, வாந்தி எடுத்தாலோ, சருமத்தில் தடிப்புகள் தென்பட்டாலோ, அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்த பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு