Published:Updated:

கோவிட்-19: இரண்டாம் அலை ஏன் இன்னும் ஆபத்தாக இருக்கலாம்? விளக்கும் மருத்துவர்

A health worker
A health worker ( AP Photo/Altaf Qadri )

முதலில் சாதாரணமாக வந்த கோவிட்19 பாதிப்பு, இரண்டாம் அலையில் மிக மோசமான Immune dysregulation மற்றும் மிக தீவிரமான பாதிப்புடன் பாதிக்கப்பட்ட நோயாளியை வெகுவாக நிலைகுலைந்திடச் செய்திடலாம்.

லகளாவிய நிலையில் கோவிட்19 நோயின் தாக்கம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருப்பதை நாம் அறிவோம், அமெரிக்காவில் மீண்டும் தொற்று அதிகரிக்கத் தொடங்கி இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை உயர்கிறது என்பது தற்போதைய நிலை.

Dr. சஃபி M.சுலைமான் .
நீரிழிவு சிறப்பு நிபுணர்
Dr. சஃபி M.சுலைமான் . நீரிழிவு சிறப்பு நிபுணர்

ஆனால், இந்தியாவில் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை கடந்த 10 நாள்களாகக் குறைவாகவே இருந்து வருகிறது. வரப்போகிற மாதங்களில் அடுத்தடுத்து நமக்கு பண்டிகைகள் காத்திருக்கின்றன.

ஊரடங்கு தளர்வுகள் மற்றும் மக்களுடைய சகஜமான வாழ்வியல் மாற்றங்களை எண்ணிப் பார்க்கையில், அடுத்த அலை வருவதற்கு வாய்ப்புண்டு என்றே எண்ணத் தோன்றுகிறது. அப்படி ஒருவேளை தொற்று அடுத்த அலையாக உருவெடுத்தால் இரு விதங்களாக அது மக்களைத் தாக்க வாய்ப்புண்டு.

முதல் வகை

இந்தத் தொற்றானது, தற்போது இருப்பதுபோல, இன்னும் பலரை பாதிப்புக்கு உள்ளாக்கலாம். அதிக தொற்று கொண்டவர்களைக் கண்டறிவதால், மீண்டும் ஓர் ஊரடங்கிற்கான வாய்ப்பும் ஏற்படலாம்.

People wearing masks as a precaution in Jammu
People wearing masks as a precaution in Jammu
AP Photo / Channi Anand

மக்களிடையே தொற்று பற்றிய விழிப்புணர்வு முழுமையாக இல்லாத காரணத்தால், பலர் மிக மோசமான பாதிப்புகளுக்குச் செல்ல நேரலாம், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

முதல் அலையில் தொற்றுக்குள்ளாகி, குணமடைந்தவர்களின் உடல்களில் ஆன்டிபாடிக்கள் இருக்கும். இப்படி ஒருமுறை தொற்றுக்குள்ளானவர் இரண்டாவது அலையில் மறுதொற்றுக்கு உள்ளாகும்போது அவரது உடலில் உருவான ஆன்டிபாடிக்களே அவர்களுக்கு எதிராகச் செயல்பாட வாய்ப்புண்டு. இதைத்தான் `ஆன்டிபாடி டிபெண்டென்ட் என்ஹேன்ஸ்மென்ட்' என்கிறோம். ஒருவேளை இரண்டாவது அலை இன்னும் மோசமாக இருக்குமானால் தொற்றுப் பரவல் மேலும் அதிகரிக்கும். அதாவது, தினசரி பாதிப்பு எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கலாம். அந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளின் திறப்பு சாத்தியமாகாமல் போகலாம். இன்னும் சொல்லப்போனால் இந்தக் கல்வியாண்டில் அவை திறக்கப்படாமலே போகலாம்.

இரண்டாவது வகை

முதல் அலையில் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இந்த கொரோனா தொற்றுக்கான ஆன்டிபாடிக்கள் (Antibodies) உருவாகியிருக்கலாம். அவர்களுக்கு அடுத்த தொற்று வரும்பட்சத்தில், புதிதாக வந்திருக்கும் ADE எனப்படும் Antibodies Dependent Enhancement எனும் ஒருவகை உடல்நிலை மாற்ற செயல்பாடு ஏற்படலாம்.

Commuters with face mask to prevent the spread of the coronavirus wait for a bus in Kolkata, India
Commuters with face mask to prevent the spread of the coronavirus wait for a bus in Kolkata, India
AP Photo/Bikas Das
கொரோனா குணமான பின்பும் உடல்நிலை மோசமடைவது ஏன்? `போஸ்ட் கோவிட் சிண்ட்ரோம்' அலெர்ட்

தொற்று ஏற்படும். அதற்கெதிரான எதிர்ப்பு சக்தி நம் உடலில் உருவாகும். ஆன்டிபாடி உருவாகும்.

முதல் அலையில் நமக்கு வந்திட்ட, பாதுகாவல் அணுக்களான Original Antigen Sin (OAS) ஆன்டிஜென்கள் அவற்றைச் சரியாக உருவாக்காத பட்சத்தில், பிழையாகி இருந்தால், அடுத்த அலையில் அதே நபருக்குத் தொற்று ஏற்படும்பட்சத்தில் அதன் பாதிப்பு இன்னும் மோசமாக இருக்கலாம். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த நிலை இப்போது நிகழ ஆரம்பித்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக,

முதலில் சாதாரணமாக வந்த கோவிட்19 பாதிப்பு, இரண்டாம் அலையில் மிக மோசமான Immune dysregulation மற்றும் மிக தீவிரமான பாதிப்புடன் பாதிக்கப்பட்ட நோயாளியை வெகுவாக நிலைகுலைந்திடச் செய்திடும்.

Antibodies dependent enhancement எனப்படும் இவ்வகை இடர்பிழை நிகழ்வுகளால் அடுத்த அலையின் தாக்கத்தில் உயிர்சேதங்கள் மற்றும் Long haulers எனும் நீண்ட நாள் தொற்றாளர்கள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

A health worker
A health worker
AP Photo/ Dar Yasin

இந்த ADE காரணத்தால்தான் தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் மிக மோசமாகத் தாக்கியது. அதற்கான முதல் காரணமும் இதே Original Antigen Sin தான். இது மிக மோசமான பாதிப்பை (DHF-Dengue Hemorrhagic Fever) ஏற்படுத்தியது நினைவிருக்கட்டும்.

எனவே, நாம் ஒவ்வொருவரும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக் கவசம் அணிவது, கை சுத்தத்தின் அவசியத்தை உணர்ந்து, வரும் நாள்களில் அடுத்த அலையின் சீற்றத்திலிருந்து நம்மையும் நம் நாட்டையும் காப்பாற்றிவிடலாம்!

- டாக்டர் சஃபி M.சுலைமான், நீரிழிவு சிறப்பு மருத்துவர்.
அடுத்த கட்டுரைக்கு