Published:Updated:

லாக்டௌனில் மருத்துவமனை செல்லவியலாத சர்க்கரை நோயாளிகள்... மருத்துவரின் அலர்ட்கள்!

Diabetes
Diabetes

`குளுக்கோமீட்டர் கருவி சரியாக வேலைசெய்வதில்லை, ரத்தச் சர்க்கரை அளவை அதிகரித்துக் காட்டுகிறது' என்ற புகார்கள் பரவலாக இருக்கின்றன. ஆனால் அதில் உண்மை இல்லை. 96% குளுக்கோமீட்டர் கருவிகள் துல்லியமானவையே.

விகடன் வலைதளத்தின் `கொரோனா அப்டேட்ஸ்' சிறப்புப் பக்கத்தில், வாசகர் சண்முகம், `சர்க்கரை நோயாளிகள் லாக்டௌனில் மருத்துவமனைக்கு மாதாந்தர பரிசோதனைக்குச் செல்வது தடைப்பட்டிருப்பதால், வீட்டிலேயே ரத்தச் சர்க்கரை அளவை அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் என்னென்ன?' என்று கேட்டிருந்தார்.

Diabetes
Diabetes
Pixabay

சர்க்கரை நோயாளிகள், தங்களின் ரத்தச் சர்க்கரை அளவைக் கண்காணித்துக் கட்டுக்குள்வைக்க, ரெகுலர் பரிசோதனைகள் மிகவும் அவசியம். இந்த லாக்டௌனில், மருத்துவமனைக்குச் செல்வதற்கான கட்டுப்பாடுகள், சிரமங்கள் மற்றும் அங்கு நோய்த்தொற்றுக்கான வாய்ப்பு ஆகிய காரணங்களால், பல சர்க்கரை நோயாளிகள் தங்களின் மாதாந்தர ரத்தச் சர்க்கரை பரிசோதனைகளைத் தவறவிட்டிருக்கக் கூடும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் சர்க்கரை அளவை எப்படிக் கண்காணிப்பது... கையாள்வது? சர்க்கரை நோய் மருத்துவர் ராஜ்மாதங்கியைத் தொடர்புகொண்டு பேசினோம்.

கொரோனா காலத்தில் உதவி தேவைப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும்? #DoubtofCommonMan

``குளுகோமீட்டர் பரிசோதனைக் கருவி, இந்த லாக்டௌனில் சர்க்கரை நோயாளிகளின் வீடுகளில் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று. இதுவரை வாங்கியிருக்காதவர்கள் காலம் தாழ்த்தாமல் வாங்கிக்கொள்ளவும். விரல்நுனியில் சொட்டு ரத்தம் எடுத்து, இந்தக் கருவியின் மூலம் ரத்தச் சர்க்கரை அளவை வீட்டிலேயே அறிந்துகொள்ளலாம். அது காட்டும் ரிசல்ட், ஆய்வகப் பரிசோதனை அல்லது மருத்துவமனை ஆய்வுக்கூடப் பரிசோதனையின் முடிவுகளிலிலிருந்து துல்லியத்தன்மையில் சிறிது வேறுபடலாம்.

சர்க்கரைநோய் மருத்துவர் ராஜ்மாதங்கி
சர்க்கரைநோய் மருத்துவர் ராஜ்மாதங்கி

ஆனால், சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுக்க அந்த முடிவு போதுமானது. அதில் காட்டப்படும் குளுக்கோஸின் அளவின் அடிப்படையில் ஹை சுகரா, லோ சுகரா என்று கண்டறிந்து, அதற்கு ஏற்றாற்போல போனில், வீடியோ காலில் உங்கள் மருத்துவருக்கு ரத்தச் சர்க்கரையின் அளவைத் தெரிவித்து, அவர் அறிவுரைப்படி மருந்து எடுத்துக்கொள்வது அவசியம்.

`குளுக்கோமீட்டர் கருவி சரியாக வேலைசெய்வதில்லை, ரத்தச் சர்க்கரை அளவை அதிகரித்துக் காட்டுகிறது' என்ற புகார்கள் பரவலாக இருக்கின்றன. ஆனால், அதில் உண்மை இல்லை. 96% குளுக்கோமீட்டர் கருவிகள் துல்லியமானவையே.

Diabetes
Diabetes
Pixabay

அடுத்ததாக, பரிசோதனை ஆய்வகங்களிலிருந்து வீட்டுக்கே வந்து பரிசோதனைக்கு ரத்தம் எடுத்துச் சென்று, முடிவுகளை வீட்டுக்குக் கொண்டுவந்து கொடுக்கும் லேப் சர்வீஸை பயன்படுத்திக்கொள்ளலாம். அந்தப் பரிசோதனையாளரை வீட்டுக்குள் அனுமதிக்கும்போதும், ரத்தம் எடுக்கும்போது, ரிசல்ட் டெலிவரியைப் பெறும்போதும் கோவிட்-19 தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியம்.

இப்போது பல மருத்துவர்களும் ஆன்லைன் கன்சல்டேஷன், வீடியோ கன்சல்டேஷன் செய்கிறார்கள். ஏதாவது உடல் அசௌகர்யம் என்றால் அவர்களைத் தொடர்புகொள்ள வேண்டும்.

வீடியோ கன்சல்டேஷன்
வீடியோ கன்சல்டேஷன்

குளுக்கோமீட்டர் வாங்க முடியாதவர்கள், லேப் மூலம் ஹோம் டெஸ்ட் செய்துகொள்ள மற்றும் ஆன்லைன் கன்சல்டேஷனுக்கான வாய்ப்புகள் இல்லாதவர்கள், உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து லோ சுகரா, ஹை சுகரா என்பதைக் கணிக்க முயலவும். அந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், வழக்கமாகச் செல்லும் மருத்துவரிடம் செல்ல முடியவில்லை என்றாலும், அருகில் இருக்கும் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ளவும்.

தமிழ்நாட்டுக்குள் பயணிக்க இந்தப் பரிசோதனைகள் அவசியம்! #VikatanPhotoCards

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், எல்லா சர்க்கரை நோயாளிகளுக்கும், சர்க்கரை அளவு மாறுபாடுகளை, உடல் அறிகுறிகளால் உணர்த்துவதில்லை. நீண்டகால சர்க்கரைநோயால் அவதியுறுபவர்களுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு அறிகுறிகள் சில நேரங்களில் ஏற்படுவதில்லை. அதனால்தான், அவர்களுக்கு மாதாந்தர மருத்துவப் பரிசோதனை முக்கியம் ஆகிறது. எனவே, நீண்டகால சர்க்கரை நோயாளிகள் குளுக்கோமீட்டர், வீட்டுக்கு வரும் லேப் பரிசோதனை என ஏதாவது ஒன்றைச் செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

Diabetes
Diabetes
Pixabay

படபடப்பு, அதிகமாக வியர்த்தல், அதிகப் பசி, தலைச்சுற்றல், எரிச்சலடைதல் உள்ளிட்டவை லோ சுகருக்கான அறிகுறிகள். லோ சுகர் ஏற்பட்டால் சிறிது சர்க்கரையோ, குளுக்கோஸோ வாயில்போட்டுக்கொள்ளலாம். மருத்துவரைத் தொடர்புகொள்ளும்வரை, தாங்கள் எடுத்துவரும் சர்க்கரை நோய்க்கான மருந்தின் அளவைப் பாதியாகக் குறைத்துக்கொள்ளலாம்.

அதே நேரம், ஹை சுகர் உள்ளவர்கள் மருத்துவர் அறிவுரை இல்லாமல் டோசேஜ் அளவை அதிகரிக்கக் கூடாது. அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். Hypoglycemia (மிகக் குறைந்த ரத்த சர்க்கரை அளவு - 70mg/dlக்குக் கீழ்)  நிலை ஏற்பட்டால், லாக்டௌன் சிரமங்களையும் மீறி மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

insulin
insulin
Pixabay

ஹை சுகரைப் பொறுத்தவரை, அது நீண்டகாலமாக நீடிக்கும்போது உடலில் ஏற்படும் புண்கள் ஆறாமலிருப்பது முதல் உள்ளுறுப்புகள் பாதிப்புவரை ஏற்படுத்தக்கூடியது. ஹை சுகரை கட்டுக்குள் வைக்க இன்சுலின் மருந்து பயன்படுத்தப்படுகிறது. குளுக்கோமீட்டர் மூலம் ரத்தச் சர்க்கரை அளவை அறிந்தபின், அதன் அடிப்படையில் மருத்துவரிடம் போனில் ஆலோசனை பெற்று, ஏற்கெனவே எடுத்துக்கொண்டிருக்கும் இன்சுலின் டோஸேஜின் அளவில் மாறுதல்கொள்வது குறித்து முடிவுசெய்யலாம்.

`வயநாட்டிலிருந்து மது வாங்கிச் சென்ற நபர்; மூடப்பட்ட 3 டாஸ்மாக் கடைகள்!' - அச்சத்தில் நீலகிரி

புண்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டவர்கள் தினமும் தவறாமல் டிரெஸ்ஸிங் செய்து இன்சுலின் எடுத்துக்கொண்டு சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது மிக அவசியம். புண் ஆறாமலோ, சீழ்வைக்கும் தீவிரத்துக்குச் சென்றாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

Diabetes
Diabetes
pixabay

லாக்டௌன் நாள்களில் வீட்டிலேயே இருப்பதால், பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள் டயட், உடற்பயிற்சிகளைக் கைவிட்டிருப்பார்கள். அதை மீண்டும் ஆரம்பித்துவிடுங்கள். ஒன்றிரண்டு நாள்கள் தடைப்பட்டால் பரவாயில்லை... மீண்டும் தொடரலாம். ஆனால், ஒரேயடியாகக் கைவிடுவது நல்லதல்ல. டயட்டும் பயிற்சிகளும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க மிகவும் உதவும். ''

அடுத்த கட்டுரைக்கு