Published:Updated:

தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யுங்கள் ஈஸிதான்!

தொப்பை

ஒரு நபருக்கு இடுப்பின் சுற்றளவு பொதுவாக 34 இஞ்ச் என்பது சரியான அளவு. அது 36 இஞ்ச் வரை இருந்தால் பிரச்னை இல்லை. 36 இஞ்சுக்கு மேல் இடுப்பின் சுற்றளவு இருப்பதை உடல் பருமன் எனலாம். ஆண், பெண் இருவருக்குமே தொப்பை ஏற்படலாம்.

தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யுங்கள் ஈஸிதான்!

ஒரு நபருக்கு இடுப்பின் சுற்றளவு பொதுவாக 34 இஞ்ச் என்பது சரியான அளவு. அது 36 இஞ்ச் வரை இருந்தால் பிரச்னை இல்லை. 36 இஞ்சுக்கு மேல் இடுப்பின் சுற்றளவு இருப்பதை உடல் பருமன் எனலாம். ஆண், பெண் இருவருக்குமே தொப்பை ஏற்படலாம்.

Published:Updated:
தொப்பை

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை உடல் பருமன். அதிலும் உடல் பருமனால் ஏற்படும் தொப்பை, தோற்றத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது. தொப்பை போடுவதைப் பார்த்த பிறகுதான் உடல் பருமனாகிவிட்டது என்றே உணர்வே ஏற்படும். அதற்குப் பிறகு அதை மறக்கவும் குறைக்கவும் வழிகளைத் தேடுவோம்.

Obesity
Obesity

தொப்பை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், தொப்பையைக் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த இன்டர்னல் மெடிசின் மருத்துவர் சரவண பாரதி.

"ஒரு நபருக்கு இடுப்பின் சுற்றளவு பொதுவாக 34 இஞ்ச் என்பது சரியான அளவு. அது 36 இஞ்ச் வரை இருந்தால் பிரச்னை இல்லை. 36 இஞ்சுக்கு மேல் இடுப்பின் சுற்றளவு இருப்பதை உடல் பருமன் எனலாம். ஆண், பெண் இருவருக்குமே தொப்பை ஏற்படலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெண்களுக்குப் பெரும்பாலும் ஹார்மோன் மாற்றத்தினால் தொப்பை வரலாம். மாதவிடாய் சுழற்சி நிரந்தரமாக நிறைவடையும் மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினாலும் தொப்பை ஏற்படலாம். இதுதவிர, கர்ப்ப காலம், தைராய்டு, பிசிஓடி போன்ற ஹார்மோன் குறைபாடுகளாலும் தொப்பை உண்டாகலாம்.

alcohol
alcohol

ஆண்களுக்கு தொப்பை விழுவதற்கு காரணம் உடல் உழைப்பு குறைவாக இருப்பதுதான். கொழுப்புச்சத்து மற்றும் சர்க்கரை அதிகம் இருக்கும் உணவுப் பொருள்களை அதிகம் எடுத்துக் கொள்வதால் தொப்பை விழலாம். முக்கியமாக மது அருந்துவது தொப்பை விழுவதற்கான முக்கிய காரணம். மதுவானது கல்லீரல் நச்சு நீக்கம் செய்யும் பணியை பாதிக்கும். பியரில் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதால் அதை அதிகம் எடுத்துக் கொள்கின்றனர்.

அதனால் யூரிக் அமிலம் அதிகமாக உடலில் தேங்கி தொப்பை விழும். ஆல்கஹாலாக இருந்தாலும் பியராக இருந்தாலும் அதனைத் தவிர்ப்பது தொப்பைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நல்லது.

மதுப் பழக்கத்தால் எல்.டி.எல் (LDL) மற்றும் ட்ரைகிளசரைடு (triglyceride) என்று சொல்லப்படும் கெட்ட கொழுப்புகளின் அளவு அதிகம் ஆகும். LDL அளவு 100-க்கு குறைவாக இருப்பது நல்லது. ஆண் -பெண் என இருவருக்கும் 55 வயது முதல் Lean Muscle Mass எனப்படும் தசைகளின் அடர்த்தி குறைந்து, வயிற்றுப்பகுதியில் கொழுப்பு அதிகம் சேர்வதும் இயற்கை.

Obesity
Obesity

55 வயதுக்கு முன்பாகவே சரியான எடையை நிர்வகிக்க வேண்டியது அவசியம். உடற்பயிற்சி, நடைப்பயற்சியில் ஈடுபட்டு, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மேற்கொண்டால் 55 வயதுக்கு மேல் எடை அதிகரிக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஸ்கேன் பரிசோதனையில் Fatty liver என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதைப் பலரும் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வது இல்லை.

கல்லீரலில் கொழுப்பு படியும் இந்த நிலை தொடரும்போது கல்லீரல் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். இடுப்புப் பகுதி 36 இஞ்ச்சுக்கு மேல் இருப்போருக்கு Fatty Liver ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

Fatty liver பாதிப்பு இருப்பவர்களுக்கு கல்லீரல் நச்சு நீக்கம் செய்யும் பணி பாதிக்கப்படும். உடலில் வேறு சில இடங்களில் சற்று கொழுப்பு சேர்ந்திருந்தால்கூட பரவாயில்லை. ஆனால் இடுப்பு சுற்றளவு குறைவாகத்தான் இருக்க வேண்டும்.

இன்டர்னல் மெடிசின் மருத்துவர் சரவண பாரதி.
இன்டர்னல் மெடிசின் மருத்துவர் சரவண பாரதி.

தொப்பையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

முதலில் சிறிய மாற்றங்களைச் செய்யத் தொடங்குங்கள். மாடிக்குச் செல்ல லிஃப்ட் பயன்படுத்தாமல் படிக்கட்டில் ஏறிச் செல்லுங்கள். தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செல்பவர்கள் என்றால், அதை ஒரு மணிநேரமாக அதிகரிக்கலாம். அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்பவர்களிடம் வாட்ஸ் அப்பில் சாட் செய்வதற்கு பதில் எழுந்து சென்று பேசிவிட்டு வரலாம். இப்படி சிறிய சிறிய மாற்றங்களைச் செய்யத் தொடங்க வேண்டும்.

உடல் உழைப்பை அதிகரிக்க வேண்டும். செய்யும் உடற்பயிற்சியை மன அமைதியுடனும் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையுடனும் செய்ய வேண்டும். தினமும் ஒரு மணிநேரம் நம் உடலின் ஆரோக்கியத்துக்காகச் செலவழித்தால் மீதம் 23 மணி நேரம், உடல் நம்மைக் கவனித்துக்கொள்ளும். உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான உணவுப்பழக்கமும் நல்ல தூக்கமும் முக்கியம்.

மாடிப்படி ஏறுதல்
மாடிப்படி ஏறுதல்

கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்களைச் சரிசெய்ய தாய்ப்பால் கொடுப்பது உதவும். தாய்ப்பால் கொடுப்பதால் மட்டுமே தொப்பை குறையும் என்று சொல்ல முடியாது. அதனுடன் ஆரோக்கியமான உணவுப்பழக்கமும், உடற்பயிற்சியும் மேற்கொண்டால் தொப்பை குறையும்" என்றார்.

- சொர்ண மீனா