Published:Updated:

பட்டாசுப் புகை பாக்டீரியா, வைரஸ்களைக் கொல்லும், ஆனால்..! - மருத்துவர் சொல்லும் காரணம்

Crackers ( pixabay )

``பட்டாசுப் புகை என்றில்லை... வாகனப் புகை, சமையல் புகை, தொழிற்சாலை புகை என எல்லாவிதமான புகைகளும் மனிதர்களுக்கு கேடுவிளைவிக்கக்கூடியவையே''

பட்டாசுப் புகை பாக்டீரியா, வைரஸ்களைக் கொல்லும், ஆனால்..! - மருத்துவர் சொல்லும் காரணம்

``பட்டாசுப் புகை என்றில்லை... வாகனப் புகை, சமையல் புகை, தொழிற்சாலை புகை என எல்லாவிதமான புகைகளும் மனிதர்களுக்கு கேடுவிளைவிக்கக்கூடியவையே''

Published:Updated:
Crackers ( pixabay )

தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்புகள்தான் நினைவுக்கு வரும். அதிலும் குறிப்பாக, தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதால் ஒட்டுமொத்த இந்தியாவும் விழாக்கோலம் பூணும். பல ஆண்டுகளாகவே தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்பது வாடிக்கையாக இருக்கிறது. இந்தச்சூழலில், `தீபாவளிக்கு பட்டாசு வெடிங்க... உங்களால எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வெடிங்க. பட்டாசு வெடிச்சி தீபாவளியைக் கொண்டாடணும்னு நம்ம பெரியவங்க சொல்றதைக் கேளுங்க.

தீபாவளி நேரத்துல தட்பவெப்பநிலையில மாற்றங்கள் ஏற்படுறதால நிறைய பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் உற்பத்தியாகி மக்களைத் தாக்கும். இதனால் மனுஷங்க நோய்வாய்ப்பட்டு உயிரிழப்பு நடக்க வாய்ப்பிருக்கு. மனுஷனோட உயிரிழப்புக்குக் காரணமான பாக்டீரியாவையும் வைரஸ்களையும் ஒழிக்கிறதுக்காகத்தான் பட்டாசு வெடிக்கச் சொன்னாங்க.

Crackers
Crackers
pixabay

நம்ம முன்னோர் ஒண்ணும் முட்டாள்கள் கிடையாது. பட்டாசுல உள்ள சல்பரும் ரசாயனங்களும் அந்தக் கிருமிகளை அடியோடு அழிச்சிடும். மழைக்காலத்தின் சிறந்த கிருமிநாசினியா இருக்கும். அதனால பட்டாசை அதிகமா வெடிங்க, டெங்குவை விரட்டுங்க' என்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் உலா வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பட்டாசுப்புகை பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை ஒழிக்கும் என்பது உண்மையா என்று நுரையீரல் சிறப்பு மருத்துவர் எஸ்.ஜெயராமனிடம் கேட்டோம். எடுத்த எடுப்பிலேயே `புகை நமக்குப் பகை' என்ற எச்சரிக்கைத் தகவலுடன் பேசத் தொடங்கினார்.

Dr.Jayaraman
Dr.Jayaraman

``மழைக்காலத்தில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். அப்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை அவை அனைத்தையும் அழித்துவிடும். குறிப்பாக சல்பர் உள்ளிட்ட ரசாயனம் கலந்த அந்தப்புகை நமக்கெல்லாம் பெருந்தொல்லை கொடுத்து வரும் கொசுக்களை அழித்துவிடும் என்பது உண்மைதான். ஆனால், அதே புகையை மனிதர்களும் சுவாசிக்க வேண்டியிருக்கும். அப்போது மூக்கின் வழியாக புகை உள்ளே செல்வதால் நுரையீரலுக்குள் சென்று மூச்சுப்பாதையில் அடைப்பு ஏற்படும். கண் எரிச்சல், சருமத்தில் காயம், முகம் வெந்துபோவது போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம் முன்னோர் சொன்னதெல்லாம் சரியே. அவர்கள் சொன்னபடி சம்பிரதாயத்துக்காக பட்டாசு வெடிக்கலாம். ஆனால், பட்டாசுப் புகை பாக்டீரியா, வைரஸ்களை ஒழிக்கும் என்று சொல்வதெல்லாம் சரியல்ல. பட்டாசுப் புகை என்றில்லை... வாகனப் புகை, சமையல் புகை, தொழிற்சாலை புகை என எல்லாவிதமான புகைகளும் மனிதர்களுக்கு கேடுவிளைவிக்கக்கூடியவையே.

Crackers
Crackers
pixabay

பயிர்களில் பாதிப்பு ஏற்படுத்தும் களைச்செடிகள், பூச்சிகளை ஒழிக்க மருந்து தெளிப்பதால் அவை அழிந்துவிடும். ஆனால். அந்த மருந்தில் உள்ள ரசாயனம் பயிர்களில் கலப்பதால்தான் அவற்றை உண்ணும் நமக்கு சர்க்கரைநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, ஒரு செயலைச் செய்வதற்குமுன் அதன் நன்மை, தீமைகளை அலசி ஆராய்ந்து அதன்பிறகு செய்ய வேண்டும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism