Published:Updated:

கோவாக்சின் காலாவதி தேதி நீட்டிப்பு; மருந்துக் கம்பெனிகளின் `பலே' வியாபார தந்திரங்கள்!

Vaccine
News
Vaccine ( AP Illustration/Peter Hamlin )

ஒவ்வொரு மருந்துக்கும் உற்பத்தி செய்த தேதி, காலாவதியாகும் தேதி என்று லேபிளில் தெளிவாக அச்சிட்டிருப்பார்கள். `மருந்தின் காலாவதி தேதி' என்பதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது, அல்லது எந்த அளவுக்கு உண்மை இல்லை என்று பார்ப்போம்.

கொரோனா தடுப்பூசி இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேருக்கு இதுவரை கொடுக்கப்பட்டுவிட்டதால், அரசின் கவனம் இப்போது 15 - 18 வயதுவரை உள்ள சிறார்கள் பக்கம் திரும்பியுள்ளது. இந்தத் திட்டம் ஆரம்பித்த ஒரே நாளில் புதுப் பிரச்னைகள் வெடிக்கத் தொடங்கின.

காலாவதி ஆன கோவாக்சின் தடுப்பு மருந்துக் குப்பிகளிலிருந்து லேபிளைக் கிழித்துவிட்டு, காலாவதி தேதியை நீட்டித்து புது லேபிளை ஒட்டி குழந்தைகளுக்குப் போடுகிறார்கள் என்று செய்திகள் வந்தன. பொதுவாக, நம் மக்களுக்குத் தடுப்பூசி என்றாலே பயம்; அதிலும் காலாவதியான தடுப்பூசியைக் கொடுக்கிறார்கள் என்றால், மக்கள் அச்சப்பட்டுத்தானே போவார்கள்?

``மருந்துக் கட்டுப்பாடு இயக்குநரின் ஆலோசனையின்படிதான் தடுப்பு மருந்தின் ஆயுள் காலத்தை 9 மாதங்களிலிருந்து ஒரு வருடமாக உயர்த்தினோம்" என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.

மருத்துவர் சௌந்தரபாண்டியன்
மருத்துவர் சௌந்தரபாண்டியன்

இதில் உள்ள உண்மைகள் என்ன என்று, சிறிது ஆழமாகப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் இப்போது கோவிட் தடுப்பு மருந்துகளின் காலாவதி காலம் குறித்து சில பிரச்னைகள் நடக்கின்றன. அமெரிக்காவில் கோடிக்கணக்கான வேக்ஸின் குப்பிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அவற்றை எல்லாம் ஜோ பைடன் நிர்வாகம் பின்தங்கிய நாடுகளின் தலையில் குறைந்த விலைக்கோ, தானமாகவோ கொடுத்து வருவதாகவும் ஒரு செய்தி. காலாவதி ஆன கோடிக்கணக்கான வேக்ஸின் குப்பிகளைக் குப்பையில் கொட்டியதாக, நைஜீரியா நாட்டிலிருந்து இன்னொரு செய்தி. வளர்ந்த மேலை நாடுகளிலும், சீனாவிலும்கூட இந்தப் பிரச்னை உண்டு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒவ்வொரு மருந்துக்கும் உற்பத்தி செய்த தேதி, காலாவதியாகும் தேதி என்று லேபிளில் தெளிவாக அச்சிட்டிருப்பார்கள். `மருந்தின் காலாவதி தேதி' என்பதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது, அல்லது எந்த அளவுக்கு உண்மை இல்லை என்று பார்ப்போம்.

சமீபத்தில், அரசின் கெடுபிடி நடவடிக்கைகளுக்கு பயந்து, காலாவதியான மருந்துகளைக் கடைக்காரர்கள் ஆங்காங்கே குப்பைகளில் கொட்டியதை நாம் பார்த்தோம். இது உள்ளூர் பிரச்னை. உலக அளவில் கவனம் ஈர்த்த ஒரு பிரச்னை பற்றியும் பார்ப்போம். சமீபத்தில் அமெரிக்க ராணுவம், மருந்தின் காலாவதி தேதி தொடர்பான ஒரு பிரச்னையை எழுப்பியது. தங்களிடம் உள்ள லட்சக்கணக்கான மருந்துகள் காலாவதி ஆகிவிட்டதாகவும், அவற்றைக் குப்பையில் கொட்டிவிடலாமா என்றும் ஆலோசனை கேட்டு, அமெரிக்காவின் மருந்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் (FDA - Food and Drug Administration) விண்ணப்பித்தது. FDA-தான் உலகத்திலேயே மிக சக்தி வாய்ந்த மருந்துக் கட்டுப்பாடு நிறுவனம். இதன் அனுமதியின்றி எந்த மருந்தும் விற்பனைக்கு வர முடியாது. அமெரிக்க ராணுவத்தின் வேண்டுகோளை ஏற்று, FDA நிறுவனத்தின் விஞ்ஞானிகளும் நிபுணர்களும் ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் எல்லோருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தன.

A health worker administers the vaccine
A health worker administers the vaccine
AP Photo/Mahesh Kumar A

FDA ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட சுமார் 100 மருந்துகளில், 90 மருந்துகள் உண்மையில் காலாவதியே ஆவதில்லை என்பதே அது! காலாவதி தேதிக்குப் பிறகும் சுமார் 10 - 15 வருடங்கள் வரை அவற்றின் வீரியம் குறைவதில்லை. ஒரு குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் பாதுகாத்தால், மருந்துகளின் செயல்தன்மையில் மாற்றம் ஏற்படுவதில்லை. உணவுப் பண்டங்களே குளிரூட்டப்பட்ட நிலையில் மாத, வருடக் கணக்கில் பாதுக்கப்படுவது நமக்குத் தெரியும்தானே? எனில், வேதிப் பொருள்கள் மூலக்கூறுகளால் ஆன மருந்தின் காலாவதிக் காலம் நீடித்திருக்கும் வாய்ப்புகள் உண்டுதானே?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

90 சதவிகித மருந்துகள் காலாவதி ஆவதில்லை என்று பார்த்தோம். காலாவதி ஆகும் ஆபத்துடைய மீதி 10 சதவிகிதம் மருந்துகள் பற்றியும் பார்ப்போம். டெட்ராசைக்ளின் போன்ற வெகு சில மருந்துகள் காலாவதி தேதிக்குப் பின்னர் கெடுதல்களை விளைவிக்கும். அதேபோல, சிரப் போன்ற திரவ நிலையில் உள்ள ஆன்டிபயாடிக்குகள், காலாவதி தேதிக்குப் பின்னர் ஆபத்துக் காரணியாகிவிடுபவை. மூன்றாவதாக, இன்சுலின் போன்ற மருந்துகள் காலாவதி தேதிக்குப் பின்னர் வீரியம் குறையக்கூடியவை; என்றாலும் ஆபத்தில்லை.

பிறகு எதற்காக காலாவதி தேதி?

Representational Image
Representational Image

90 சதவிகித மருந்துகள் காலாவதியே ஆவதில்லை என்றால், பிறகு ஏன் ஒவ்வொரு மருந்தின் உரையிலும் ஒரு தேதியை அச்சிடுகிறார்கள்? அது மருந்து நிறுவனங்களின் தொழில் ரகசியம்! விஞ்ஞானம் வேகமாக வளர வளர, புதுப்புது மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. `பழையன கழிதலும் புதியன புகுதலும்' எல்லா சந்தைகளையும் போலவே மருந்துச் சந்தையிலும் நடக்கும். ஒரு மருந்து காலாவதி ஆனால்தானே, குறிப்பிட்ட காலத்தில் மக்கள் மீண்டும் அதை வாங்க வருவார்கள்? அப்போது, அதே நோய்க்கு தாங்கள் தயாரித்த புதிய மருந்தை விற்பனைக்கு கொண்டுவந்து அவர்களை வாங்க வைக்க முடியும்? ஒரு மருந்துக்கு 5 வருடங்கள் வரை காலாவதி தேதியை நீட்டித்தால், ஐந்து வருடங்களுக்கான மருந்தை வாங்கி வீட்டில் மக்கள் ஸ்டாக் வைத்துக்கொண்டால், புது மருந்துகளை எப்படி அவர்களிடம் விற்பது? அதுவே, காலாவதி தேதி ஆறு மாதங்கள், ஒரு வருடம் எனும்போது, மருந்து நிறுவனங்கள் அந்தக் கால சுழற்றியில் புது சரக்கை சந்தையில் இறக்க, மருத்துவர்கள் அதை பரிந்துரைக்க, மருந்துக் கடைகள் அவற்றை வாங்கி விற்பனை செய்ய என... இவையெல்லாம் அப்போதுதானே நடக்கும்?!

இப்போது வேக்ஸின் விஷயத்துக்கு வருவோம். கோவாக்சின் மருந்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன் வரை உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதும், நவம்பர் 3-ம் தேதி அவசர அனுமதி வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக, எல்லா வேக்ஸின்களுக்குமே 6 மாதங்கள்தான் கால நிர்ணயம் செய்தார்கள். அதற்கு மேல் அவற்றின் வீரியத்தின் மேல் தயாரிப்பாளர்களுக்கே சந்தேகம். பொதுவாக எந்த வேக்ஸினும் சந்தைக்கு வரும் முன் பல்வேறு சோதனைகளைக் கடந்து வர வேண்டும். அதற்கு 5 - 7 வருடங்கள் ஆகும். ஆனால், கோவிட் தடுப்பூசி விஷயத்தில் பல்வேறு காரணங்களால் அவசரம்.

Vaccination - Representational image
Vaccination - Representational image
Manish Swarup

ஆகவே, அவசர அவசரமாக ஒரே வருடத்தில் வேக்ஸினை சந்தைப்படுத்தினார்கள். இந்தியாவில் இரண்டு வேக்ஸின்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கடும்போட்டி. ஒரு கம்பெனியின் நிர்வாகி சொன்னார்: ``எங்கள் வேக்ஸின்தான் வீரியம் வாய்ந்தது. அந்த வேக்ஸின் வெறும் தண்ணீர்தான்" என்று பகிரங்கமாகச் சவால் விட்டார். பிறகு சில நாள்களில், அவர்களிடையே சமரசம் ஏற்பட்டதாகச் செய்தி வந்தது. அந்த விஷயம் அதோடு மூடப்பட்டது.

மொத்தத்தில், அமெரிக்காவில் ஃபைசர், மாடர்னா வேக்ஸின்களுக்கு, காலாவதி ஆயுள் காலம் 6 மாதங்களிலிருந்து ஒரு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும், கோவிஷீல்டு வேக்ஸின், இதே மாதிரி ஆயுள் நீட்டிப்பை ஏற்கெனவே சத்தம் போடாமல் வாங்கிவிட்டது. ஆகவே, கோவாக்சின் தடுப்பூசியின் ஆயுள்காலம் ஒரு வருடமாக நீட்டிக்கப்பட்டது ஒரு பெரிய விஷயமல்ல.

- சிறுநீரகவியல் மருத்துவர் டாக்டர் சௌந்தரபாண்டியன்