Published:Updated:

Doctor Vikatan: சாக்லேட் கொடுத்தால் மட்டுமே உணவு உட்கொள்ளும் குழந்தை; தினமும் சாக்லேட் கொடுக்கலாமா?

சாக்லேட்
News
சாக்லேட் ( மாதிரி படம் )

குழந்தைதானே என்ற எண்ணத்தில் கண்ட உணவுகளையும் கொடுப்பதும் தவறு. அந்த வயதிலிருந்தே சரிவிகித உணவுப்பழக்கத்துக்குப் பழக்குவது அவசியம். ஒருவேளை உங்கள் குழந்தை இனிப்பாக ஏதாவது கேட்கிறது என்றால் சாக்லேட்டுக்கு பதிலாக பழங்கள் மற்றும் உலர் பழங்களைக் கொடுக்கலாம்.

Doctor Vikatan: சாக்லேட் கொடுத்தால் மட்டுமே உணவு உட்கொள்ளும் குழந்தை; தினமும் சாக்லேட் கொடுக்கலாமா?

குழந்தைதானே என்ற எண்ணத்தில் கண்ட உணவுகளையும் கொடுப்பதும் தவறு. அந்த வயதிலிருந்தே சரிவிகித உணவுப்பழக்கத்துக்குப் பழக்குவது அவசியம். ஒருவேளை உங்கள் குழந்தை இனிப்பாக ஏதாவது கேட்கிறது என்றால் சாக்லேட்டுக்கு பதிலாக பழங்கள் மற்றும் உலர் பழங்களைக் கொடுக்கலாம்.

Published:Updated:
சாக்லேட்
News
சாக்லேட் ( மாதிரி படம் )

Doctor Vikatan: என் 3 வயது மகனுக்கு தினமும் சாக்லேட் கொடுக்க வேண்டும். சாக்லேட் கொடுத்தால்தான் சாப்பாடே சாப்பிடுவான். இந்தப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. தினமும் சாக்லேட் சாப்பிடுவது ஆபத்தானதா? இந்தப் பழக்கத்தை நிறுத்த வேறு வழிகள் உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

ஊட்டச்சத்து ஆலோசகர் 
லேகா ஸ்ரீதரன் | சென்னை
ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் | சென்னை

குழந்தை எப்படியாவது சாப்பிட்டால் போதும் என்ற எண்ணத்தில் அதற்கு சாக்லேட் கொடுத்துப் பழக்குவது சரியானதல்ல. குழந்தைப் பருவத்தில் இருந்தே சாப்பாட்டின் அவசியத்தை, சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டியதன் அவசியத்தைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் இதுபோன்ற தேவையற்ற பழக்கங்களில் இருந்து குழந்தைகளை மீட்க முடியும்.

குழந்தைதானே என்ற எண்ணத்தில் கண்ட உணவுகளையும் கொடுப்பதும் தவறு. அந்த வயதில் இருந்தே சரிவிகித உணவுப்பழக்கத்துக்குப் பழக்குவது அவசியம். ஒருவேளை உங்கள் குழந்தை இனிப்பாக ஏதாவது கேட்கிறது என்றால் சாக்லேட்டுக்கு பதிலாக பழங்கள் மற்றும் உலர் பழங்களைக் கொடுக்கலாம்.

அதற்காக குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுப்பதே தவறு என்று சொல்லவில்லை. எப்போதோ ஒரு முறை கொடுக்கலாம். அது பழக்கமாக மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படியே கொடுக்கும்போதும், நீங்கள் கொடுக்கும் சாக்லேட்டில் கஃபைன் இல்லாததா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

குறைந்த கொழுப்பும் சர்க்கரையும் சேர்த்த சாக்லேட்டாக பார்த்துத் தேர்வு செய்து வாங்கிக் கொடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால் டார்க் நிற சாக்லேட்டுகள் ஓரளவு சிறந்தவை. அவற்றில் இனிப்பும் பிற சேர்க்கைகளும் குறைவாக இருக்கும்.

குழந்தை
குழந்தை

எனவே எப்போதாவது, குறைந்த அளவு சாக்லேட் சாப்பிடுவது ஓகே. ஆனால் அதை மட்டுமே சாப்பிடுவது என்பது குழந்தைக்கு உடல் பருமன், பல் சொத்தை உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு காரணமாகலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.