Published:Updated:

Doctor Vikatan: 20 ப்ளஸ் வயதிலேயே கரடுமுரடான, வயோதிக சருமம்... தீர்வுகள் உண்டா?

சருமம் ( Photo by Juan Pablo Serrano Arenas from Pexels )

சருமத்தின் மேல் பகுதியில் நுண்ணிய துவாரங்கள் இருக்கும். இவை எல்லோருக்கும் இருக்கும். சிறு வயதில் இந்தத் துவாரங்கள் எல்லாம் டைட்டாக இருக்கும். சருமத்தில் எண்ணெய்ப்பசை அதிகம் சுரப்பவர்களுக்கு அதன் காரணமாக சருமத் துவாரங்கள் திறந்திருப்பது போலத் தெரியும்.

Doctor Vikatan: 20 ப்ளஸ் வயதிலேயே கரடுமுரடான, வயோதிக சருமம்... தீர்வுகள் உண்டா?

சருமத்தின் மேல் பகுதியில் நுண்ணிய துவாரங்கள் இருக்கும். இவை எல்லோருக்கும் இருக்கும். சிறு வயதில் இந்தத் துவாரங்கள் எல்லாம் டைட்டாக இருக்கும். சருமத்தில் எண்ணெய்ப்பசை அதிகம் சுரப்பவர்களுக்கு அதன் காரணமாக சருமத் துவாரங்கள் திறந்திருப்பது போலத் தெரியும்.

Published:Updated:
சருமம் ( Photo by Juan Pablo Serrano Arenas from Pexels )

Doctor Vikatan: என் வயது 23. ஆனால் இந்த வயதிலேயே என் சருமம் கரடுமுரடாக இருக்கிறது. சரும துவாரங்கள் பெரிதாக இருக்கின்றன. வயதானது போல காட்சியளிப்பதாக பலரும் சொல்கிறார்கள். என்னுடைய வேலை காரணமாக நான் தினமும் வெயிலிலும் புழுதியிலும் வண்டி ஓட்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. என் சருமப் பிரச்னைக்கு அதுதான் காரணமா? இதற்கு என்ன தீர்வு?

- Hari Vengadesh, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன் | சென்னை
சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன் | சென்னை

நம்முடைய சருமத்தில் எபிடெர்மிஸ் மற்றும் டெர்மிஸ் என இரண்டு லேயர்கள் இருக்கும். டெர்மிஸ் எனும் லேயரில் செபேஷியஸ் சுரப்பிகள் இருக்கும். சருமத்துக்குத் தேவையான எண்ணெய்ப் பசையைச் சுரப்பது இவைதான். இந்த செபேஷியஸ் சுரப்பிகளிலிருந்து சீபம் என்கிற திரவம் சுரக்கும்.

சருமத்தின் மேல் பகுதியில் நுண்ணிய துவாரங்கள் இருக்கும். இவை எல்லோருக்கும் இருக்கும். சிறு வயதில் இந்தத் துவாரங்கள் எல்லாம் டைட்டாக இருக்கும். சருமத்தில் எண்ணெய்ப் பசை அதிகம் சுரப்பவர்களுக்கு, அதன் காரணமாக சருமத் துவாரங்கள் திறந்திருப்பது போலத் தெரியும்.

அளவுக்கதிமாக வெயிலில் அலையும்போது சருமத்தின் அடியில் உள்ள கொலாஜென் மற்றும் எலாஸ்டின் இழைகள் பாதிக்கப்படும். இவைதான் நம் சருமத்தை இளமையோடும், உறுதியோடும் வைத்திருப்பவை. சருமத் துவாரங்களைச் சுற்றியுள்ள கொலாஜென், எலாஸ்டின் குறைவதால் துவாரங்கள் திறந்ததுபோலத் தெரியும்.

சருமத்திலுள்ள கொலாஜெனையும் எலாஸ்டினையும் தூண்டிவிட சில சிகிச்சைகள் இருக்கின்றன. மைக்ரோ நீட்லிங், ரேடியோ ஃப்ரீக்வன்சி, ஸ்கின் டைட்டனிங் கார்பன் டை ஆக்ஸைடு லேசர், சருமத்துக்கு அடியில் போடப்படும் ஹைலுரானிக் ஊசி போன்றவை இதற்கு உதவும். அதன் மூலம் சருமத் துவாரங்கள் டைட் ஆகும்.

ஆயிலி சருமம்
ஆயிலி சருமம்

ரெட்டினால், சாலிசிலிக் அமிலம், கிளைகாலிக் அமிலம் கலந்த க்ரீம்கள் பயன்படுத்தினாலும் சருமத் துவாரங்கள் டைட் ஆகும். அதிகப்படியான வெயில், சூழல் மாசு, ஸ்ட்ரெஸ் காரணமாக சிலருக்கு சராசரியைவிட சீக்கிரமே சருமம் முதுமைத்தன்மையை அடையும். அவர்களுக்கு கொலாஜென் உற்பத்தி இருக்காது. எனவே இந்தக் காரணிகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். சரும மருத்துவரை அணுகி, உங்களுக்கான சரியான சிகிச்சைகளைக் கேட்டுப் பின்பற்றுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.