Published:Updated:

Doctor Vikatan: குரலில் பெண் தன்மை... கேலி, கிண்டலில் இருந்து தப்பிக்க தீர்வுகள் உண்டா?

குரல்
News
குரல்

பெண்ணாக இருந்து குரலில் ஆண்தன்மை தெரிவதாகவோ, ஆணாக இருந்து குரலில் பெண் தன்மை தெரிவதாகவோ உணர்ந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் 18 வயது வரை காத்திருக்கலாம்.

Doctor Vikatan: குரலில் பெண் தன்மை... கேலி, கிண்டலில் இருந்து தப்பிக்க தீர்வுகள் உண்டா?

பெண்ணாக இருந்து குரலில் ஆண்தன்மை தெரிவதாகவோ, ஆணாக இருந்து குரலில் பெண் தன்மை தெரிவதாகவோ உணர்ந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் 18 வயது வரை காத்திருக்கலாம்.

Published:Updated:
குரல்
News
குரல்

Doctor Vikatan: என் வயது 28. குரல் பெண் தன்மையோடு இருப்பதால் பலரின் கிண்டலுக்கும் ஆளாகிறேன். குரலின் தன்மையை மாற்ற ஏதேனும் சிகிச்சைகள் உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா.

காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா
காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா

உங்களுடைய இந்தப் பிரச்னைக்கு மருத்துவத்தில் `பியூபர்ஃபோனியா' (Puberphonia) என்று பெயர். இந்தப் பிரச்னைக்கு இன்றைய நவீன மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது.

ஸ்பீச் தெரபியோ, அறுவைசிகிச்சையோ கொடுக்கப்பட்டு இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும். சிகிச்சையைத் தொடங்கும் முன், எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்து, குரல் நாணின் நிலை எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டைத் தெரிந்துகொள்ள, வேறு சில டெஸ்ட்டுகளும் மேற்கொள்ளப்பட வேண்டி வரலாம்.

டெஸ்ட்டுகளின் ரிசல்ட்டை பொறுத்துதான் எப்படிப்பட்ட சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய முடியும். பெண்ணாக இருந்து குரலில் ஆண் தன்மை தெரிவதாகவோ, ஆணாக இருந்து குரலில் பெண் தன்மை தெரிவதாகவோ உணர்ந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் 18 வயது வரை காத்திருக்கலாம்.

தியேட்டர் உட்பட நடிப்புத் துறைகளில் உள்ள பலரும் தங்கள் குரல் வளத்தை மேம்படுத்திக்கொள்ள ஸ்பீச் தெரபி எடுப்பதைப் பார்க்கலாம். சரியான நேரத்தில், சரியான மருத்துவரை சந்தித்து, சரியான சிகிச்சையை எடுத்தால் 3 முதல் 6 மாதங்களுக்குள் சிகிச்சையின் பலனை உணர முடியும். சிலருக்கு ஸ்பீச் தெரபி பலனளிக்காமலும் போகலாம். அப்படிப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

 குரல்
குரல்

ஒருவரின் குரலின் தன்மை என்பது அவரது குரல் நாணின் நீளத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. எனவே, அறுவை சிகிச்சையின் மூலம் அந்த நீளத்தைச் சரிசெய்வதன் மூலம் குரலின் தன்மையையும் மாற்ற முடியும்.

வெளிநாடுகளில் திருநங்கைகளும் திருநம்பியரும் பால் மாற்ற சிகிச்சைகளின் ஒரு பகுதியாக, குரலின் தன்மையையும் இப்படி மாற்றிக்கொள்கிறார்கள். நம் நாட்டில் அந்தச் சிகிச்சை அவ்வளவு பிரபலமாகவில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.