Published:Updated:

Doctor Vikatan: ஃப்ளு தடுப்பூசி அவசியமா? கொரோனாவா, ஃப்ளுவா என எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது?

காய்ச்சல்

கோவிட் தொற்றுக்கும் ஃப்ளு பாதிப்புக்குமான அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இரண்டையும் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்பவர்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

Doctor Vikatan: ஃப்ளு தடுப்பூசி அவசியமா? கொரோனாவா, ஃப்ளுவா என எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது?

கோவிட் தொற்றுக்கும் ஃப்ளு பாதிப்புக்குமான அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இரண்டையும் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்பவர்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

Published:Updated:
காய்ச்சல்

Doctor Vikatan: எங்கு பார்த்தாலும் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பாக இருக்கிறது. ஃப்ளூ காய்ச்சல் என்கிறார்களே.... அதுதானா? ஃப்ளூ தடுப்பூசி போட்டுக்கொள்வது இந்நிலையில் அவசியமா? எந்த வயதில் போட்டுக்கொள்ள வேண்டும்? இது ஃப்ளூதானா அல்லது கொரோனாவா என வேறுபடுத்திப் பார்க்க முடியுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

பூங்குழலி
பூங்குழலி

இன்ஃப்ளுயென்ஸா என்பதன் சுருக்கமே ஃப்ளு. இது ஒருவகையான வைரஸ் தொற்று. சளி, காய்ச்சல் பாதிப்பு என பேச்சுவழக்கில் சொல்வது இந்த ஃப்ளுவை தான் குறிக்கும். சீதோஷ்ணநிலை மாறும்போது, அதாவது வெயில் குறைந்து மழையும் பனியும் வரும்போது இந்த வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படுவது சகஜமான ஒன்றுதான்.

பெரும்பாலும் இந்த ஃப்ளு காய்ச்சலானது பலரையும் பாதித்து, தானாகவே சரியாகிவிடும். ஆனால் எதிர்ப்புசக்தி குறைவானவர்களே இதன் தீவிரத்தால் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேலானவர்கள், நீரிழிவு பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், இதயநோய்கள் போன்று எதிர்ப்பு சக்தியைக் குறைக்கக்கூடிய நாள்பட்ட இணைநோய்கள் உள்ளவர்களுக்கு ஃப்ளு காய்ச்சலின் பாதிப்பு தீவிரமடைந்து, நிமோனியாவாக மாற வாய்ப்புகள் உண்டு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இருப்பிடத்தையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரத்தோடும் காற்றோட்டத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். முகக்கவசம் அணிவது மிகமிக முக்கியம். மூக்கைத் துடைக்கவோ, சிந்தவோ பயன்படுத்தும் கைக்குட்டை, டிஷ்யூ போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஃப்ளு பாதிப்பு மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க முடியும்.

இன்ஃப்ளுயென்ஸா பாதிப்புக்கு தடுப்பூசி ஏற்கெனவே இருந்தாலும், நம்மூரில் அது பரவலாகப் போடப்படுவதில்லை. எல்லா வயதினருமே இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்கள் இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள உகந்தவை. இந்த மாதங்களில்தான் நோய் பாதிப்பு தீவிரமடையும் என்பதால் இந்த மாதங்களில் போட்டுக்கொள்ளலாம். ஏற்கெனவே குறிப்பிட்டபடி ரிஸ்க் பிரிவில் உள்ளவர்கள் அவசியம் செலுத்திக்கொள்ள வேண்டும். மற்றவர்களும் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம்.

fever
fever

கோவிட் தொற்றுக்கும் ஃப்ளு பாதிப்புக்குமான அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இரண்டையும் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்பவர்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். கோவிட் தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்திருந்தாலோ, கோவிட் பரவல் அதிகமுள்ள நாள்களில் ஒருவருக்கு அறிகுறிகள் தென்பட்டாலோ கோவிட் தொற்றுக்கான பரிசோதனையைச் செய்துபார்த்து அதை உறுதிபடுத்திக் கொள்ளலாம். இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல், இருமல், சளி தொடர்ந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சையும் எடுத்துக்கொள்வது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.