Published:Updated:

Doctor Vikatan: தினமும் வெற்றிலை, பாக்கு போடுவது சரியானதா... அதனால் பற்கள் கறையாகுமா?

வெற்றிலை- பாக்கு
News
வெற்றிலை- பாக்கு

பொதுவாக செரிமான சக்திக்கு நல்லது என்பதால் அந்தக் காலத்தில் மூன்று வேளைகளுமே வெற்றிலை, பாக்கு போடும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்று வெற்றிலை, பாக்கு போடுவதென்பது இமேஜை பாதிக்கிற விஷயமாக மாறிவிட்டது.

Doctor Vikatan: தினமும் வெற்றிலை, பாக்கு போடுவது சரியானதா... அதனால் பற்கள் கறையாகுமா?

பொதுவாக செரிமான சக்திக்கு நல்லது என்பதால் அந்தக் காலத்தில் மூன்று வேளைகளுமே வெற்றிலை, பாக்கு போடும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்று வெற்றிலை, பாக்கு போடுவதென்பது இமேஜை பாதிக்கிற விஷயமாக மாறிவிட்டது.

Published:Updated:
வெற்றிலை- பாக்கு
News
வெற்றிலை- பாக்கு

Doctor Vikatan: தினமும் வெற்றிலை, பாக்கு போடுவது சரியானதா அல்லது பலமான விருந்துக்குப் பிறகு மட்டும் போட்டுக்கொண்டால் போதுமா? வெற்றிலை, பாக்கு போட்டால் பற்கள் கறையாகும் என்பதால் பல் மருத்துவர்கள் அதைத் தவிர்க்கச் சொல்கிறார்களே.... தாம்பூலம் போடும் சரியான முறை என்ன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி | சென்னை
அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி | சென்னை

வெற்றிலை, பாக்கு போடுவது மிகவும் சரியானதே. நோயில்லாத வாழ்க்கைக்கு நம் முன்னோர்கள் காலங்காலமாகப் பின்பற்றிய நல்ல வழக்கம் இது. இதை ஆரோக்கியத்துக்கான அன்றாடப் பழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

திருமண வீடுகளிலும் விசேஷ விருந்துகளிலும் விருந்துக்குப் பிறகு போட்டுக்கொள்வதற்காக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்திருப்பார்கள். நம் உடலில் வாதம், பித்தம், கபம் என மூன்று விஷயங்கள் உண்டு. இந்த மூன்றும் குறையவும் கூடாது, அதிகரிக்கவும் கூடாது. சரியான அளவில் இருக்க வேண்டும்.

காலையில் வெற்றிலை, பாக்கு போடும்போது பாக்கின் அளவை சற்று அதிகரித்துக்கொள்ளலாம். துவர்ப்புச்சுவை கொண்ட பாக்கு, மலமிளக்கியாகச் செயல்படும். வயிற்றைச் சுத்தப்படுத்தக்கூடியது. மதியம் வெற்றிலை, பாக்கு போடும்போது சுண்ணாம்பின் அளவை சற்று அதிகரித்து எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் செரிமான சக்தி சீராவதுடன், உடலுக்குத் தேவையான இயற்கையான கால்சியம் சத்தும் சேர உதவும்.

இரவில் வெற்றிலை கூடுதலாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வெற்றிலை என்பது மவுத்வாஷ் போன்றும் செயல்படும். வாய் துர்நாற்றம் நீங்கவும், பற்களில் கிருமிகள் சேராமல் காக்கவும் இது உதவும். கபம் சேர்வதைத் தடுக்கும்.

இதுதான் சரியான காம்பினேஷன். பொதுவாக செரிமான சக்திக்கு நல்லது என்பதால் அந்தக் காலத்தில் மூன்று வேளைகளுமே வெற்றிலை, பாக்கு போடும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்று வெற்றிலை, பாக்கு போடுவதென்பது இமேஜை பாதிக்கிற விஷயமாக மாறிவிட்டது. படிக்காதவர்கள் செய்யும் செயல் போல பார்க்கப்படுகிறது.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புடன் உங்கள் விருப்பத்துக்காக வேறு எதையும் சேர்க்கக்கூடாது. ஆஸ்துமா, மண்டையில் நீர்கோத்தல் போன்ற பல விஷயங்களுக்கு வெற்றிலை மருந்தாகச் செயல்படுகிறது. இந்த காம்பினேஷனில் ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகளும் கிடைப்பதால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நல்லது. எலும்புகளுக்கு வலு சேர்க்கக்கூடியது. வாயுத்தொல்லை வராது.

வெற்றிலையின் நுனி, காம்பு நீக்கி, நரம்பை லேசாக எடுத்துவிட்டு, அளவாக சுண்ணாம்பு வைத்து, பாக்கு சேர்த்து போட வேண்டும். முதலில் வரும் இரண்டு உமிழ்நீரை துப்பிவிட வேண்டும். அடுத்தடுத்து வரும் உமிழ்நீரை மட்டும்தான் விழுங்க வேண்டும். அதேபோல கடைசியாக வருவதையும் துப்பிவிட வேண்டும். அதாவது ஐந்தாறு முறை சாற்றை விழுங்கிய பிறகு சக்கையோடு சேர்த்து துப்பிவிடலாம். நீண்டநேரம் வெற்றிலையை மென்றுகொண்டே இருக்கக்கூடாது. அதுதான் பற்களில் கறை படிய காரணமாகும்.

பல்
பல்

திரிபலா சூரணம், நாயுருவி பொடி, வேப்பங்குச்சி போன்றவற்றை வைத்து பல் துலக்கும்போது பற்களில் கறை படிவதைத் தவிர்க்கலாம். பற்களுக்கும் ஈறுகளுக்கும் பலம் தரும். சரியான முறையில் தாம்பூலம் தரிக்கும்போது செரிமானம் சீராவதுடன், ஆரோக்கியமும் மேம்படும். வெற்றிலையோடு வால்மிளகு, ஏலக்காய், கிராம்பு, சிறிது ஜாதிக்காய் சேர்த்து சாப்பிடுவது செரிமான சக்தியை இன்னும் சிறப்பாக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.