Published:Updated:

Doctor Vikatan: சருமத்துக்கும் கூந்தலுக்கும் தினமும் கற்றாழை ஜெல் பயன்படுத்துவது சரியா?

கற்றாழை
News
கற்றாழை

கற்றாழை ஜெல் நச்சுத்தன்மை மிக்கது. அதனால் அதை நேரடியாகப் பயன்படுத்துவதைவிட இரண்டு சொட்டுகள் ஆல்மண்டு ஆயில் கலந்து பயன்படுத்துவதே சரியானது.

Published:Updated:

Doctor Vikatan: சருமத்துக்கும் கூந்தலுக்கும் தினமும் கற்றாழை ஜெல் பயன்படுத்துவது சரியா?

கற்றாழை ஜெல் நச்சுத்தன்மை மிக்கது. அதனால் அதை நேரடியாகப் பயன்படுத்துவதைவிட இரண்டு சொட்டுகள் ஆல்மண்டு ஆயில் கலந்து பயன்படுத்துவதே சரியானது.

கற்றாழை
News
கற்றாழை

Doctor Vikatan: தினமும் கூந்தலுக்கும் சருமத்துக்கும் கற்றாழை ஜெல் பயன்படுத்தலாமா? ரெடிமேடு ஜெல் பயன்படுத்தலாமா அல்லது கற்றாழைச் செடியிலிருந்து பறித்துதான் பயன் படுத்த வேண்டுமா? எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.

கீதா அஷோக்
கீதா அஷோக்

தினமும் சருமத்துக்கு கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். ஆனால், அத்துடன் சில துளிகள் ஆல்மண்டு ஆயில் கலந்து பயன்படுத்த வேண்டும். கற்றாழை ஜெல் நச்சுத்தன்மை மிக்கது. அதனால் அதை நேரடியாகப் பயன்படுத்துவதைவிட இரண்டு சொட்டுகள் ஆல்மண்டு ஆயில் கலந்து பயன்படுத்துவதே சரியானது.

எல்லோருக்கும் ஃப்ரெஷ்ஷான கற்றாழை ஜெல் கிடைக்க வாய்ப்பில்லை. அவர்கள் ரெடிமெடு ஜெல் பயன்படுத்தலாம். ஆனால், ரெடிமேடு ஜெல்லில் ப்ரிசர்வேட்டிவ் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகே பயன்படுத்த வேண்டும். ப்ரிசர்வேட்டிவ் கலந்திருக்கும் பட்சத்தில் சிலருக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும்.

கற்றாழைச் செடியிலிருந்தும் அதன் ஜெல்லை நேரடியாக எடுத்துப் பயன்படுத்தலாம். ஆனால், உள்ளே உள்ள ஜெல் பகுதியை நல்ல தண்ணீரால் பத்து முறை நன்கு கழுவிய பிறகுதான் உபயோகப்படுத்த வேண்டும்.

கற்றாழை ஜெல்லை தலைக்கு நேரடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அப்படி நேரடியாகப் பயன்படுத்துவதால் வாக்ஸி ஃபங்கஸ் எனப்படும் தொற்று பாதிப்பை ஏற்படுத்தலாம். தலையில் அரிப்பையும் ஏற்படுத்தும்.

கூந்தல் பராமரிப்பு
கூந்தல் பராமரிப்பு
சித்தரிப்பு படம்

அதற்ப் பதிலாக கற்றாழையை பக்கவாட்டில் அறுத்து அதில் சிறிதளவு வெந்தயமும் கருஞ்சீரகமும் நிறைத்து ஒரு நூல் வைத்துக் கட்டி ஊறவிடவும். இரண்டு நாள்கள் கழித்து அதை ஜெல்லுடன் வழித்தெடுத்து மிக்ஸியில் அரைத்து தலைக்கு பேக் ஆக பயன்படுத்தி, கூந்தலை அலசலாம். இதை வாரம் ஒன்றிரண்டு முறை செய்தால் போதுமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.