Published:Updated:

Doctor Vikatan: பிரசவமாகி 9 வருடங்களான நிலையில் தொப்பை குறைய வழிகள் உண்டா?

தொப்பை

வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை அவ்வளவு சுலபத்தில் குறைக்க முடியாது. ஆனாலும் அது சாத்தியமில்லை என அர்த்தமல்ல. மிதமான கார்டியோ பயிற்சிகள், கூடவே உணவுக்கட்டுப்பாடும் அவசியம். எடையைக் குறைப்பதில் உணவுக்கட்டுப்பாட்டுக்கு 80 சதவிகித பங்கு உண்டு.

Doctor Vikatan: பிரசவமாகி 9 வருடங்களான நிலையில் தொப்பை குறைய வழிகள் உண்டா?

வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை அவ்வளவு சுலபத்தில் குறைக்க முடியாது. ஆனாலும் அது சாத்தியமில்லை என அர்த்தமல்ல. மிதமான கார்டியோ பயிற்சிகள், கூடவே உணவுக்கட்டுப்பாடும் அவசியம். எடையைக் குறைப்பதில் உணவுக்கட்டுப்பாட்டுக்கு 80 சதவிகித பங்கு உண்டு.

Published:Updated:
தொப்பை

என் வயது 36. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இரண்டுமே சிசேரியன் பிரசவங்கள். பிரசவத்துக்குப் பிறகு எனக்கு வயிறு பெருத்துவிட்டது. கடந்த 9 ஆண்டுகளாக என் வயிறு குறையவே இல்லை. 5 மாத கர்ப்பிணி போலவே தெரிகிறேன். குழந்தை பெற்ற பிறகு பெருத்துப்போகும் வயிற்றை உடனே குறைக்காவிட்டால் பிறகு குறைக்க வாய்ப்பில்லை என்கிறார்களே, உண்மையா? வயிறு குறைய ஏதேனும் வொர்க் அவுட் உண்டா? நான் என்ன செய்ய வேண்டும்?

ஷீபா தேவராஜ்
ஷீபா தேவராஜ்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

பிரசவத்துக்கு பிறகு வயிறு, இடுப்பைச் சுற்றி பருமன் அதிகரிப்பது இயல்பானதுதான். அதனால்தான் பிரசவமானதும் உடற்பயிற்சி செய்யச் சொல்லி மருத்துவர்கள் வலியுறுத்தி அனுப்புவார்கள்.

சுகப்பிரசவம் என்றால் எத்தனை நாளில் இருந்து, சிசேரியன் என்றால் எத்தனை நாள்களுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி, உடற்பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்து அனுப்புவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்பயிற்சிகள் வயிற்றைச் சுற்றி பருமன் அதிகரிக்காமல் காப்பதோடு, பிரசவித்த பெண்களை உடல் உறுதியுடன் வைத்திருக்கவும் உதவும். நீங்கள் கேள்விப்பட்ட தகவல் உண்மைதான். பிரசவமான சில நாள்களிலேயே பருமனைக் குறைக்கும் பயிற்சிகளைத் தொடங்கிவிட வேண்டும். தாமதித்தால் எடையைக் குறைப்பது பெரும் சிரமமாகும்.

உங்கள் விஷயத்தில் நீங்கள் 9 வருடங்களாக எந்தப் பயிற்சிகளையும் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே உங்கள் வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை அவ்வளவு சுலபத்தில் குறைக்க முடியாது. ஆனாலும் அது சாத்தியமில்லை என அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

Obesity
Obesity

இப்போதுகூட நீங்கள் அதற்கான முயற்சிகளை தொடங்கலாம். 9 வருடமாக எந்தப் பயிற்சியும் செய்யாததால் மெதுவாகவே பயிற்சிகளைத் தொடங்க வேண்டும். முதலில் ஃபிட்னெஸ் பயிற்சியாளரை சந்தித்து உங்கள் தேவையை விளக்குங்கள். நீங்கள் வாரத்தில் 4 நாட்களுக்கு ஸ்ட்ரென்த் டிரெயினிங் செய்ய வேண்டியிருக்கும்.

மிதமான கார்டியோ பயிற்சிகள் செய்யுங்கள். கூடவே உணவுக்கட்டுப்பாடும் அவசியம். எடையை குறைப்பதில் உணவுக்கட்டுப்பாட்டுக்கு 80 சதவிகித பங்கு உண்டு. உங்கள் விஷயத்தில் இதற்கு ஒன்றிரண்டு வருடங்கள் ஆகலாம்.

வயிற்றுப்பகுதி கொழுப்பு கரைய சற்று காலம் பிடிக்கும். எனவே பொறுமையை இழக்காமல் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். ஸ்ட்ரென்த் டிரெயினிங் பயிற்சிகளை முறையான ஃபிட்னெஸ் பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு மெள்ள மெள்ள அதிகரித்து தீவிரப்படுத்துங்கள். டிரெயினருடன் பேசி, உங்களுக்கான எடைக்குறைப்பு இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்.

உதாரணத்துக்கு, முதலில் டம்பெல்ஸில் தொடங்கி பிறகு பார்பெல்ஸுக்கு நகருங்கள். தீவிரமான வெயிட் டிரெயினிங்தான் கொழுப்பைக் கரைக்க உதவும். குறிப்பாக வயிற்றுப்பகுதி போன்றவற்றில் உள்ள அழுத்தமான கொழுப்பைக் கரைக்க அப்படிப்பட்ட பயிற்சிகள் மிக அவசியம்.

Gym
Gym

என்ன சாப்பிட வேண்டும் என்பதும் முக்கியம். ஊட்டச்சத்து ஆலோசகரின் ஆலோசனையுடன் கலோரி கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, ஆரோக்கியமாக சாப்பிடுவதையும் பின்பற்றுங்கள். எந்த முயற்சியானாலும் அதில் தொடர்ந்து ஈடுபடுவது மட்டுமே பலன் தரும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.