Published:Updated:

Doctor Vikatan: நீரிழிவுக்கு முந்தைய நிலை... நிச்சயம் நீரிழிவாக மாறுமா?

நீரிழிவு நோய்
News
நீரிழிவு நோய்

ஒருவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யும்போது வெறும் வயிற்றில் அவரது ரத்தச் சர்க்கரை அளவானது 126-க்கு மேல் இருந்தாலோ, சாப்பிட்ட பிறகு 200-க்கு மேல் இருந்தாலோ அதை நீரிழிவு என்று உறுதிசெய்வோம்.

Published:Updated:

Doctor Vikatan: நீரிழிவுக்கு முந்தைய நிலை... நிச்சயம் நீரிழிவாக மாறுமா?

ஒருவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யும்போது வெறும் வயிற்றில் அவரது ரத்தச் சர்க்கரை அளவானது 126-க்கு மேல் இருந்தாலோ, சாப்பிட்ட பிறகு 200-க்கு மேல் இருந்தாலோ அதை நீரிழிவு என்று உறுதிசெய்வோம்.

நீரிழிவு நோய்
News
நீரிழிவு நோய்

Doctor Vikatan: நான் ஆறு மாதங்களுக்கொரு முறை ரத்தப் பரிசோதனை செய்து, நீரிழிவு இருக்கிறதா என்பதைக் கண்காணிப்பேன். கடந்த முறை டெஸ்ட் செய்தபோது எனக்கு ப்ரீடயாபட்டிஸ் நிலை என்று ரிசல்ட் வந்திருக்கிறது. அப்படியானால் எனக்கு சீக்கிரமே நீரிழிவு வந்துவிடும் என அர்த்தமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் டி. பழனியப்பன்.

நீரிழிவு மருத்துவர் டி. பழனியப்பன் | சென்னை
நீரிழிவு மருத்துவர் டி. பழனியப்பன் | சென்னை

ஒருவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யும்போது வெறும் வயிற்றில் அவரது ரத்தச் சர்க்கரை அளவானது 126-க்கு மேல் இருந்தாலோ, சாப்பிட்ட பிறகு 200-க்கு மேல் இருந்தாலோ அதை நீரிழிவு என்று உறுதி செய்வோம்.

அதுவே ரத்தச் சர்க்கரை அளவானது வெறும் வயிற்றில் 99 முதல் 125 வரை இருந்தாலோ, சாப்பிட்ட பிறகு 140 முதல் 199 வரை இருந்தால், அதை 'ப்ரீ டயாபட்டிஸ்' எனப்படும் நீரிழிவுக்கு முந்தைய நிலை என்று சொல்வோம்.

ப்ரீ டயாபட்டிஸ் என கண்டுபிடிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு எதிர்காலத்தில் நிச்சயம் அது நீரிழிவாக மாறும் வாய்ப்புகள் அதிகம். எனவே ப்ரீ டயாபட்டிஸ் என்பது உறுதியானவர்கள், முதல் வேலையாக நேரடியாக எடுத்துக்கொள்ளும் சர்க்கரையை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். காபி, டீயில் சேர்க்கும் சர்க்கரை முதல், இனிப்புகள், ஜாம், இனிப்பு சேர்த்த உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

இட்லி, தோசை, சாதம் என கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைக் குறைத்துவிட்டு சிறுதானிய உணவுகளுக்கு மாறலாம். அந்த உணவுகள் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். எனவே நீங்கள் ப்ரீ டயாபட்டிஸ் நிலையிலேயே பல வருடங்கள் இருக்கவும் நீரிழிவு நிலையை எட்டாமலும் காத்துக்கொள்ளலாம்.

நீரிழிவு
நீரிழிவு

அடுத்து வாழ்வியல் முறை மாற்றம் கவனிக்கப்பட வேண்டும். உடற்பயிற்சியை வாழ்க்கையின் அன்றாடக் கடமையாக மாற்ற வேண்டும். தினமும் குறைந்தது 5 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும். மாடிப்படிகளில் ஏறி இறங்க வேண்டும். முடிந்தவர்கள் ஜிம்மில் சேர்ந்தும் உடற்பயிற்சிகள் செய்யலாம்.

இவற்றையெல்லாம் செய்யத் தொடங்கினால் நீரிழிவு பாதிப்பிலிருந்து விலகி இருக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.