Published:Updated:

`இந்தியாவில் கோவிட் 4-வது அலை தொடங்கிவிட்டது!' - எச்சரிக்கும் மருத்துவர்

கோவிட்-19

கோவிட் நோய்த்தொற்று எண்ணிக்கை குறித்து தினமும் ஆய்வு செய்து வருகிறது. தொற்று எண்ணிக்கை அதிகமாக உயரும்போது கண்டிப்பாக அரசே மக்களுக்கு தகுந்த தகவலைக் கூறும்.

`இந்தியாவில் கோவிட் 4-வது அலை தொடங்கிவிட்டது!' - எச்சரிக்கும் மருத்துவர்

கோவிட் நோய்த்தொற்று எண்ணிக்கை குறித்து தினமும் ஆய்வு செய்து வருகிறது. தொற்று எண்ணிக்கை அதிகமாக உயரும்போது கண்டிப்பாக அரசே மக்களுக்கு தகுந்த தகவலைக் கூறும்.

Published:Updated:
கோவிட்-19

கோவிட்-19 நான்காம் அலை ஜூன் மாதத்தில் உச்சத்தை அடைந்து அக்டோபர் மாதம் வரை அதன் தாக்கம் இருக்க வாய்ப்பிருப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். ``ஐஐடி கான்பூர் கோவிட்-19 தொற்று குறித்த தகவல்களைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது. அவர்களின் கணிப்புபடி கோவிட் 19 நான்காம் அலை ஜூன் மாதத்துக்குப் பின், உச்சமடைந்து அக்டோபர் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அதிக துல்லியமானது" என்று தெரிவித்துள்ளார்.

Covid -19 Pandemic
Covid -19 Pandemic
Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கர்நாடக மாநிலத்தில் தளர்த்தப்பட்டிருந்த கோவிட்-19 கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியைக் பின்பற்றுவது மீண்டும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. தமிழகத்திலும் ஐஐடி சென்னை உள்ளிட்ட இடங்களில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கை குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் கேட்டோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``தமிழக அரசு தற்போது என்றில்லாமல், கடந்த இரண்டு வருட காலமாகவே நோய்த்தொற்று எண்ணிக்கை குறித்து தினமும் ஆய்வு செய்து வருகிறது. தொற்று எண்ணிக்கை அதிகமாக உயரும்போது கண்டிப்பாக அரசே மக்களுக்கு அவசியமான தகவலைக் கூறும். அச்சமூட்டும் வகையில் தற்போது எங்கும் பாதிப்புகள் இல்லை" எனக் கூறினார்.

பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம்
பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம்

கோவிட் 19 நான்காவது அலை குறித்து தொற்றுநோய் மருத்துவர் சுப்ரமணியம் சுவாமிநாதனிடம் கேட்டோம்.

``அலை கணக்கிடப்படுவதே ஒரு வார தொற்று பாதிப்பை வைத்துதான். ஒருநாள் நோய்த்தொற்று பாதிப்பை வைத்து நம்மால் எதையும் கூற முடியாது. ஏழு நாள்கள் கிடைத்த நோய்த்தொற்று எண்ணிக்கையை வைத்து, அதில் எண்ணிக்கை கணிசமாக உயரும்போது நோய்த்தொற்று அலை ஏற்பட்டதாகக் கருதப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவிட்டை பொறுத்தவரை தற்போதே நோய்த்தொற்று எண்ணிக்கை உயர ஆரம்பித்துவிட்டது. இந்தியா முழுவதுமே தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதை வைத்துப் பார்க்கும்போது இந்தியாவில் 4-வது அலை தொடங்கி விட்டது எனலாம். சீனா போன்ற நாடுகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளுக்குப் பிறகு கூட நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

மருத்துவர் சுப்ரமணியம் சுவாமிநாதன்
மருத்துவர் சுப்ரமணியம் சுவாமிநாதன்

இந்தியாவில் அவ்வளவு அதிகமாகத் தொற்று எண்ணிக்கை இல்லை. ஆனால், சீனா போன்ற நாடுகளில் கோவிட்-19 பரிசோதனைகள் அதிகம் நடத்தப்படுவதால் அங்கு தொற்று பாதிப்பும் அதிகமாகத் தெரிய வருகிறது. இங்கு அவ்வளவு சோதனைகள் செய்யப்படுவது இல்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்து தொற்றின் எண்ணிக்கையைக் கணக்கிடலாம்.

தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு நோயாளி இருந்தால் வெளியில் பத்தாயிரம் பேருக்காவது தொற்று இருக்க வாய்ப்புள்ளது எனக் கூறலாம். தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சில கோவிட் 19 நோயாளிகளைப் பார்க்க முடிகிறது. இந்த அலை ஜூன் மாதம் உச்சமடையும், பின்பு சரிவடையும் எனக் கூறுவது எல்லாம் கணிப்புதான். உறுதியாகச் சொல்ல முடியாது. இதற்கு முன்பு பரவிய BA 2 திரிபு ஜனவரி மாதத்தில் தொடங்கி மிகவும் வேகமாக ஒரு மாதத்திலேயே சரிவடைந்தது.

COVID
COVID

தற்போது உள்ள திரிபு அதைவிட வேகமாகப் பரவுகிறது. எனவே, இது விரைவிலேயே உச்சத்தைத் தொட்டு சரிவடையும் வாய்ப்புள்ளது. ஜூன் மாதத்துக்குள் இந்த அலை முடியக்கூட செய்யலாம். தொற்றின் பாதிப்பு அளவை நாம் உயிரிழப்பு எண்ணிக்கையை வைத்துதான் கணக்கிடுவோம். தற்போது பரவும் வைரஸால் உயிரிழப்பே இல்லை எனக் கூற முடியாது. கடந்த ஆண்டு ஏற்பட்டதைப் போல் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism