Published:Updated:

கொரோனாவுக்குச் சிகிச்சை அளித்த டாக்டருக்கு வைரஸ்! -கர்நாடகாவில் அதிகரிக்கும் எண்ணிக்கை

கொரோனா
கொரோனா

கொரோனாவுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கொரோனா, கர்நாடகாவில் சோகம்!

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரம் காட்டி வரும் நிலையில், கொரோனா வைரஸால், இந்தியாவில் முதல் உயிரிழப்பை சில தினங்களுக்கு முன் கர்நாடக மாநிலம் பதிவு செய்தது. கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தவர் காலபுராகியைச் சேர்ந்த 76 வயது முதியவர்.

கொரோனா
கொரோனா

அவர் கொரோனாவால் பாதிப்படைந்துதான் உயிரிழந்தாரா என்பது நிரூபிக்கப்படவில்லை. வேறு சில உடல்நிலைப் பிரச்னைகளாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், முதியவருக்கு சிகிச்சை அளித்துவந்த காலபுராகி பகுதியைச் சேர்ந்த 60 வயது மருத்துவரும் அவரது குடும்பமும் வீட்டுத் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர். கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் 45 வயது மகளுக்குக் கொரோனா பாசிட்டிவ் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவரின் தனிமைப்படுத்தல் காலம் நீட்டிக்கப்பட்டது.

சீனாவில் கொரோனா
சீனாவில் கொரோனா

இப்போது அந்த மருத்துவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள், பரிசோதனையின் இறுதியில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காய்ச்சல், இருமல், தொண்டை கரகரப்பு இல்லை... ஆனாலும் கொரோனா அலர்ட்! FightCovid-19
அவர் மருத்துவமனை ஐஸோலேஷன் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி, கர்நாடகாவில் 13 பேருக்குக் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு