Published:Updated:

மாஸ்க் - சானிட்டைஸர்கள் கிடைக்கவில்லையென்றால், என்ன செய்யவது? - மருத்துவர் விளக்கம்

N95 மாஸ்க்
N95 மாஸ்க்

மாஸ்க் இல்லாதவர்கள் என்ன செய்யலாம்? மாற்று யோசனை!

கொரோனா வைரஸைத் தடுக்க, மாஸ்க் அணியுங்கள் - சானிட்டைஸர் உபயோகிங்கள் எனத் தொடர்ச்சியாக சொல்லப்பட்டுவரும் சூழலில், அவற்றின் விற்பனை, கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் அந்தப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்தத் தட்டுப்பாடு, மக்கள் மத்தியில் அச்சமாக உருமாறத் தொடங்கியுள்ளது.

சானிட்டைஸர்
சானிட்டைஸர்

விகடன் வாசகர்கள் சிலர், சமூக ஊடகங்களின் வழியாக நம்மைத் தொடர்புகொண்டு,

`மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே... மாஸ்க் இல்லாதவர்கள் என்ன செய்யலாம்?' `சானிட்டைஸர் கிடைக்காவிட்டால் என்ன செய்வது?'

போன்ற கேள்விகளை முன்வைத்தனர்.

வாசகர்களின் இந்தக் கேள்விகளை, பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்டோம்.

டாக்டர் ஃபரூக் அப்துல்லா
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

``மாஸ்க் அணிவதன் மூலம், கொரோனா தொற்றிலிருந்து ஒருவர் முழுமையாகக் காக்கப்படலாம் என்பது இதுவரை எங்கும் எதிலும் நிரூபிக்கப்படாத கருத்து. உலக சுகாதார நிறுவனமேகூட, மாஸ்க் உபயோகம் கட்டாயம் என எங்கும் கூறவில்லை. மாஸ்க் அணியாவிட்டால் ஆபத்து என்பது, ஒரு பொது சுகாதார அச்சுறுத்தல்தான் என்பதால், மாஸ்க் வாங்கியே ஆகவேண்டுமென்று மக்கள் யோசிக்க வேண்டாம்.

மாஸ்க் அணிவது - கொரோனா வைரஸ் தடுப்பு
மாஸ்க் அணிவது - கொரோனா வைரஸ் தடுப்பு

மாஸ்க் இருந்தால் அதை உபயோகப்படுத்துங்கள், இல்லையென்றால், அதற்குப் பதில் கைக்குட்டையை உபயோகப்படுத்துங்கள். ஒரு நாளைக்கு ஒரு கைக்குட்டை என உபயோகப்படுத்திப் பழகுங்கள். தும்மல் இருமலின் தீவிரத்தைப் பொறுத்து, அதன் வீரியத்துக்கேற்ப அடிக்கடி கைக்குட்டையை மாற்றிக்கொள்வது நல்லது. தும்மல், இருமல் தொந்தரவு இருப்பவர்கள், முடிந்தவரை உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்வது சிறப்பு.

உயிரைப் பறிக்குமா கொரோனா... ? தடுக்கவும் தப்பிக்கவும் ஆலோசனைகள் சொல்கிறார் பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. வீடியோ : அபிநய சௌந்தர்யா #Health #Coronavirus #COVID19

Posted by Vikatan EMagazine on Tuesday, March 10, 2020

சானிட்டைஸர் என்பது தொற்றைத் தடுக்க உதவும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மைதான். சானிட்டைஸர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருப்பவர்கள், அதற்குப் பதிலாக சோப் வாட்டர் கொண்டு அடிக்கடி கைகழுவுவது நல்ல பலனைத் தரும்.

சோப் வாட்டர் - கை கழுவவும்
சோப் வாட்டர் - கை கழுவவும்

எந்தச் சூழலிலும், தன்சுத்தம் மட்டுமே கொரோனாவைத் தடுக்க முழுமையாக உதவும் என்பதால், அதில் மட்டும் எப்போதும் கவனமாக இருங்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு