Published:Updated:

காய்ச்சல், இருமல், தொண்டை கரகரப்பு இல்லை... ஆனாலும் கொரோனா அலர்ட்! FightCovid-19

கொரோனா
கொரோனா

இந்த நிலையை `அறிகுறிகளற்ற நோய் நிலை' என்று மருத்துவர்கள் வகைப்படுத்துகின்றனர். அந்த வகையில் அறிகுறிகள் ஏதும் காட்டாத கொரோனா தொற்றை ``அறிகுறிகளற்ற கொரோனா" என்றும் அழைக்கலாம்.

உலக சுகாதார நிறுவனத்தால் பேண்டெமிக் நோய்த்தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனா. சீனாவில் தொடங்கி உலக நாடுகள் பலவற்றையும் நடுங்கச் செய்துள்ளது. கொரோனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவைத் தொடர்ந்து ஈரான் இத்தாலி போன்ற நாடுகளில் நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா
கொரோனா

கொரோனாவின் தாக்கம் கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி மட்டும் கொரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 100 க்கும் மேல். இந்த எண்ணிக்கை இன்னும்அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கொரோனாவை சில அறிகுறிகளை வைத்தே கண்டறிய முடியும் என்று சொல்லப்படுகிறது. இருமல், தலைவலி, தொண்டைக் கரகரப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் கொரோனாவாக இருக்குமோ என்று சந்தேகப்படவும் பரிசோதனைக்குட்படவும் வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், இந்த அறிகுறிகள் இல்லாமலும் ஒருவரை கொரோனா பாதித்திருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கொரோனா
கொரோனா
vikatan

இந்த நிலையை 'அறிகுறிகளற்ற நோய் நிலை'என்று மருத்துவர்கள் வகைப்படுத்துகின்றனர். அந்த வகையில் அறிகுறிகள் ஏதும் காட்டாத கொரோனா தொற்றை "அறிகுறிகளற்ற கொரோனா" என்றும் அழைக்கலாம். குறிப்பாக இந்த வகை நோய் பாதிப்பு தென் கொரியா மற்றும் இத்தாலிநாடுகளில்தான் அதிகமாக ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் அந்த நாடுகளில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாகப் பதிவாகி உள்ளது.

அறிகுறிகளற்ற கொரோனா நோய் பாதிப்பு குறித்து பொது மருத்துவர் அர்ஷத் அகீலிடம் பேசினோம்.

மருத்துவர் அர்ஷத் அகீல்
மருத்துவர் அர்ஷத் அகீல்

``இது ஓர் அசாதாரண நிலை. பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு எந்த அறிகுறியும் இருக்காது. ஆனால், ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குப்பின் நோய் கண்டிப்பாகத் தாக்கும். அறிகுறிகளற்ற நோய் நிலை கொரோனா உட்பட பல நோய்களுக்கும் பொருந்தும்.

பொதுவாக எந்த ஒரு நோயுமே ஒருவரைத் தாக்குவதற்கு குறைந்த பட்சம் ஒரு வாரகால அவகாசம் எடுத்துக்கொள்ளும் அந்த நேரத்தில்தான் நோய்க்கிருமிகள் உடலுக்குள் தாக்குதல்களை ஏற்படுத்தி நோய் உண்டாக வழி வகுக்கின்றன. ஆனால், கொரோனா வைரஸைப் பொறுத்தவரையில் இரண்டு வாரங்கள் கழித்துதான் நோய் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

நோய்க் கிருமிகள் உடலுக்குள் அந்த இரண்டு வார கால அளவில் தான் தாக்குதல்களை ஏற்படுத்தி நோய் தொற்றினை அதிகரித்து நோய்பாதிப்பை உறுதி செய்கிறது. அந்த இடைவெளியில்தான் பாதிக்கபட்ட நபருக்கு அறிகுறிகள் தென்படும். அதை வைத்து அவர் சுதாரித்துக்கொண்டு மருத்துவரை அணுக வேண்டும்.

Doctors about Corona
Doctors about Corona
The Economic Times

அறிகுறிகளற்ற கொரோனா தொற்றில் இரண்டு வாரங்களில் எந்த அறிகுறிகளும் இருக்காது. சிறு இருமலோ தொண்டை வலியோ இருக்காது. ஆனால், அந்த இரண்டு வாரம் கழித்து நோய் பாதிப்பு உறுதியாகிவிடும்.

இந்தியாவில் இதுவரை அறிகுறிகளற்ற கொரோனா பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால் இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் இந்த வகை நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனால்தான் அங்கெல்லாம் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளன.

அறிகுறிகளற்ற கொரோனா பாதிப்புள்ள ஒரு நபருக்கு தனக்குக் கொரோனா இருப்பது தெரியாது. அதனால், அவர் எப்போதும்போல் மற்றவர்களிடம் சகஜமாகப் பேசிப் பழகிக்கொண்டிருப்பார். அவருக்கு இருக்கும் அந்த நோய்த்தொற்று மற்றவர்களுக்கு எளிதில் பரவும் அபாயம் உள்ளது.

Corona virus
Corona virus
`தும்மல் கொரோனாவின் அறிகுறியா?!' - சாதாரண சளிக் காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கும் உள்ள வேறுபாடுகள்

இதைத் தடுக்கவும் முடியாது. யாருக்கு வேண்டுமானாலும் இந்த நிலை ஏற்படலாம். ஆனால், பெரும்பாலும் இந்தவகை நோய் பாதிப்பு வயதானவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்குமே அதிகம் வர வாய்ப்புள்ளது" என்றார் அர்ஷத் அகீல்.

அடுத்த கட்டுரைக்கு