Election bannerElection banner
Published:Updated:

வைரஸ் தொற்று... கறுப்பு மேலங்கி, கோட் சீருடையை மாற்றக்கோரிய நீதிபதி... வைராலஜிஸ்ட் விளக்கம்!

Court
Court

கறுப்பு நிறம் வைரஸ் கிருமிகளை கவரும் தன்மை கொண்டது என்று இதுவரை அறிவியல்பூர்வமாக எங்கும் நிரூபிக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது தலைமை நீதிபதி எதன் அடிப்படையில் இந்தக் கருத்தை முன்வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

கோவிட்-19 இன்று ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. நாட்டில் நோய்த்தொற்றின் பரவலைத் தடுக்கும் நோக்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக நாட்டில் தொழில் நிறுவனங்கள் தொடங்கி பெட்டிக்கடைகள்வரை 50 நாள்களுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கின்றன.

corona
corona

தற்போது மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. நோய்த் தீவிரம் தணிந்தபாடில்லை என்றாலும் இந்த ஊரடங்குத் தளர்வு காரணமாக நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலை திரும்பிக் கொண்டிருக்கிறது.

`எங்களால் முழு உறவையும் துண்டிக்க முடியும்’ - சீனாவுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் ட்ரம்ப்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நீதிமன்றங்களும் மூடப்பட்டு, வழக்குகள் மற்றும் நீதித்துறை விவகாரங்கள் காணொலிக் காட்சி மூலமாகக் கையாளப்பட்டு வந்தன. இப்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டு வழக்குகளை நீதிபதிகள் நேரில் வந்து விசாரித்து வருகின்றனர். வழக்கறிஞர்களும் நேற்று முன்தினம் முதல் நீதிமன்றங்களுக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

High Court
High Court

இந்த நிலையில், நீதிமன்றங்களுக்கு நேரில் வந்து வழக்கு விசாரணையில் ஈடுபடும் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும், தங்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார்கள். மேலும் தாங்கள் அணியும் கறுப்பு நிற மேலங்கி மற்றும் கோட், வைரஸ் தொற்றுக்கு வாய்ப்பளிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக, அவற்றின் நிறத்தை மாற்ற ஆலோசித்து வருகின்றனர்.

இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே கூறுகையில், "நோய்த்தொற்றின் காரணமாக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகங்களில் தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டியுள்ளது. வைரஸ் கிருமி தொற்றுக்கு கறுப்பு நிறம் அதிக வாய்ப்பளிக்கும் என்று தெரியவந்துள்ளது.

Black coat
Black coat

எனவே, நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் கறுப்பு நிற கோட் மற்றும் மேலங்கிகளை இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது. இதே நிலை தொடரும்பட்சத்தில், வரும் நாள்களில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு, நீதிமன்ற சீருடையில் எந்த வகையான நிற மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்பதை விரைவில் ஆலோசித்து அறிவிக்கவிருக்கிறோம்" என்றிருக்கிறார். இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் வழக்கமாக அணியும் கறுப்பு அங்கியைத் தவிர்த்து.. முழு வெள்ளை ஆடையில் வர வேண்டும் என பார் கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி பாப்டே, கறுப்பு நிறம் குறித்துக் கூறியுள்ளதைப் பற்றி அறிய, பிரபல வைராலஜிஸ்ட் ஜெயஸ்ரீ ஷர்மாவைத் தொடர்புகொண்டோம்.

வைராலஜிஸ்ட் ஜெயஸ்ரீ  ஷர்மா
வைராலஜிஸ்ட் ஜெயஸ்ரீ ஷர்மா

``கறுப்பு நிறம் வைரஸ் கிருமிகளை அதிகம் கவரும் நிறம் எனக் கூறுவது எனக்கு முற்றிலும் புதிய செய்தியாக இருக்கிறது. கறுப்பு நிறம் வைரஸ் கிருமி கவரும் தன்மை கொண்டது என்று இதுவரை அறிவியல்பூர்வமாக எங்கும் நிரூபிக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது தலைமை நீதிபதி எதன் அடிப்படையில் இந்தக் கருத்தை முன்வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

மற்ற நிறங்களைவிட கறுப்பு நிறம் அதிக வெப்பத்தை இழுத்து, தக்கவைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. அதன் காரணமாகத்தான் கோடைக்காலத்தில் கறுப்பு நிற ஆடைகளைத் தவிர்க்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக, கறுப்பு நிறம் கொசுக்களை அதிகம் கவரும் தன்மை கொண்டது. ஆனால், அந்த ஈர்ப்புக்குக் காரணமும், அந்த வெப்பமே என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி கறுப்பு நிறத்துக்கும் வைரஸ் கிருமிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

corona
corona
``லாக்டௌன் தளர்வின் பாசிட்டிவ் நெகட்டிவ் பக்கங்கள்!" - விளக்கும் வைராலஜிஸ்ட் #ExpertOpinion

நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்றங்களுக்குத் தாங்கள் அணியும் கறுப்பு மேலங்கியைப் பெரும்பாலும் தினமும் துவைப்பதில்லை. வாரம் ஒருமுறை அதைச் சலவை செய்வதே அதிகம் எனலாம். மேலும், இது கோடை என்பதால் கறுப்பு தவிர்க்கப்பட வேண்டிய நிறம். எனவே, அந்த அங்கியைத் தவிர்க்க வேண்டிய சுகாதாரக் காரணங்களை முன்னிறுத்தி தலைமை நீதிபதி இந்தக் கருத்தைக் கூறியிருக்கலாம். ஆனால் கறுப்பு நிறத்துக்கும் வைரஸ் கிருமிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்வேன்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு