Published:Updated:

`க்ளோர்ஹெக்ஸிடின்' மௌத்வாஷ்... கோவிட்-19 பரவலைத் தடுக்குமா? - ஆய்வு முடிவு

mouth wash
mouth wash

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களின் பரிந்துரைப்படி, 0.2% க்ளோர்ஹெக்ஸிடின் (chlorhexidine) 10 மிலி கொண்டு 30 விநாடிகள் கொப்பளித்தால் இரண்டு மணி நேரத்துக்கு நோய்ப் பரவலைத் தடுக்கும்.

கோவிட்-19 வைரஸுக்கான தடுப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சை மருந்துகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கொரிய பல்கலைக்கழகம் தன் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டிருக்கிறது. `க்ளோர்ஹெக்ஸிடின்(chlorhexidine) கொண்ட மௌத்வாஷ் பயன்படுத்தும்போது, அது கொரோனா பரவலைத் தடுக்க கைகொடுக்கும்' என்கிறார்கள் இந்த ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

corona
corona

`க்ளோர்ஹெக்ஸிடின் மௌத்வாஷ் பயன்படுத்தும்போது வாயில் இருக்கும் உமிழ்நீருடன் கலந்திருக்கும் வைரஸ்கள், சுமார் இரண்டு மணி நேரத்துக்கு அழிக்கப்படுகின்றன' என்று தெரியவந்துள்ளது. ஒருவரின் உமிழ்நீரிலிருந்துதான் மற்றவர்களுக்குக் கோவிட்-19 அதிகமாகப் பரவுகிறது. எனவே, இதை மருத்துவமனை மற்றும் பொது இடங்களில் இருக்கும்போது மக்கள் பயன்படுத்துவது பரவலை வெகுவாகத் தடுக்கும் என்று கூறப்படுகிறது. என்றாலும், இரண்டு மணிநேரத்துக்குப் பின்னர், மீண்டும் உமிழ்நீரில் வைரஸ்களின் எண்ணிக்கை அதிகமாக ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

`6-ம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு!’ - அதிர்ச்சி கொடுத்த கோவை பள்ளி

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களின் பரிந்துரைப்படி, 0.2% க்ளோர்ஹெக்ஸிடின் (chlorhexidine) 10 மிலி கொண்டு 30 விநாடிகள் கொப்பளித்தால் இரண்டு மணி நேரத்துக்கு நோய்ப் பரவலைத் தடுக்கும். மக்கள் மருத்துவமனைக்குச் செல்ல நேரிடும்போது இப்படிச் செய்வது, பரவலைத் தடுத்துப் பாதுகாப்புத் தரவல்லது என்று கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, விமானப் பயணம் உட்பட இரண்டு மணி நேரத்துக்கு உட்பட்ட எல்லா பயணங்களின்போது இதைப் பயன்படுத்தி பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

mouth wash
mouth wash

ஐசிபிஏ (ICPA Health Products Ltd) எனப்படும் இந்திய நிறுவனம், வாய்வழி சுகாதார சாதனங்களைப் பல நாடுகளிலும் தயாரித்துவரும் நிலையில், இந்த க்ளோர்ஹெக்ஸிடின் கொண்ட மௌத்வாஷையும் தயாரிக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு