Published:Updated:

அமெரிக்காவில் `கோவிட் டோ'... இந்தியாவில் கொரோனா சருமப் பிரச்னை அறிகுறிகள் எதுவும் இல்லை!

Corona
Corona

`நோய் மிகவும் லேசான தாக்கத்துடன் இருப்பதால் வைரஸ் உடலில் பிரதி செய்ய முடியாமல் போனதால் அது பரிசோதனையின்போது கண்டறியப்படாமல் போக வாய்ப்பு உண்டு' என்கிறார்கள் நிபுணர்கள்.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்க, இந்த வைரஸின் அறிகுறிகளும் மாறிக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில், அமெரிக்க கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பலரும் கால் விரல்களில் புண்களுடன் மருத்துவமனைக்கு வர, இது கொரோனாவின் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று யூகிக்கிறார்கள் மருத்துவர்கள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனாவின் முதன்மை அறிகுறிகளான இருமல், காய்ச்சல் ஆகியவற்றுடன் மன உளைச்சல், மோந்துபார்க்கும் தன்மை இழப்பது போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. இதனுடன், `கோவிட் டோ (Covid Toe)’ எனப்படும் கால்விரல் புண்களும் சேர்க்கப்பட வேண்டும்' என்று சரும மருத்துவர்கள் வலியுறுத்திவருகிறார்கள். ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலியிலும் நிறைய பேர் இதுபோன்ற புண்களால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், இது கொரோனாவின் அறிகுறியாக இருக்குமா என்று உறுதியாகக் கூறமுடியவில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

`776 பாசிட்டிவ்; ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை!’- அமைச்சர் விஜயபாஸ்கர் #NowAtVikatan

அமெரிக்காவில் `கோவிட் டோ’ எனப்படும் இந்தக் கால் விரல் புண், வீக்கம், எரிச்சல், அரிப்பு போன்றவற்றால் கண்டறியப்படுகிறது. ஆரம்பத்தில், ஒரு விரல் வீங்குவதும் சிவந்து போவதுமாகத் தொடங்கி, பின்னர் நாளாக ஆக அது பர்பிள் நிறமாக மாறி மற்ற விரல்களையும் பாதிக்கிறது. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்யும்போது, சிலருக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வருவது மருத்துவர்களைக் குழப்புகிறது.

கொரோனா பரவல்
கொரோனா பரவல்

`நோய் மிகவும் லேசான தாக்கத்துடன் இருப்பதால் வைரஸ் உடலில் பிரதி செய்ய முடியாமல் போனதால் அது பரிசோதனையின்போது கண்டறியப்படாமல் போக வாய்ப்பு உண்டு' என்கிறார்கள் நிபுணர்கள்.

`கோவிட் டோ' குறித்து இன்னும் நிறைய குழப்பங்கள் இருந்தாலும், இதைப் புறக்கணிக்க முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

கொரோனா வைரஸ் எப்படி விரல் புண்ணை ஏற்படுத்துகிறது என்பது பற்றி அறியமுடியவில்லை என்றாலும், இந்த வைரஸின் இன்ஃபிளமேட்டரி தன்மை இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று யூகிக்கப்படுகிறது. `கோவிட் டோ' உள்ளவர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது என்றாலும், இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்காவில் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சரும மருத்துவர் மற்றும் பேராசிரியர் ஜி.இளங்கோவன்
சரும மருத்துவர் மற்றும் பேராசிரியர் ஜி.இளங்கோவன்

``கோவிட்-19 வைரஸால் இதுபோன்ற சருமப் பிரச்னைகள் இதுவரை இந்தியாவில் காணப்படவில்லை'' என்று கூறும் சரும மருத்துவர் மற்றும் பேராசிரியர் ஜி.இளங்கோவன், அது பற்றி விளக்கினார்.

``கொரோனாவால் இதுவரை நம் நாட்டில் எந்த ஒரு சருமப் பிரச்னையும் ஏற்படவில்லை. அந்த வைரஸைத் தடுப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளால் ஏற்படும் சருமப் பிரச்னைகள்தான் அதிகமாகி இருக்கின்றன. 50 நாள்களுக்கும் அதிகமாக, மக்கள் சானிட்டைஸர்களை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால், அந்த சானிட்டைஸரில் இருக்கும் ஃபினால் (phenol) மற்றும் பல ரசாயனங்கள், உள்ளங்கையில் தோள் உரிவது, அரிப்பு ஆகியவைக்கு காரணமாகிறது. சானிட்டைஸரால் ஏற்படும் ஒவ்வாமை அதிகரித்துள்ளது.

corona
corona
`சீனா, இத்தாலியை விட இந்திய வைரஸ் ஆபத்தானது!’ - நேபாளப் பிரதமரின் சர்ச்சைப் பேச்சு

மேலும், தட்பவெப்பம் காரணமாக ஸ்கேபிஸ் (scabies), அதாவது, சொறி சிரங்கால் இப்போது பலர் பாதிக்கப்படுகிறார்கள். சுகாதாரமின்மையால் இது கை விரல் இடுக்குகள், தொடை, பிறப்புறுப்பு ஆகியவற்றில் அரிப்பை ஏற்படுத்தும். அடுத்ததாக, சருமத்தில் வெண் புள்ளிகளுடன் சிலர் வருகிறார்கள். சிலருக்கு வெயிலால் வேர்க்குரு ஏற்படுகிறது.

இந்தப் பொதுவான சரும பாதிப்புகள் தவிர்த்து, கொரோனா வைரஸ் ஏற்படுத்திய சரும பாதிப்பு என்று எதுவும் இதுவரை நம் நாட்டில் அறியப்படவில்லை'' என்றார் டாக்டர் ஜி. இளங்கோவன்.

அடுத்த கட்டுரைக்கு