Published:Updated:

Doctor Vikatan: கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறும் சிறுநீர்; கொரோனா தொற்றின் பாதிப்பா?

Representational Image

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறும் சிறுநீர்; கொரோனா தொற்றின் பாதிப்பா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Representational Image

Doctor Vikatan: என் வயது 57. கடந்த மாதம் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தேன். அதிலிருந்து அடிக்கடி சிறுநீர் கழிப்பது வழக்கமாகிவிட்டது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் வருகிறது. சிறுநீர்ப்பாதை தொற்று, கிட்னி ஸ்டோன் என வேறு காரணங்கள் இருக்குமா? கோவிட் தொற்றுக்கும் இதற்கும் தொடர்புண்டா?

Doctor Vikatan: கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறும் சிறுநீர்; கொரோனா தொற்றின் பாதிப்பா?
சிறுநீரகவியல் மருத்துவர் ஜெ.ஜெயநிவாஷ்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, சிறுநீரகவியல் மருத்துவர் ஜெ.ஜெயநிவாஷ்.

``சிறுநீர்ப்பாதையில் தொற்று இருப்பது முதல் காரணமாக இருக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழிப்பதுடன் சேர்த்து காய்ச்சல், வயிற்றுவலி, நடுக்கம் போன்றவை உள்ளனவா என்று பார்க்க வேண்டும். யூரின் ரொட்டீன் மற்றும் யூரின் கல்ச்சர் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.

கோவிட் தொற்றுக்குள்ளாகும்போது சிலருக்கு ரத்தச் சர்க்கரையின் அளவுகளில் ஏற்ற, இறக்கம் ஏற்படுவதுண்டு. கோவிட் தொற்றுக்கு கொடுக்கப்படும் சில மருந்துகளாலும் அப்படி நடக்கலாம். ஒருவேளை உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரத்தச் சர்க்கரை இருந்தாலும் அதன் விளைவாக அடிக்கடி சிறுநீர் வெளியேறலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வயதான நபர்களுக்கு சிறுநீர்ப்பாதையில் அடைப்பு ஏற்படுவதாலும் இந்த பாதிப்பு வரலாம். அதைக் கண்டறிய அல்ட்ராசவுண்டு அப்டமன் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை தேவைப்படும்.

கோவிட் பாதிப்பால் இப்படி வந்திருக்குமா என்று கேட்டிருக்கிறீர்கள். கோவிட் தொற்றாலும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நிச்சயம் வரலாம். சிறுநீரகம் தொடர்பான பலவிதமான பாதிப்புகள் வரலாம். ஆனால், கோவிட் தொற்றுக்கும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னைக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. கோவிட் தொற்றிலிருந்து குணமான பிறகும் தொடரும் `போஸ்ட் கோவிட்' பாதிப்புகளில் இதுவும் ஒன்றா என்பதை உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசியுங்கள்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism