Published:Updated:

`கொரோனாவைத் தீவிரப்படுத்தும் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மருந்துகள்!'- எச்சரிக்கும் மருத்துவர்

கொரோனா
கொரோனா

தற்போது பரவிவரும் கொரோனா வைரஸின் முதல் அறிகுறி காய்ச்சல் என்பதால் காய்ச்சல் வந்தவர்கள் தானே மெடிக்கல் ஷாப்புக்குச் சென்று ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மருந்துகள் வாங்கி எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

டந்த சில மாதங்களாக உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு சொல் "கோவிட்-19" கொரோனா வைரஸ்! நாளுக்கு நாள் மக்களிடையே இதன் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்லும் வேளையில் ஒரு பக்கம் மருத்துவர்களும் அறிவியலாளர்களும் இதற்கென்று மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

corona
corona

எனினும் இதுவரை கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக எந்த நாட்டிலிருந்தும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

இந்நிலையில் தற்போது யாரேனும் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதனால் ஏற்படும் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுக்குத் தனித்தனியே மருந்து அளிக்கப்பட்டு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

`தும்மல் கொரோனாவின் அறிகுறியா?!' - சாதாரண சளிக் காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கும் உள்ள வேறுபாடுகள்

சிலர் தங்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மருந்துகள் எடுத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒருவேளை கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் இந்த மருந்துகளை எடுத்துக்கொண்டால் அவை கொரோனாவைத் தீவிரப்படுத்தும் என்று கூறியிருக்கிறார் ஃபிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரும், நரம்பியல் மருத்துவருமான ஆலிவர் வெரான்.

கொரோனா
கொரோனா

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த கருத்தில் "தொற்றுநோய்களுக்கு ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மருந்துகளை எடுத்துக்கொள்வது மோசமான விளைவை ஏற்படுத்தும். காய்ச்சலின்போது பாராசிட்டமால் எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் ஏற்கெனவே ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைக் கேளுங்கள்" என்று கூறியிருந்தார்.

ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மருந்துகள் என்றால் என்ன... அவை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றிப் பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் பேசினோம்.

பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

"பொதுவாகவே நம்மில் பலர், தங்களுக்குக் காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்துக் கடைக்குச் சென்று 10 அல்லது 15 ரூபாய் விலையுள்ள மூன்று மாத்திரைகளைக் கொண்ட ஒரு செட்டை வாங்கிச் சாப்பிடுவார்கள். அதில் ஒரு ஆன்டி-பயாட்டிக், ஸ்டீராய்டு மற்றும் ஒரு ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மாத்திரை இருக்கும்.

`ஜிம் முதல்... ஹேர்கட் வரை' - கொரோனாவிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? #SocialDistancingIsGood

இதில் உள்ள ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மாத்திரை நமக்கு ஏற்படும் நோய் அறிகுறிகளை மறைத்துவிடும். அதனால் நமக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் எந்த வகையைச் சேர்ந்தது என்றே கண்டறிய முடியாது. எனவே ஒரு கட்டத்தில் அந்தக் காய்ச்சல் தீவிர நிலையை அடைந்துவிடும். மேலும் நமது உடலில் இயற்கையாகவே உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் உடலில் நோய் ஏற்படுத்திய கிருமிகளை எதிர்த்துப் போர் புரியும்.

மாத்திரை
மாத்திரை

இதுவே உடலின் வெப்பநிலை அதிகரிக்கவும், பூச்சிகள் கடித்தால் அந்த இடத்தில் வீக்கம் ஏற்படவும் காரணம். ஆனால் நாம் எடுத்துக் கொள்ளும் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மருந்துகள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இந்தச் செயல் முறையைப் பாதிப்பதால் நோய் தீவிரமடையும். மேலும் இந்த மருந்துகளை முதியவர்கள் எடுத்துக் கொள்ளும்போது அவர்களுக்கு அல்சர் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

`சித்தார்த்தா வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2,000 கோடி எங்கே?!' -பீதியைக் கிளப்பும் விசாரணை அறிக்கை

தற்போது பரவிவரும் கொரோனா வைரஸின் முதல் அறிகுறி காய்ச்சல் என்பதால் காய்ச்சல் வந்தவர்கள் தானே மெடிக்கல் ஷாப்புக்குச் சென்று ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மருந்துகள் வாங்கி எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் பாராசிட்டமால் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இன்றிகூட காய்ச்சலுக்கு எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் இவை OTC (ஓவர் தி கவுன்ட்டர்) டிரக்ஸ் வகையைச் சேர்ந்தவை. அதாவது சில மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமலே கடைகளில் வாங்கலாம்.

பாராசிட்டமால் மாத்திரை
பாராசிட்டமால் மாத்திரை

அதில் பாராசிட்டமாலும் ஒன்று. எனவே உங்களுக்குக் காய்ச்சல் போன்ற அறிகுறி ஏற்பட்டால் பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொண்டு வீட்டிலேயே உங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு நன்றாக ஓய்வெடுக்கலாம். ஒருவேளை உங்களுக்கு ஏற்பட்டது சாதாரண காய்ச்சல் என்றால் அது இந்த மாத்திரையிலேயே பெரும்பாலும் குணமாகிவிடும். தொடர்ந்து இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகலாம். ஆனால் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மருந்துகள் எடுத்துக்கொள்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்" என்றார் ஃபரூக் அப்துல்லா.

அடுத்த கட்டுரைக்கு