Published:Updated:

ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி (SMA) என்றால் என்ன? | Doubt of Common Man

குழந்தைகளே பெரும்பாலும் பாதிக்கப்படும் இந்த அரிய வகை நோய் குறித்து Doubt of Common Man பகுதியில் நமது வாசகர் ஒருவர் மேற்கூறிய கேள்வியைக் கேட்டிருந்தார்.

விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் மாரீஸ்வரன் என்ற வாசகர், ``ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி என்ற நோயினால் சமீபத்தில் சில குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், இந்த நோய்க்கான மருந்தின் விலை 16 கோடியாகவும் இருப்பதாகவும் நிறையப் பதிவுகளை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. இது என்ன மாதிரியான நோய்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
Doubt of common man
Doubt of common man

SMA எனப்படும் ஸ்பைனல் மஸ்குலர் அட்ரொபி (Spinal Muscular Atrophy) என்கிற குழந்தைகளுக்கு ஏற்படும் நோயைப் பற்றி சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் பலரும் பார்த்திருப்போம். ஆனால் இந்த நோய் குறித்த விவரங்கள் பெரிதாக நமக்குத் தெரியாது. குழந்தைகளே பெரும்பாலும் பாதிக்கப்படும் அரிய வகை நோய் இது.

SMA
SMA

வாசகரின் கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ளும் பொருட்டு மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவைத் தொடர்பு கொண்டு கேட்டோம். இது நோய் குறித்து அவர் கூறியதாவது, ``ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி என்னும் குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த நோய், பிறவியிலேயே மரபணு குறைபாட்டினால் ஏற்படக்கூடிய ஒன்று. இது அரிதினும் அரிதாக ஏற்படக் கூடிய ஒரு நோய். மரபணுவில் குறிப்பிட்ட ஜீன்களில் ஏற்படக்கூடிய குறைபாடுகளினால் இந்த நோய் குழந்தைகளுக்கு ஏற்படும். இந்த நோயினால், முதுகு தண்டுவடம் தசைநார்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் சிறிது சிறிதாகக் குழந்தைகளுக்குத் தசை நார்களில் பிரச்னை ஏற்பட்டு இயக்கம் தடைப்படும். இந்த நோய் இலட்சத்தில் ஒருவர் என்ற அளவிலேயே ஏற்படுவதால், இதற்கான மருந்துகள் பெரியளவில் தயாரிக்கப்படுவதில்லை.

ஃபரூக் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லா

குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே மருந்து நிறுவனங்கள் இந்த நோயிற்கான மருந்துகளைத் தயாரிக்கின்றன. அதனாலேயே இந்த நோயிற்கான மருந்து 16 கோடி என்று மிக அதிக அளவிலான விலையில் விற்கப்படுகிறது. அந்தக் குறிப்பிட்ட மருந்தைத் தவிர்த்து வேறு எந்த விதத்திலும் இந்த நோயைக் குணப்படுத்த முடியாது. குழந்தைகள் மட்டுமல்லாது பல்வேறு வயதினரையும் தாக்கும் இந்த நோய், குழந்தைகளுக்கு உயிரிழப்பு வரை கூட இந்த ஏற்படுத்தும். சமீப காலங்களில் தொடர்ந்து இந்த நோய் குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், குழந்தைகளுக்கு நோய் தாக்குதலைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள முடிகிறது." எனக் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு