Published:Updated:

வீட்டிலேயே தயாரிக்கலாம் சானிடைசர்!

சானிடைசர்
சானிடைசர்

வேப்பிலை இந்தப் பங்குனி மாதத்தில் துளிர்விடத் தொடங்கியுள்ளது. இந்த சானிடைசர் தயாரிப்பதற்கு வேப்பம் பட்டை, வேப்பிலை இரண்டையும் பயன்படுத்தலாம்.

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுக்கப் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் நம் தமிழகத்திலும் அது பரவத் தொடங்கியுள்ள நிலையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நாள்களில் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது.

Home made Sanitizer
Home made Sanitizer

கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் சானிட்டைசர்களுக்கு (கிருமிநாசினி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டிலேயே சானிட்டைசர் தயாரிப்பது குறித்து விளக்குகிறார், ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் பாலமுருகன்.

''கைகளைச் சுத்தம் செய்வதற்காக ஆயுர்வேத முறையில் கஷாயங்கள் தயாரிப்பது பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் எளிதான ஒன்றைப் பார்ப்போம்.

Dr.Bala Murugan
Dr.Bala Murugan
Karthick B

தமிழ்நாட்டுக்குக் கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் வேப்பமரம். வேப்பிலை, வேப்பம் பூ, பழம், விதை, வேப்பம் பட்டை என இதன் பொருள்கள் அனைத்துமே மருத்துவ குணம் மிக்கவை.

வேப்பிலை இந்தப் பங்குனி மாதத்தில் துளிர்விடத் தொடங்கி உள்ளது. இந்த சானிட்டைசர் தயாரிப்பதற்கு வேப்பம் பட்டை, வேப்பிலை இரண்டையும் பயன்படுத்தலாம்.

வேப்பம் பட்டையை சீவல் சீவலாக எடுத்துக்கொள்ளவும். வேப்பம் பட்டையுடன் ஒன்றுக்கு நான்கு மடங்கு எனத் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கொதிக்க வைத்த கஷாயத்தை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

Neem
Neem

பச்சைக் கற்பூரத்தை பொடி செய்து ஒரு கிராம் அளவு அதில் கலந்து கொண்டால் சானிட்டைசர் ரெடி. வீட்டிலேயே இதை நம்மால் தயாரிக்க முடியும். இதைக் கொண்டு கைகளை நாம் அலசி வந்தால் கிருமித்தொற்று நமக்கு ஏற்படாது. புண்கள், காயங்கள் இருந்தால், அதற்கும் இந்த சானிட்டைசரைப் பயன்படுத்தலாம்.

இதை, வெளியில் போய்விட்டு வருகிறவர்கள், சர்வசாதாரணமாகக் கைகளில் சிறிதளவு ஊற்றி, அவர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் சானிட்டைசர்களைப் போலவே பயன்படுத்தலாம். இப்போது நம் மனதில் ஒரு கேள்வி எழும்.

வீட்டிலேயே தயாரிக்கலாம்... சானிடைசர்! | #HandSanitizer #Coronavirus

Posted by Vikatan EMagazine on Saturday, March 21, 2020

இந்தக் கிருமிநாசினியைப் பயன்படுத்திய பின் கைகளைக் கழுவ வேண்டுமா என்றும் அது பிசுபிசுவென்று இருக்குமே என்றும் கூட சிலருக்குத் தோன்றும். ஆனால், நிச்சயம் அப்படி இருக்காது. கிரிஸ்ப்பாகத்தான் இருக்கும். கைகளைக் கழுவ வேண்டிய அவசியமில்லை. ஈஸியான சானிடைசர் நமக்குக் கிடைத்துவிடும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.

அடுத்த கட்டுரைக்கு