Published:Updated:

லாக்டௌனால் குறைந்துள்ளதா மது, சிகரெட் பழக்கம்? #VikatanSurvey

சிகரெட்
சிகரெட் ( vikatan )

'குடியை நிறுத்துவதெல்லாம் முடியவே முடியாது' என்று நினைத்திருந்தவர்கள் எல்லோரும், இப்போது வேறுவழியின்றி குடியை நிறுத்தித்தான் இருக்கிறார்கள். #VikatanSurvey

ம் வாழ்க்கைமுறையில் லாக்டௌன் காலம் ஏற்படுத்தியிருக்கும் பாசிட்டிவ் மாற்றங்கள் பல. அவற்றில் முக்கியமானவை, மதுபானக் கடைகள் மூடப்பட்டதால் மக்களின் மது நுகர்வு நிறுத்தப்பட்டிருப்பது; கடைகள் அடைக்கப்பட்டுள்ளது மற்றும் வீட்டுக்குள் அடைந்திருக்கவேண்டிய சூழலால் சிகரெட் நுகர்வு குறைந்திருப்பது.

'சிகரெட் குடிக்கிறியா...' என்று பெற்றோர் அதிர்ச்சியானபோதும், 'குடியை நிறுத்துங்க ப்ளீஸ்...' என்று மனைவி அழுதபோதும், 'இதெல்லாம் வேணாம்ப்பா...' என்று பிள்ளைகள் கெஞ்சியபோதெல்லாம் பலர் கேட்கவில்லை, கண்டுகொள்ளவில்லை. ஆனால் இந்த லாக்டௌன், அவர்களுக்கெல்லாம் தந்திருப்பது அதிரடி சிகிச்சை. 'குடியை நிறுத்துவதெல்லாம் முடியவே முடியாது' என்று நினைத்திருந்தவர்கள் எல்லோரும் இப்போது வேறுவழியின்றி குடியை நிறுத்தித்தான் இருக்கிறார்கள். 'நம்மால் மது இல்லாமல் இருக்க முடிகிறது' என்பதை ஆச்சர்யத்தோடு உணர்ந்திருக்கிறார்கள்.

போதை
போதை
representational image

அதேபோல, சிகரெட் கிடைக்காத சூழல், வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கவேண்டிய கட்டாயம் ஆகிய காரணங்களால் சிலர் சிகரெட்டை விட்டிருக்கிறார்கள். பலருக்கு, அதன் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஒரு நாளில் 10 சிகரெட் எனக் குடித்தவர்கள் எல்லாம் இன்று, ஒன்று... இரண்டு என்ற லிமிட்டுக்கு வந்திருக்கிறார்கள். 'இதையெல்லாம் விட்டுடலாம் போலயே...' என்ற மனமாற்றமும் பலரிடம் ஏற்பட்டிருக்கிறது. 'லாக்டௌன் முடிஞ்சதும் அப்படியே டிஅடிக்‌ஷன் ட்ரீட்மென்ட் ஏதாச்சும் எடுத்து இதை மொத்தமா விட்டுடலாமே...' என்று அவர்களை வலியுறுத்தும் குடும்பத்தினரும் நம்பிக்கை பெற்றிருக்கிறார்கள்.

இப்படி மது, சிகரெட் பழக்கங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் இந்த லாக்டௌனில், இதுகுறித்து உங்களிடமும் சில கேள்விகள்.

லாக்டௌனால் குறைந்துள்ளதா மது, சிகரெட் பழக்கம்..?' - ஒரு க்விக் சர்வே. ரெடியா?!

அடுத்த கட்டுரைக்கு