Published:Updated:

தொண்டையில் `கீச் கீச்'?!- வீட்டு மருத்துவத்திலேயே சரிசெய்யலாம்! #Throatinfection

தொண்டை வலி
தொண்டை வலி ( Freepik )

தொண்டை பிரச்னையிலிருந்து விடுபட, எளிமையான வழிகள்!

குளிர்காலம் தொடங்கியதிலிருந்தே `தொண்டை ஒரே எரிச்சலா இருக்கு. எச்சில் விழுங்கும்போதெல்லாம் வலிக்குது' போன்ற புலம்பல்களை அதிகமாகக் கேட்க முடிகிறது.

தொண்டை பிரச்னைகள்
தொண்டை பிரச்னைகள்
Freepik

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இதுபோன்ற தொண்டை சார்ந்த பிரச்னைகளிலிருந்து விடுபட, சில எளிமையான வீட்டு மருத்துவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

Vikatan

``தொண்டையில் பிரச்னை தெரியவருபவர்கள், முதல் நாளிலிருந்தே கீழ்க்காணும் மருத்துவ முறைகளைப் பின்பற்றவும்.

* தினமும் உப்புத்தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வரவும்.

சித்த மருத்துவர் விக்ரம்குமார்
சித்த மருத்துவர் விக்ரம்குமார்
அதிமதுரம் பொடியை நீரில் கலந்து குடிக்கவும். அதிமதுர நீரைக் கொண்டு அடிக்கடி வாய் கொப்பளித்தும் வரலாம்.
மருத்துவர் விக்ரம்குமார்.

* திரிகடுக சூரணத்தை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரவும்

* பாலில் மஞ்சள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து, இரவு நேரத்தில் குடிக்கவும்

* வெந்நீரில் துளசி சேர்த்து அருந்தவும்!

* கற்பூரவல்லி மற்றும் தூதுவளையை சட்னி போல அரைத்து, இட்லி அல்லது தோசைக்குத் தொட்டுச் சாப்பிடவும்!

சித்த மருத்துவம்
சித்த மருத்துவம்
Freepik

* குடிநீர் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும். சுத்திகரிக்கப்படாத நீரை முழுமையாகத் தவிர்க்கவும். முடிந்தவரை வெந்நீர் மட்டும் அருந்தவும். வெளி இடங்களில், குறிப்பாகத் தெருவோரங்களில் நீராகாரங்கள் குடிக்கும் பழக்கம் இருந்தால், கைவிடவும்!"

அடுத்த கட்டுரைக்கு