Published:Updated:

முதியோர்கள் அதிகநேரம் செல்போன் பயன்படுத்தலாமா? அலெர்ட்!

தனிமையில் வாடும் முதியோருக்குத் துணையாகும் கேட்ஜெட்டுகள்... சாதகமா, பாதகமா?

கேட்ஜெட்டுகள்
கேட்ஜெட்டுகள்

ஒரு மனிதன் குழந்தையாக இருக்கும்போது அனைவரது அன்பும் அரவணைப்பும் கவனிப்பும் அவர் மீது இருக்கும். படிக்கும் காலங்களில் ஆசிரியர்கள், நண்பர்கள், விளையாட்டு, சினிமா எனப் பல்வேறு உரையாடல்களுக்கு வாய்ப்பு இருந்துகொண்டே இருக்கும். வேலை, குடும்பம், பிள்ளைகள் என வந்துவிட்டால்கூட பேசி மகிழ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள ஆட்கள் இருப்பார்கள். ஆனால், முதுமையடைந்துவிட்டால் இந்த வாய்ப்புகள் அனைத்தும் குறைந்துவிடும். அதனால், பெரும்பாலான வீடுகளில் முதியவர்கள் தனித்துவிடப்படுவார்கள். ஏதாவது படித்துக்கொண்டோ பழைய நினைவுகளை அசை போட்டுக்கொண்டோ பொழுதைக் கழிப்பார்கள்.

முதியோர்
முதியோர்

'தனித்து இருப்பதுதான் அவர்களுக்குச் சௌகரியம்' என நாம் நினைத்துக்கொண்டிருப்போம். ஒருசில முதியோருக்கு வேண்டுமானால் அது சௌகரியமாகத் தோன்றலாம். ஆனால், பெரும்பாலான வீடுகளில் முதியோரை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பதனால் அவர்கள் தனிமையை உணர்வார்கள். வீட்டில் நடக்கும் உரையாடல்களின்போது முதியோர் தங்களை இணைத்துக்கொள்ள நினைத்தால், 'உங்களுக்குத்தான் வயசாயிடுச்சுல்ல... நீங்க ரெஸ்ட் எடுங்க. நீங்க ஏன் இதுலயெல்லாம் மூக்க நுழைக்கிறீங்க? நாங்க பாத்துக்கறோம்' என்பதுபோன்ற பதில்கள்தான் பெரும்பாலும் குடும்பத்தினரிடமிருந்து வரும். இதில் சில விதிவிலக்குகளும் இருக்கலாம்.

''தனிமையில் வாழும் முதியவர்களுக்கு 'எம்டி நெஸ்ட் சிண்ட்ரோம்' (Empty nest syndrome) என்ற பாதிப்பு ஏற்படும். கேட்ஜெட்டுகள் பிறருடன் இணைவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி, இந்தப் பாதிப்பை ஓரளவு கட்டுப்படுத்தியிருக்கிறது."
மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.
கேட்ஜெட்டுகள்
கேட்ஜெட்டுகள்

முன்பெல்லாம் பிள்ளைகள், பேரக்குழந்தைகள் முதியோருடனோ அவர்களுக்கு அருகிலோ தங்கியிருப்பார்கள். விரும்பும்போது பார்த்துக்கொள்ள, பேசிக்கொள்ள வாய்ப்பு இருந்தது. ஆனால், இன்றைய இளைஞர்கள் வெளியூர், வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என வேலைநிமித்தமாகப் பறந்துகொண்டிருக்கிறார்கள். உடல்நிலை, பொருளாதாரம் உள்ளிட்ட இன்னபிற நடைமுறைச் சிக்கல்களால் பெற்றோரை அவர்களுடன் அழைத்துச் செல்ல முடிவதில்லை. இதனால் முன்பிருந்த வாய்ப்புகளும் குன்றிப்போய் தனித்தீவுகளாகிவிட்டனர் முதியோர்.

"அதுபோல இணையத்தில் இன்று பல மோசடிகளும் நடக்கின்றன. வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்டு உள்ளிட்ட சொந்தத் தகவல்களைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது. இதற்குப் பெரும்பாலும் முதியோர்தான் இலக்காகிறார்கள். செல்போனில் அழைத்து முதியோரிடம் பதற்றத்தை உருவாக்கி, தகவல்களைப்பெற்று ஏமாற்றிவிடுகிறார்கள்."
மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்
மன அழுத்தம்
மன அழுத்தம்

''தனிமையில் வாழும் முதியவர்களுக்கு 'எம்டி நெஸ்ட் சிண்ட்ரோம்' (Empty nest syndrome) என்ற பாதிப்பு ஏற்படும். கேட்ஜெட்டுகள் பிறருடன் இணைவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி, இந்தப் பாதிப்பை ஓரளவு கட்டுப்படுத்தியிருக்கிறது என்பது உண்மைதான். 'எப்போது மாத்திரை சாப்பிட வேண்டும்?' என்பது போன்ற விஷயங்களை நினைவூட்டவும் தனிமையில் இருப்பவர்களிடம் உரையாடவும்கூட இன்று பல ஆப்கள் வந்திருக்கின்றன. ''தனிமையில் வாழும் முதியவர்களுக்கு 'எம்டி நெஸ்ட் சிண்ட்ரோம்' (Empty nest syndrome) என்ற பாதிப்பு ஏற்படும். கேட்ஜெட்டுகள் பிறருடன் இணைவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி, இந்தப் பாதிப்பை ஓரளவு கட்டுப்படுத்தியிருக்கிறது.

அதேபோல, சுடோகு போன்ற கணித விளையாட்டுகளை முதியவர்கள் விளையாடுவது, 'டிமென்ஷியா' போன்ற மறதி நோய்களைத் தாமதப்படுத்துகிறது. ஆனால், கேட்ஜெட்டுகளின் பயன்பாடு வேறு சில பிரச்னைகளையும் உருவாக்குகின்றன. எப்போதும் செல்போனில் விளையாடுவது, நேரம் காலம் இல்லாமல் ஃபேஸ்புக், யூடியூப் போன்ற இணையதளங்களைப் பயன்படுத்துவது ஆகிய காரணங்களால் இன்று முதியோர் பலருக்கு தூக்கப் பிரச்னை அதிகரித்திருக்கிறது. வயதானவர்களுக்கு இயல்பாகவே தூங்குவதில் சிக்கல் இருக்கும். இதுபோன்ற விஷயங்களும் சேர்ந்துகொள்வதால் பல்வேறு உடல்நலப்பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதனால் இரவு 8 மணிக்கு மேல் செல்போன் பயன்பாட்டைக் குறைத்துவிடுவது நல்லது. ஒருவேளை நேரம் போகவில்லை என்றால் புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

ஸ்வாதிக் சங்கரலிங்கம்
ஸ்வாதிக் சங்கரலிங்கம்

அதுபோல இணையத்தில் இன்று பல மோசடிகளும் நடக்கின்றன. வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்டு உள்ளிட்ட சொந்தத் தகவல்களைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது. இதற்குப் பெரும்பாலும் முதியோர்தான் இலக்காகிறார்கள். செல்போனில் அழைத்து முதியோரிடம் பதற்றத்தை உருவாக்கி, தகவல்களைப்பெற்று ஏமாற்றிவிடுகிறார்கள். எனவே, அந்த விஷயத்தில் முதியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தினர் அதுகுறித்த விழிப்புணர்வை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் உருவாக்க வேண்டும்'' என்கிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

வீட்டில் இருந்தபடியே தங்களுக்குத் தேவையான உணவு, மருந்துகள், காய்கறிகள் ஆகியவற்றை வாங்கிக்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்றன. பேருந்து, ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யவும் செல்போன் கட்டணம், மின் கட்டணம் செலுத்தவும் நேரில் அலைய வேண்டியதில்லை.
`ஒரே நாளில் உருகிய 11 பில்லியன் டன் பனிப்படலங்கள்!' - இயற்கையின் எச்சரிக்கை மணி
கேட்ஜெட்டுகள்
கேட்ஜெட்டுகள்

"தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் பாதகமான அம்சங்கள் இருந்தாலும் எதிர்காலத்தில் அதை நம்பித்தான் முதியவர்கள் வாழ வேண்டிய சூழல் உருவாகும்" என்று கூறும் முதியோர் நல மருத்துவர் நடராஜன் முதியோரைப் பாதிக்கும் நோய்கள் குறித்தும் பேசினார்.

''இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி பல வழிகளில் முதியோருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. வீட்டில் இருந்தபடியே தங்களுக்குத் தேவையான உணவு, மருந்துகள், காய்கறிகள் ஆகியவற்றை வாங்கிக்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்றன. பேருந்து, ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யவும் செல்போன் கட்டணம், மின் கட்டணம் செலுத்தவும் நேரில் அலைய வேண்டியதில்லை. இதனால் அலைச்சல் குறைந்திருக்கிறது. இது பல்வேறு உடல் நலப் பிரச்னைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும். அதேநேரம், அவற்றைப் பயன்படுத்துவதில் முதியோருக்கு சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.

மருத்துவர் நடராஜன்
மருத்துவர் நடராஜன்

பெரும்பாலான முதியோருக்குப் பார்வைக் குறைபாடுகள் காணப்படும். பார்க்கின்சன் போன்ற நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு கைநடுக்கம் ஏற்படும். அதையும் தாண்டி அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால் பல பயன்களைப் பெற முடியும். இனிவரும் காலங்களில் கூட்டுக் குடும்பங்களுக்கான வாய்ப்புகள் குறைவு. உதவிக்கும் ஆள்கள் கிடைக்க மாட்டார்கள். அதனால், முதியோர் தொழில்நுட்பத்தை நம்பி வாழ வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, அதற்குப் பழகிக்கொள்வது நல்லது'' என்கிறார் முதியோர் நல மருத்துவர் நடராஜன்.