Published:Updated:

லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டால் சிறுநீரின் நிறம் மாறுமா?

லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டால் சிறுநீர் நிறம் மாறுமா?

லிப்ஸ்டிக் மட்டுமல்ல உணவில் சேர்க்கப்படும் நிறமிகளாலும் (Food Color) இது போன்று சிறுநீர் நிறம் மாறலாம்.

லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டால் சிறுநீரின் நிறம் மாறுமா?

லிப்ஸ்டிக் மட்டுமல்ல உணவில் சேர்க்கப்படும் நிறமிகளாலும் (Food Color) இது போன்று சிறுநீர் நிறம் மாறலாம்.

Published:Updated:
லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டால் சிறுநீர் நிறம் மாறுமா?

பெங்களூரில் ஒரு பெண் அதிகளவில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டதால் அவரது சிறுநீரின் நிறம் மாறிய சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய செய்தி ஒரு மருத்துவ இதழிலும் வெளியாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Lipstick
Lipstick

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த சிறுநீரக மருத்துவர் பிரபு காஞ்சியிடம் பேசினோம்:

"இது பொதுவான பிரச்னைதான். லிப்ஸ்டிக் வாயின் வழியாக சிறுநீரகத்திற்குச் சென்றால் சிறுநீரில் இதுபோன்ற நிற மாற்றங்கள் ஏற்படும். லிப்ஸ்டிக் மட்டுமல்ல உணவில் சேர்க்கப்படும் நிறமிகளாலும் (Food Color) இது போன்று சிறுநீரின் நிறம் மாறலாம். அதிகளவில் லிப்ஸ்டிக் மற்றும் நிறமிகள் பயன்படுத்தும்போது அது சிறுநீரகத்துக்குச் சென்று இதுபோன்ற நிற மாற்றங்களை ஏற்படுத்தும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தப் பெண் ஒரு நாளைக்கு 25 முறைக்கு மேல் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டிருக்கிறார். அது குடல் வழியாக ரத்தக்குழாய்களுக்குச் சென்று ரத்தத்தில் கலந்திருக்கும். ரத்தத்திலிருந்து சிறுநீர் வழியாகவே வெளியேற முடியும். லிப்ஸ்டிக் போன்று லிப் பாமில் சேர்க்கப்பட்டிருக்கும் நிறமிகளாலும் இதுபோன்ற பிரச்னை ஏற்படலாம்.

Nephrologist Dr. Prabhu Kanchi
Nephrologist Dr. Prabhu Kanchi

வெயில் காலத்தில் தண்ணீர் குறைவாக எடுத்துக்கொண்டால், நீரிழப்பு ஏற்பட்டு சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். சில மருந்துகளை உட்கொள்ளும்போதும் இந்த நிற மாற்றம் ஏற்படலாம். கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிட்டாலும் சிலருக்கு சிறுநீரின் நிறம் மாறும்.

லிப்ஸ்டிக் அல்லது கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளால் சிறுநீரில் மாற்றம் ஏற்பட்டால் போதுமான அளவு தண்ணீர் குடித்தாலே சரியாகிவிடும். இந்த நிறமாற்றத்தைத் தடுக்க வேண்டுமென்றால் அதிகளவில் லிப்ஸ்டிக் உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

water
water

சில மாத்திரைகள் சாப்பிடுவதால் சிறுநீரின் நிறம் மாறினால், மருத்துவரின் ஆலோசனை பெற்று வேறு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். சிறுநீர் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால் அது ரத்தக்கசிவாகக்கூட இருக்கலாம். அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்" என்றார்.