Published:Updated:

30 முறை உருமாறிய கொரோனா வைரஸ்; அதிவேகத்தில் பரவல்; இந்தியாவை நெருங்குகிறதா அடுத்த அலை?

coffin containing the remains of a COVID-19 victim
News
coffin containing the remains of a COVID-19 victim ( AP Photo/Jerome Delay, File )

இந்திய அரசு, அனைத்து நாடுகளிலுமிருந்து பயணிகள் இந்தியாவுக்கு வருவதற்கான தடையை நீக்கியுள்ளது. இதனால் இந்தியாவில் புதிய வைரஸ் எளிதில் நுழைந்துவிடும்; அப்படி நுழையும் பட்சத்தில் மூன்றாம் அலை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கணிக்கின்றனர்.

கோவிட்-19 இரண்டு அலைகளைப் பார்த்துவிட்டோம். நோய்க்கு தடுப்பூசியும் கண்டறிந்து செலுத்திக்கொண்டிருக்கிறோம். இனிமேல் கொரோனா வைரஸுக்கு முடிவு கட்டிவிடலாம், இந்த பூமிப்பந்தை அதன் இயல்புக்குத் திருப்பலாம் என்று நாமெல்லாம் சற்று ஆசுவாசப்பட்டுக்கொண்டிருந்த நமக்கெல்லாம் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸின் ஒரு புதிய வகை. தென்ஆப்பிரிக்க நாடுகளில் B.1.1.529 என்ற வகை புதிய வைரஸ் பரவி உலகின் கவனத்தை அதன் பக்கம் திருப்பியுள்ளது.

COVID-19 patient/ Representation Image
COVID-19 patient/ Representation Image
AP Photo / Jae C. Hong

இந்த வைரஸானது கொரோனா வைரஸின் முள்போன்ற புரத அமைப்பில் (Spike Protein) 30-க்கும் மேற்பட்ட முறை உருமாற்றம் அடைந்துள்ளது எனவும், தொடர்ந்து இந்த உருமாற்றம் நிகழ்ந்து வருகிறது எனவும் தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். புதிய வகை என்பதாலும் அது நேரடியாக ஸ்பைக் புரோட்டீனை பாதிப்பதாலும் தற்போது பயன்பாட்டிலுள்ள தடுப்பூசியின் செயல்திறனை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதுபற்றிப் பேசியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்பத் துறை தலைவர் டாக்டர் மரியாக வான் கெர்கோவ், ``புதிய வைரஸ் பற்றி எங்களுக்கு அதிகம் தெரியவில்லை. தென்னாப்பிரிக்காவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களிடம் இது காணப்படுகிறது. இந்த வகை வைரஸானது அதிகமாக உருமாற்றம் அடைகிறது என்பது மட்டும்தான் அறிவோம். பொதுவாகவே, ஒரு வைரஸ் அதிகமாக உருமாற்றம் அடையும்போது வைரஸின் செயல்பாட்டுத்தன்மையிலும் (Behaviour) மாறுதல்கள் காணப்படும்" என்று தெரிவித்துள்ளார். புதிய வைரஸுக்கான தடுப்பூசி, சிகிச்சை முறைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் பல்துறை நிபுணர்களுடன் இன்று ஓர் ஆலோசனைக்கூட்டத்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mutations
Mutations
Pixabay

உலக நாடுகள் பலவற்றிலும் இப்போது விடுமுறைக் காலம் என்பதால், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியதில் புதிய வகை வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து விடுமுறைக் காலம் அமலிலுள்ள நாடுகள், அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் இந்திய அரசு, அனைத்து நாடுகளிலுமிருந்து பயணிகள் இந்தியாவுக்கு வருவதற்கான தடையை நீக்கியுள்ளது. இதனால் இந்தியாவில் புதிய வைரஸ் எளிதில் நுழைந்துவிடும்; அப்படி நுழையும் பட்சத்தில் மூன்றாம் அலை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கணிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு இதே போன்று நவம்பர், டிசம்பர் மாதங்களில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி இரண்டாம் அலை உருவானது.

Travel
Travel
AP Photo/Rick Bowmer, File

இந்தியாவில் மே, ஜூன் மாதங்களில் இரண்டாம் அலையாக உருவெடுத்து அதிகமானோரை பாதித்தது. உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டன. கிட்டத்தட்ட அதே போன்றதொரு டிரெண்ட் தற்போதும் நீடிக்கிறது என்றும் இதனால் இந்தியாவில் மார்ச், ஏப்ரல் மாதங்களிலோ அதற்குப் பின்னரோ மூன்றாம் அலை ஏற்படலாம் என்றும் கருதப்படுகிறது.

இதுபற்றி இன்டர்னல் மெடிசின் துறை மருத்துவர் ரோஸ் ரெய்ச்சலிடம் கேட்டோம்.

``ஸ்பைக் புரோட்டீனைக் கொண்டுதான் கொரோனா வைரஸ் நமது உடலில் இணைகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளும் ஸ்பைக் புரோட்டீனைக் குறிவைத்துச் செயல்படுபவைதான். இந்த ஸ்பைக் புரோட்டீனில் 30-க்கும் மேற்பட்ட உருமாற்றங்கள் நிகழும்போது ஒரிஜினல் வைரஸிலிருந்து மிகவும் வேறுபட்டுக் காணப்படும். அதனால் நாம் தடுப்பூசி எடுத்துக்கொண்டு ஆன்பாடிகள் உடலில் உருவாகியிருந்தாலும்கூட, இந்தப் புதிய வைரஸுக்கு எதிராக அது செயல்படுவதற்கான திறன் மிகவும் குறைந்துவிடும்.

Internal Medicine Expert Dr. Rose Rachel
Internal Medicine Expert Dr. Rose Rachel

மேலும் இது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அதிக வேகமாகப் பரவுகிறது என்பதும் அதன் தீவிரத்தன்மையும் அதிகமாக இருக்கிறது என்பதும் கவலையளிக்கக்கூடிய விஷயம்தான். அப்படியிருக்கும் பட்சத்தில் பாதிப்பும், உயிரிழப்புகள் அதிகம் ஏற்படலாம் என்பது வாதம்.

ஆனால் இதை அறுதியிட்டுக்கூற முடியாது. காரணம், புதிய வைரஸ் தென்னாப்பிரிக்காவில் ஹெச்.ஐ.வி நோயாளியிடம்தான் முதலில் கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் ஹெச்.ஐ.வி நோயாளிகள் போன்ற நோய் எதிர்ப்புத் திறன் குறைவானவர்களைத் தாக்கும் என்பதை உறுதிபடச் சொல்லிவிட முடியும்.

ஆனால் ஆரோக்கியமானவர்களிடமும் அந்தளவுக்குத் தீவிரமாகப் பரவுமா என்பது ஆய்வுகள் அல்லது நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போதுதான் தெரிய வரும். இந்தியாவில் சர்வதேசப் பயணத்துக்கான கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், இந்தியாவில் மூன்றாம் அலை வருவதற்கான சாத்தியம் குறைவு என எய்ம்ஸ் மருத்துவனை மருத்துவர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். நாம் வேகமாகத் தடுப்பூசியைச் செலுத்தி வருவதும், இந்தியாவில் இந்தக் குறிப்பிட்ட வகை வைரஸ் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதுகூட காரணங்களாக அமையலாம்.

Mask
Mask
AP Illustration/Peter Hamlin

இருந்தாலும் சர்வதேச எல்லைகளில் கண்காணிப்பையும் பரிசோதனையையும் தீவிரப்படுத்தினால் பரவலைக் குறைக்க முடியும். அதன் மூலம் மூன்றாவது அலையிலிருந்தும் நாட்டைப் பாதுகாக்க முடியும். தடுப்பூசியைப் பொறுத்தவரை பூஸ்டர் டோஸ் செலுத்தலாமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இருப்பினும், முதல் இரண்டு தவணை தடுப்பூசிகளும் கிடைக்காதோர் எண்ணிக்கையே கோடிகளில் நீடிக்கிறது என்பதால் அதைப்பற்றி தற்போது சிந்திக்க வேண்டும்.

எந்த வகை வைரஸ் வந்தாலும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகழுவுதல், அதிக மக்கள் கூட்டமுள்ள இடத்தைத் தவிர்ப்பது மூலம் நோய் பரவலைத் தடுக்க முடியும். தடுப்பூசியையும் அனைத்து மக்களுக்கும் செலுத்துவதற்கான வேலைகளைத் துரிதப்படுத்த வேண்டும்" என்றார் அவர்.