Published:Updated:

வீடு, கேட், கதவு, கைப்பிடி... கொரோனா ஃப்ரீ வீடாக வைத்திருக்க 8 யோசனைகள்!

corona free home
corona free home

தனி வீடுகளில் வசிப்பவர்கள் தாங்கள் அடிக்கடி கை வைக்கிற இரும்பு கேட், கதவின் கைப்பிடிகளை வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்தவுடன் ஏதாவதொரு கிருமிநாசினியால் துடைத்து விடலாம்.

கொரோனா பரவாமல் தடுக்க, நம்மை எப்படிச் சுத்தம், சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தெரியும். நம் வீட்டை, வீட்டில் இருக்கிற பொருள்களை எப்படிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் பொதுமருத்துவர் ராஜேஷ்.

1) கொரோனா வைரஸ் பிரச்னை தீரும் வரைக்கும் தினமும் வீட்டைத் துடைக்கலாம். இதற்கு நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்துகிற ஃப்ளோர் க்ளீனர்களே போதும்.

பொது மருத்துவர் ராஜேஷ்
பொது மருத்துவர் ராஜேஷ்

2) நாற்காலி, சோஃபாவின் கைப்பிடி போல, நாம் தினசரி அதிக நேரம் பயன்படுத்துகிற, அதே நேரம் தண்ணீர்பட்டால் ஒன்றும் ஆகாது என்கிற பொருள்களின் மேலெல்லாம், ஹேண்ட் வாஷை தண்ணீருடன் கலந்து துடைத்து விடலாம்.

3) வெளியில் செல்லும்போது செல்போன் எடுத்துச் செல்வதைத் தவிர்க்கப் பாருங்கள். அப்படியே எடுத்துச் சென்றாலும் பாக்கெட்டை விட்டு வெளியே எடுக்காதீர்கள். ஒருவேளை வெளியே எடுத்துப் பயன்படுத்தினீர்கள் என்றால் வீட்டுக்குள் வந்தவுடன் கைகளை ஹேண்ட் சானிட்டைஸரால் துடைக்கும்போது செல்போனையும் துடைத்து விடுங்கள். வீட்டிலேயே செல்போனை வைத்துவிட்டுச் சென்றீர்கள் என்றால், வீட்டுக்கு வந்தவுடன் கைகளைக் கழுவிவிட்டு செல்போனை எடுங்கள். பிளாஸ்டிக் பொருள்களில் கொரோனா வைரஸ் அதிக நேரம் உயிர் வாழும் என்பதால்தான் இவ்வளவு எச்சரிக்கை.

Cellphone Usage
Cellphone Usage

4) முதல் நாள் கடைக்கு எடுத்துச்செல்லும் கைப்பையை, பொருள்களை எடுத்துக்கொண்டு அப்படியே வெளியில் அல்லது வெயிலில் வைத்துவிடுங்கள். இரண்டாம் நாள் வேறொரு பையைக் கடைக்கு எடுத்துச் செல்லுங்கள். அந்தப் பையையும் பொருள்களை எடுத்துக்கொண்டு வெளியில் வைத்துவிடுங்கள். மூன்றாம் நாள் கடைக்குப் போகும்போது முதல் நாள் பயன்படுத்திய பையை மறுபடியும் பயன்படுத்தலாம். அந்த 24 மணி நேரத்துக்குள் பையில் ஏதாவது கிருமி இருந்திருந்தால்கூட அது அழிந்திருக்கும். கடைக்குச் செல்பவர்கள் இதைக் கவனம் வைத்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ்!

5) தனி வீடுகளில் வசிப்பவர்கள் தாங்கள் அடிக்கடி கை வைக்கிற இரும்பு கேட், கதவின் கைப்பிடிகளை வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்தவுடன் ஏதாவதொரு கிருமிநாசினியால் துடைத்து விடலாம்.

corona free home
corona free home
கொரொனா தவிர்த்து சந்தோஷமான செய்திகளை மட்டும் யோசியுங்கள்... கர்ப்பிணிகளுக்கு 10 ஆலோசனைகள்

அப்பார்ட்மென்ட்களில் வசிப்பவர்கள் கவனத்துக்கு... பொது கேட்டை கைகளால் தொடாமல் திறக்க முடியுமா என்று பாருங்கள். முடியாது என்றால் அனைவரும் பேசி வைத்துக்கொண்டு, ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறையாவது அந்த கேட்டில் கைப்படுகிற பகுதிகளை கிருமி நாசினியால் துடைத்துவிடுவது நல்லது.

6) குடும்பத்தில் யாரோ ஒருவர்தான் காய்கறி, மளிகைச் சாமான் என்று வாங்குவதற்காக வெளியே செல்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்து குழாயில் கைகளைக் கழுவியவுடன், குழாயின் கைப்பிடியில் சோப்பைத் தடவி அலம்பி விடுவது நல்லது. குடும்பத்தில் இருக்கிற மற்றவர்களும் இதைப் பின்பற்றலாம். வாஷ் பேசின், குழாய்களுக்கும் இது பொருந்தும்.

Handwash
Handwash
லாக் டவுணில் நடந்துமுடிந்தவற்றைப் பேசாமல் நடக்கப் போவதைப் பேசுங்கள்... குடும்ப வன்முறை தவிர்க்க நிபுணர் ஆலோசனை!

7) வீட்டில் இருக்கிற சுவிட்ச்சுகள், எல்லா அலமாரிகளின் கைப்பிடிகள், பாத்ரூம் கதவின் கைப்பிடிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னால் துடைத்துவிடலாம்.

8) முக்கியமாக உங்கள் குழந்தைகள் வீட்டில் உள்ள பொருள்களில் எவற்றையெல்லாம் அடிக்கடி எடுத்து விளையாடுகிறார்களோ அவற்றைக் கிருமிநாசினி அல்லது சோப்புத் தண்ணீரால் சுத்தப்படுத்துங்கள்.

அடுத்த கட்டுரைக்கு