Published:Updated:

`துணி மாஸ்க்குகள்... பயன் தருமா, தராதா?' - மருத்துவர் பதில்

மாஸ்க்
மாஸ்க்

துணி மாஸ்க்குகள் தரக்கூடிய பாதுகாப்பு குறித்து, தொற்றுநோயியல் சிறப்பு மருத்துவர் ராமசுப்பிரமணியமிடம் கேட்டோம்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாஸ்க் இல்லாமல் வெளியே செல்லத் தயங்குகிறார்கள் மக்கள். மெடிக்கல் கடைகளில் கிடைக்கும் சர்ஜிக்கல் மாஸ்க்குகள் கிடைக்காதவர்கள், வீட்டிலேயே துணியைக்கொண்டு மாஸ்க்குகள் தயாரித்து உபயோகித்து வருகிறார்கள்.

Surgical Mask
Surgical Mask

ஆனால், 'துணி மாஸ்க்குகளை உபயோகிப்பது பயனளிக்காது. மாசு மற்றும் கிருமிகளிலிருந்து பாதுகாப்பதற்கென சர்ஜிக்கல் மாஸ்க்குகளில் சில பிரத்யேக ஃபில்டர்கள் இருக்கும். ஆனால், துணி மாஸ்க்குகளில் அதுபோன்ற தடுப்புகள் இருக்காது.

அதனால், மிகவும் எளிதாகக் காற்று உள்ளே சென்று வெளியே வரும். இதன் மூலம் எளிதாக நோய்க்கிருமிகள் பரவக்கூடும்' என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், துணி மாஸ்க்குகள் தரக்கூடிய பாதுகாப்பு குறித்து, தொற்றுநோயியல் சிறப்பு மருத்துவர் ராமசுப்பிரமணியமிடம் கேட்டோம்.

Doctor Ramasubramaniyam
Doctor Ramasubramaniyam

``துணி மாஸ்க்குகள், சர்ஜிக்கல் மாஸ்க்குகளுக்கு இணையான பாதுகாப்பை வழங்கக்கூடியவை அல்ல. ஆனால், எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதற்கு, குறைந்தளவேனும் பாதுகாப்பு தரக்கூடிய துணியாலான மாஸ்க்கை அணிந்துகொள்ளலாம். இது ஓரளவுக்கு உதவியாக இருக்கிறது. துணி மாஸ்க்குகள் ஒரு தடுப்பாகச் செயல்பட்டு, 50% பாதுகாப்பாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், துணி மாஸ்க்குகளைப் பயன்படுத்தலாம்.

துணி மாஸ்க்குகளைச் சரியான முறையில் உபயோகிப்பதும் சுத்தம்செய்வதும் முக்கியம். அணியும்போதும், அப்புறப்படுத்தும்போதும் மாஸ்க்கின் உள்பக்கம் கைபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Sanitize face masks
Sanitize face masks
`மாஸ்க் அணியும் நாடுகளில் கொரோனா  கட்டுப்படுத்தப்படுகிறதா?'-ஆய்வு முடிவும் மருத்துவர் விளக்கமும்

பயன்படுத்திய துணி மாஸ்க்கை அங்கு, இங்கு என்று போடாமல், நேராகச் சென்று கிருமிநாசினி கலந்த தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து, வெயிலில் உலர்த்திப் பயன்படுத்த வேண்டும். கைகளை மட்டுமே சுத்தம் செய்து, முகக்கவசத்தை சுத்தம் செய்யவில்லை என்றால், அதனால் எந்தவிதப் பயனுமில்லை" என்று எச்சரிக்கிறார் மருத்துவர் ராமசுப்பிரமணியம்.

அடுத்த கட்டுரைக்கு