Published:Updated:

நீண்ட நேரம் செல்போன் பார்ப்பவர்களைக் காக்குமா புளூ ஃபில்டர் கண்ணாடி?

செல்போன்
செல்போன்

கணினியையும் செல்போனையும் அதிக நேரம் பயன்படுத்தும்போது சில வழிமுறைகளைப் பின்பற்றினால், புளூ ஃபில்டர் கிளாஸ் அவசியமே இல்லை.

``காலையில் தினமும் கண் விழித்தால் நாம் தொழுதிடும் தேவதை செல்போன்" என்று பாடலைப் மாற்றிப் பாடும் சூழ்நிலையில்தான் நாம் அனைவரும் உள்ளோம். ஆம். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்போன் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துவிட்டது. நம் குடும்பத்தினர், உறவினர்களைவிட நாம் அதிக நேரம் செலவழிப்பது செல்போனுடன்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

செல்போன்
செல்போன்

செல்போனை அதிக நேரம் பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்படும் என்பது நாம் அறிந்ததுதான். அதிலிருந்து நம்மைக் காப்பதற்கு புளூ ஃபில்டர் கிளாசஸ் (Blue filter glasses) என்ற கண்ணாடி பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அதிக நேரம் கணினி முன் வேலை செய்பவர்களுக்கும் செல்போன் உபயோகிப்பவர்களுக்கும் புளூ ஃபில்டர் கண்ணாடி அவசியமா என்ற கேள்விக்குப் பதில் அளிக்கிறார் கண் மருத்துவர் சந்திரசேகர்.

``குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லா வயதினரும் செல்போனுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். ``ராத்திரி 2 மணிக்குக்கூட போர்வைக்குள்ளே போனைவெச்சுப் பார்த்திட்டிருக்காங்க' எனப் பிள்ளைகளைப் பற்றிய புகாரோடு வரும் அம்மாக்களை அதிகம் பார்க்கிறேன்.

டாக்டர். சந்திரசேகர்
டாக்டர். சந்திரசேகர்

செல்போன் மற்றும் கணினியிலிருந்து நீலக்கதிர்கள் வெளிவருகின்றன. நாம் தூங்குவதற்குத் தேவையான மெலடோனின் (melatonin) என்ற ஹார்மோன் சுரப்பை இவை குறைக்கின்றன. தூக்கமின்மை பல உடல்நல, மனநலப் பிரச்னைகளுக்குக் காரணமாவது நமக்கெல்லாம் தெரியும்.

கணினியையும் செல்போனையும் அதிக நேரம் பயன்படுத்தும்போது சில வழிமுறைகளைப் பின்பற்றினால், புளூ ஃபில்டர் கிளாஸ் அவசியமே இல்லை என்று பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்கிற டாக்டர்.சந்திரசேகர், அந்த வழிமுறைகளையும் பட்டியலிடுகிறார்.

செல்போன்
செல்போன்

1. ஒரு மணிநேரம் செல்போனையோ, கணினியையோ தொடர்ச்சியாகப் பார்த்தால், அடுத்த 20 நிமிடங்கள் கண்ணுக்கு அவசியம் ஓய்வு கொடுக்க வேண்டும்.

2. படுத்துக்கொண்டு போன் உபயோகிக்கக் கூடாது. அவ்வப்போது உள்ளங்கைகளால் கண்களை மூடி ஒத்தடம் கொடுப்பதுபோல் செய்ய வேண்டும்.

3. சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு