Published:Updated:

`ஆசை மட்டும் போதாது!' - தாம்பத்யத்தை சுவாரஸ்யமாக்கும் இயற்கை வழிகள் - பெட்ரூம்... கற்க கசடற - 19

Couple (Representational Image) ( Photo by Marcelo Chagas from Pexels )

உடலுறவைக்கூட `பிளான் பண்ணி’ செய்ய வேண்டுமா என்று புருவம் உயர்த்தலாம். உங்கள் முக்கியமான திட்டங்களை காலண்டரில் குறித்து வைத்துள்ளீர்கள், இதுவும் முக்கியமான விஷயம்தானே? நேராகப் படுக்கையில் குதிப்பதைவிட நிதானமாக, ரொமான்டிக் ஆக செய்வதற்குப் போதுமான நேரத்தைத் திட்டமிடுவது சிறந்தது.

`ஆசை மட்டும் போதாது!' - தாம்பத்யத்தை சுவாரஸ்யமாக்கும் இயற்கை வழிகள் - பெட்ரூம்... கற்க கசடற - 19

உடலுறவைக்கூட `பிளான் பண்ணி’ செய்ய வேண்டுமா என்று புருவம் உயர்த்தலாம். உங்கள் முக்கியமான திட்டங்களை காலண்டரில் குறித்து வைத்துள்ளீர்கள், இதுவும் முக்கியமான விஷயம்தானே? நேராகப் படுக்கையில் குதிப்பதைவிட நிதானமாக, ரொமான்டிக் ஆக செய்வதற்குப் போதுமான நேரத்தைத் திட்டமிடுவது சிறந்தது.

Published:Updated:
Couple (Representational Image) ( Photo by Marcelo Chagas from Pexels )

அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற்கு அன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ; - அரக்கார்ந்த
பஞ்சிகொண்டு ஊட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப் பின்வாங்கும் அடி.

- நாலடியார்

(செவ்வாம்பல் போன்ற வாயையும், அழகிய இடையையும், உடைய என் மகள் முன்னர், செம்பஞ்சுக் குழம்பைப் பாதத்தில் பஞ்சினால் தடவிய போதும், மெல்ல மெல்ல எனக்கூறிக் காலைப் பின்னுக்கு இழுத்துக் கொள்வாள். அந்தோ! அந்தப் பாதங்கள் பரற்கற்கள் பொருந்திய பாலை வழியின் கொடுமையை எவ்வாறு தாங்கின?
- தலைவனுடன் போன தலைவியை எண்ணித் தாய் ஏங்கியது)

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Emma Bauso from Pexels

உங்கள் படுக்கையறையில் மேலும் உற்சாகம் பிறக்க வேண்டுமா? நிஜமான திருப்தியை இருவரும் அடைய விரும்புகிறீர்களா? அதற்கு மது அல்லது போதைப் பொருள்களைப் பயன்படுத்தினால்தான் பாலுறவில் சிறப்பாக ஈடுபட முடியும் என்று நினைக்கிறீர்களா? அது மிக மிகத் தவறான நம்பிக்கை. கவலை வேண்டாம்... உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மஜாவாக மாற்ற போதைப்பொருள்கள் இல்லாத இயற்கை வழிகளே ஏராளமாக உள்ளன.

மருத்துவப் பிரச்னைகளால் ஆசை குறையலாம்!

பாலியல் பிரச்னைகள் அல்லது ஆர்வமின்மைக்குப் பின்னால் மருத்துவ காரணங்கள் இருக்கலாம். அதன் காரணமாக உங்கள் படுக்கையறையை நீங்கள் வெறுக்கத் தொடங்கியிருக்கலாம். நீரிழிவு, தைராய்டு, புற்றுநோய் மற்றும் இதய பிரச்னைகள் பாலியல் ஆசையைக் குறைப்பது இயல்பு. நரம்பு சம்பந்தமான பிரச்னைகள், கர்ப்பப்பை அல்லது பிற பிரச்னைகள் பெண்களுக்கு செக்ஸின்போது வலியை உண்டாக்கக்கூடும்.

ரத்த அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் பிறப்புக் கட்டுப்பாடுக்காக எடுத்துக்கொள்ளும் சில மருந்துகள் பாலியல் ஆசையைத் தடுக்கக்கூடும்.
அதனால்தான் சொல்கிறோம்... உங்கள் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கும் அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதும், சரியான சிகிச்சையைப் பெறுவதும் முக்கியம். பாலியல் பக்க விளைவு இல்லாமல் உங்களுக்கான மருந்துகளில் மாற்றம் செய்ய முடியுமா என்று உங்கள் மருத்துவரிடம் தயங்காமல் கேட்கலாம். ஏனெனில், மருத்துவக் காரணங்களால் திருப்திகரமான உடலுறவில் இருந்து விலக வேண்டிய அவசியமில்லை.

Love
Love
Image by Gerd Altmann from Pixabay

உடலுறவுக்கான மனநிலைக்கு முன்னுரிமை கொடுங்கள்!

மேலும் மேலும் சிறப்பாக உடலுறவு கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் முதலில் உங்கள் வழக்கப்படியான விஷயங்களிலிருந்து வெளியே வர வேண்டும். அதாவது கடமையாக இல்லாமல் காதலாகக் களத்தில் இயங்க வேண்டும். `மணி ஹெய்ஸ்ட்’ கடைசி பகுதியில் `சயின்ஸை லவ் பண்ணணும்... அப்பதான் அது ஒழுங்கா வேலை செய்யும்’ என்றொரு வசனம் உண்டு. அந்த லவ் செக்ஸுக்கும் ரொம்பவே பொருந்தும்.

உடலுறவைக்கூட `பிளான் பண்ணி’ செய்ய வேண்டுமா என்று புருவம் உயர்த்தலாம். உங்கள் முக்கியமான திட்டங்களை காலண்டரில் குறித்து வைத்துள்ளீர்கள், இதுவும் முக்கியமான விஷயம்தானே? நேராகப் படுக்கையில் குதிப்பதைவிட நிதானமாகவும் ரொமான்டிக் ஆகவும் செய்வதற்குப் போதுமான நேரத்தைத் திட்டமிடுவது சிறந்தது. ஏனெனில், பெண்களின் லிபிடோ உடையைக் களைந்தவுடன் தூண்டப்பட்டு விடுவதில்லை, பேச்சும் ஸ்பரிசமும் ரொமான்ஸும்தான் செக்ஸின் பிரதான பகுதி. முதற்கட்டம் ஒழுங்காக இருந்தால் உச்சக்கட்டம் செமையாக இருக்கும்.

உங்கள் உடல் அழகான, சிறப்பான, செக்ஸுக்கு ஏற்ற உடல்தான்!

உடலுறவுக்கு என் உடல் ஏற்றதில்லையோ, குண்டாக இருக்கிறேனோ, ஒல்லியாக இருக்கிறேனோ, அழகாக இல்லையோ, சோர்வாக இருக்கிறேனோ... இப்படி எந்த எதிர்மறை எண்ணமும் படுக்கையறையில் வேண்டாம். ஏனெனில், உடலின் அளவுக்கும் நிறத்துக்கும் உடலுறவின் மூலம் வாய்க்கக்கூடிய இன்பத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதனால் தேவையற்ற குற்ற உணர்ச்சிகள் தேவையே இல்லை. அவற்றை நிறுத்த வேண்டிய நேரம் இதுதான். ஏனெனில், பாலியல் பற்றி மிகவும் திறந்த மனப்பான்மை கொண்டவர்கள் குற்ற உணர்ச்சியின்றி தங்கள் பாலுணர்வை சிறப்பாக அனுபவிக்க முடியும்.

Couple
Couple
Photo by Womanizer Toys on Unsplash

சிறந்த உடலுறவுக்கு லூப்ரிகன்டுகளைப் பயன்படுத்த மறக்காதீர்கள்

உராய்வு காரணமாக ஏற்படும் எரிச்சலால் சில நேரங்களில் தடங்கல் ஆகலாம். அதனால், இந்த அசௌகர்யத்தைக் குறைக்கும் லூப்ரிகன்டுகளைப் பயன்படுத்தினால் செக்ஸ் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று மகளிர் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மருந்துக் கடைகளில் இது கிடைக்கிறது.
இந்தத் தேவையை உங்கள் இணையிடம் இருந்து மறைக்க முயற்சி செய்யாதீர்கள். இதை உங்கள் பாலியல் வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றி, வேடிக்கையாக விளையாடுங்கள்.

சிறப்பான செக்ஸுக்கு ஆக்‌ஷன் அவசியம்!

உடலுறவை மேம்படுத்த நீங்கள் பயன்படுத்தக்கூடிய பல இயற்கை அம்சங்களில் உடற்பயிற்சியும் ஒன்று என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் இதயம் மற்றும் தசைகளுக்காக நீங்கள் செய்யும் உடற்பயிற்சி நல்ல உடலுறவுக்கும் முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் இதயத்துக்குப் பாயும் அளவு ரத்தம் உங்கள் பிறப்புறுப்புக்கும் பாய்கிறது என்பதை நினைவில் கொண்டால், உடற்பயிற்சியின் முக்கியத்துவம் புரியும்.

எடுத்துக்காட்டாக, விறைப்புத்தன்மை குறைபாடுள்ள (ED) ஆண்கள், உடற்பயிற்சியை உள்ளடக்கிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால், இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட முடியும் என்று ஜர்னல் ஆஃப் செக்சுவல் மெடிசினில் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. விறைப்புக் குறைப்பாட்டுக்காக மருந்து எடுத்துக் கொள்கிறவர்களுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் நன்மைகளை அளிக்கின்றன.

நல்ல உடலுறவுக்கு போதுமான தூக்கம் அவசியம்

உடலுறவுக்குப் பின்பு மட்டுமல்ல; அதற்கு முன்பும் முறையான தூக்கம் அவசியம். தூக்கமும் இன்பத்தை பாதிக்கும் மற்றொரு வாழ்க்கை முறை காரணியாகும். ஹார்மோன் சுரப்பு உடலின் உள் கடிகாரத்தால் கட்டுப்படுத்தப்படுவதே காரணம், உடலுறவு தொடர்பான சில ஹார்மோன்களை எப்போது வெளியிடுவது என்பதை உடல் தீர்மானிக்க வழக்கமான தூக்க முறை உதவக்கூடும்.
நீங்கள் படுக்கைக்கு வரும்போது தூக்கமின்மை காரணமாக சோர்வாக உணர்ந்தால், ஆசை இருந்தாலும்கூட காரியம் கச்சிதமாக நடக்காது. அதோடு, ஆண்கள் போதுமான தூக்கம் பெறும்போது அவர்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கிறது.

Yoga (Representational Image)
Yoga (Representational Image)

சிந்தனை செயல் சிறப்பு

உங்கள் இணையுடன் படுக்கையில் இருக்கும் நேரத்தில் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? உடைகளைக் களைவதல்ல... மனத்திலுள்ள சுமைகளைக் களைவதுதான். உங்கள் இதயத்தில் எந்த பாரமும் இல்லாமல் மிகவும் லைட்டாக்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் மற்றும் எப்படி உணர்கிறீர்கள் என்பதில் உங்கள் கவனத்தை வைத்திருப்பது உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்க சக்திவாய்ந்த வழியாகும். கவலை தொடர்பான பாலியல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பெண்கள், நினைவாற்றலில் பயிற்சி பெற்ற பிறகு, அவர்களின் பாலியல் வினைத்திறனை கணிசமாக அதிகரிக்க முடிந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது

இதேபோல, யோகாவின் மனம்-உடல் சார்ந்த பயிற்சியும் லிபிடோவுக்கு உதவும். ஓர் ஆய்வில் 40 பெண்களைக் கொண்ட குழு ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் யோகா பயிற்சி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது, அதன் பிறகு அவர்களின் ஆசை, தூண்டுதல், வலி குறைதல், செயல் இலகுவாதல் மற்றும் ஒட்டுமொத்த திருப்திக்கான பாலியல் செயல்பாடு அதிகரித்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் செய்த யோகா பயிற்சிகள் இடுப்புத் தசையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், இறுக்கமான இடுப்பு மூட்டுகளை இலகுவாக்குவதற்கும், நல்ல மனநிலையை அதிகரிப்பதற்கும் உதவின. சுவாசப் பயிற்சியும் இதற்குப் பயன் அளிக்கும்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Pablo Heimplatz on Unsplash

உங்களை அறிந்துகொள்ளுங்கள்!

உங்களை நீங்களே பரிசோதிப்பதன் மூலம், பாலியல் ரீதியாக உங்களைத் திருப்திப்படுத்துவது எது என்பதை நீங்கள் நன்கு அறிந்துகொள்ளலாம். பின்னர், இதுபற்றி உங்கள் இணையிடம் தெரிவிக்கலாம். இதற்கு சுயஇன்பம் அல்லது சுய தூண்டுதல் செயல்பாடுகள் உதவும்.

பெண்களுக்கு, சுயஇன்பம் வேறு சில நன்மைகளையும் அளிக்கிறது. நீங்கள் உங்களைத் தூண்டிக்கொண்டு நேரத்தைச் செலவிடும்போது யோனி வறட்சி மற்றும் வலி குறையும். அதனால்தான் பாலியல் சிகிச்சையாளர்கள் பெரும்பாலும் உச்சக்கட்டத்தை அடைவதில் சிக்கல் உள்ள பெண்களுக்கு சுயஇன்பத்தை ஒரு கருவியாகப் பரிந்துரைக்கின்றனர். மேம்படுத்தப்பட்ட தூண்டுதலுக்காக நீங்கள் ஒரு வைப்ரேட்டரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்... தவறே இல்லை!

- சஹானா