Published:Updated:

கறுப்பு, வெள்ளை வரிசையில் பச்சைப் பூஞ்சைத் தொற்று; மத்தியப்பிரதேசத்தில் முதல் தொற்று உறுதி!

Mucormycosis
Mucormycosis ( AP Photo/Amit Sharma )

``கறுப்புப் பூஞ்சைத் தொற்று என்ற சந்தேகத்தில் பரிசோதித்தபோது அவருக்கு பச்சைப் பூஞ்சைத் தொற்று (Aspergillosis) உறுதிசெய்யப்பட்டது".

கோவிட்-19 தொற்றைக்காட்டிலும் அதனால் ஏற்படும் பிற பக்கவிளைவுகள் அதிக பயத்தைக் கொடுக்கின்றன. கோவிட் நோயாளிகளுக்கு ஏற்பட்ட கறுப்புப் பூஞ்சைத் தொற்று நாட்டையே பீதியடைய வைத்தது. அதற்கு அடுத்தபடியாக வெள்ளை, மஞ்சள் வகைத் தொற்றுகள் கோவிட் நோயாளிகளிடம் கண்டறியப்பட்டன. இந்நிலையில் நான்காவதாக, பஞ்சைப் பூஞ்சைத் தொற்று தற்போது ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 34 வயது நபர் இரண்டு மாதங்களுக்கு முன்பாக கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டார். சுமார் 100% நுரையீரல் தொற்றுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு மாதம் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தொற்று குணமாகிய பிறகும் தீவிர காய்ச்சல், மூக்கில் ரத்தக்கசிவு, பலவீனம், உடல் எடை இழப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் அவர் பாதிக்கப்பட்டார்.

India Covid 19 Outbreak
India Covid 19 Outbreak

இந்தூரிலுள்ள ஸ்ரீஅரபிந்தோ மருத்துவ அறிவியல் நிறுவனம் என்ற மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இது பற்றி பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ள அந்த மருத்துவ மனையின் நெஞ்சக நோய்கள் துறையின் தலைவர் மருத்தவர் ரவி தோஷி, ``கறுப்புப் பூஞ்சைத் தொற்று என்ற சந்தேகத்தில் பரிசோதித்தபோது அவருக்கு பச்சைப் பூஞ்சைத் தொற்று (Aspergillosis) உறுதிசெய்யப்பட்டது.

அவருடைய சைனஸ், நுரையீரல், ரத்தம் ஆகியவற்றில் இந்தத் தொற்று பரவியுள்ளது. கோவிட் தொற்றிலிருந்து முழுவதுமாக மீண்ட பிறகு, பச்சைப் பூஞ்சைத் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

Mucormycosis Testing
Mucormycosis Testing
AP Photo / Mahesh Kumar A
கோவிட் 19 தடுப்பூசியால் உயிரிழந்த இந்தியாவின் முதல் நபர்; அதிகாரபூர்வமாக அறிவித்த அரசு!

கோவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் பஞ்சைப் பூஞ்சையின் தன்மையைக் குறித்து தெளிவு ஏற்படுவதற்கு கூடுதல் ஆராய்ச்சிகள் தேவை" என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து உயர் சிகிச்சைக்காக அவர் மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தியாவில் முதன்முறையாக ஒரு நபருக்கு பச்சைப் பூஞ்சைத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புதிய புதிய வர்ணங்களில் பூஞ்சைத் தொற்று பற்றிய செய்திகள் வெளியாவது பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனங்களும், கேலியான கமென்டுகளும் குவிந்து வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு