Published:Updated:

எண்ணெய்க் குளியல், தாரை சிகிச்சை, சவாசனம்... மன அழுத்தம் போக்க எளிய வாழ்வியல் வழிகள்! #NoMoreStress

மன அழுத்தம்
மன அழுத்தம்

அசுர வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் நம்மைத் தடுத்து நிறுத்தி, பொறுமையாகச் செல், மனதுக்கு ஓய்வளிப்பது முக்கியம் என்பதை உணர்த்தும் முறையே யோகாசனமாகும்.

நாம் எல்லோருமே அவரவர் பிரச்னைகளை மட்டுமே பெரிதாகச் சொல்லிக்கொள்வோம். `எனக்கு வந்த மாதிரி கஷ்டம் மத்தவங்களுக்கு வரக்கூடாது' என்று அங்கலாய்ப்போம். ஆனால், மற்றவர்களது வாழ்க்கையைப் பற்றிக் கேட்டுப் பார்க்கும்போதுதான் அவர்கள் படும் பாடுகளைப் பார்த்து, ‘ச்சே... நமக்கு இருப்பதெல்லாம் ஒரு பிரச்னையா…’ என்று நினைக்கத் தோன்றும். வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும் என்று மனதைத் திடப்படுத்திக்கொள்வோம். ஆற்றுப்படுத்துவது, தேற்றிக்கொள்வது அல்லது திடப்படுத்திக்கொள்ளும் மனப்பக்குவம் இன்றைய தலைமுறையிடம் இல்லை என்றே சொல்லலாம்.

Stress
Stress

ஒரே சம்பவத்தைப் போட்டுக் குழப்பி, அதிலே உழன்று உழன்று, `மனஅழுத்தம்' எனும் கூண்டுக்குள்ளே இருந்து வெளியேற பலருக்கும் தெரியவில்லை. தனது நெருங்கிய உறவுகள், நண்பர்களுடனும் பேசுவதற்குக்கூட நேரமிருப்பதில்லை. நம்மில் பலருக்கு செல்போன்கள்தான் பெரிதும் துணையாக இருக்கின்றன. எல்லைமீறிப் போகும்போது, அந்த செல்போன்கள் மனதை பரிதவிக்கச் செய்யுமே தவிர ஆசுவாசப்படுத்தாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

திரைப்படங்கள் பலவற்றில் மனநலம் பாதிக்கப்பட்ட கதாநாயகர்களின் தலைக்கு மேலே ஒரு மண் சட்டி வைக்கப்பட்டு அதிலிருந்து சிறிய திரி வழியாக எண்ணெய் வழிந்து நெற்றிப் பொட்டு மற்றும் தலையில் ஊறுவதைப் போன்ற காட்சிகளை நீங்கள் கவனித்திருக்கலாம். அந்த சிகிச்சை முறைக்குப் பெயர் தாரை சிகிச்சை.
விக்ரம்குமார்

வாழ்க்கை என்றால் அது பிரச்னைகள், சஞ்சலங்கள் நிறைந்ததே. அதை முறையாக எப்படிக் கையாள்கிறோம், அதிலிருந்து மனதளவில் எப்படி விடுபடுகிறோம் என்பதில்தான் மகிழ்ச்சிக்கான சூத்திரம் மறைந்து கிடக்கிறது. மனதளவில் நம்மைத் தயார்செய்து கொள்வதையும் தாண்டி, சில நலமான வாழ்வியல் முறைகளையும், பாரம்பர்யமாகப் பின்பற்றப்பட்டு வந்த சில எளிய மருத்துவ முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மனம் சார்ந்த பிரச்னைகள் எட்டிப் பார்ப்பதை குறைத்துக்கொள்ளலாம்.

Oil Bath
Oil Bath

எண்ணெய்க் குளியல்:

நமது பாரம்பர்யத்தின் மிகப்பெரிய வரம் எண்ணெய்க் குளியல். மன நோய்கள் தலைதூக்காமல் பார்த்துக் கொள்ள நல்லெண்ணெய்க் குளியல் செய்தாலே போதும். நல்லெண்ணெயில் சீரகத்தைப் போட்டு லேசாகக் கொதிக்கவிட வேண்டும். சீரகம் நன்றாகச் சிவந்து உடையும் பக்குவத்தில் இறக்கிப் பொறுக்கும் சூட்டில் எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளிப்பது மிகப்பெரிய நோய்த் தடுப்பு முறையாகும். பித்தம் அதிகரிப்பதால் உண்டாகும் மன நோய்களுக்குத் தாராளமாக இந்த எண்ணெய்க் குளியல்முறையை முயற்சி செய்யலாம்.

மருத்துவர் உதவியுடன் கொண்டைக் கொல்லி, சுண்ணாம்புக் காலம், பொற்சைக் காலம், உறக்க காலம் போன்ற தலையில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டுவதன்மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். சில வர்மப் புள்ளிகளைத் தூண்டி, சோர்வுற்ற மனதுக்கு உற்சாகமளிக்க முடியும்.
விக்ரம்குமார்

உடல் முழுவதும் எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கும் போது, மனதை உற்சாகப்படுத்தும் ஹார்மோன்கள் ஊற்றெடுத்து உங்களை பேருவுவகை கொள்ளச் செய்யும். ஆனால் இன்றோ முறையாக எண்ணெய்க் குளியல் செய்யும் மனிதர்களை சல்லடையிட்டுப் பார்த்தாலும் கிடைப்பது அரிது. வாரம் இரண்டுமுறை எண்ணெய்க் குளியல் செய்வதால் மனமும் உடலும் ஆரோக்கியமாக நடைபோடும். எண்ணெய்க் குளியல் குறித்த மகத்துவங்களை நவீன ஆராய்ச்சிகள் வெளி உலகுக்கு எடுத்துக்காட்டத் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram in Sethu Movie
Vikram in Sethu Movie

தாரை சிகிச்சை!

திரைப்படங்கள் பலவற்றில் மனநலம் பாதிக்கப்பட்ட கதாநாயகர்களின் தலைக்கு மேலே ஒரு மண் சட்டி வைக்கப்பட்டு அதிலிருந்து சிறிய திரி வழியாக எண்ணெய் வழிந்து நெற்றிப் பொட்டு மற்றும் தலையில் ஊறுவதைப் போன்ற காட்சிகளை நீங்கள் கவனித்திருக்கலாம். அந்த சிகிச்சை முறைக்குப் பெயர் தாரை சிகிச்சை. மருத்துவக் குணம் நிறைந்த எண்ணெய் வகைகளை நோயின் குறிகுணத்துக்கேற்ப பானையில் ஊற்றி சிறிது சிறிதாக தலையில் உறவாடும்படி செய்வதே தாரை சிகிச்சையின் தந்திரம். உள்ளத்தையும் உடலையும் உடனடியாகக் குளிர்ச்சியூட்டக்கூடியது தாரை சிகிச்சை. சிக்கலில் சிக்கித் தவிப்பவர்களை சிரமமின்றி விடுவிக்கும் சிகிச்சையே தாரை.

பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து செல்லும் மனநிலையை உருவாக்குவது மிக முக்கியம். பிரச்னை ஏற்படும்போது, உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்தல்… மன உளைச்சலுக்கான மாமருந்து.

வர்மம்

சித்த மருத்துவத்தின் பல பிரிவுகளுள் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதி வர்மம். தலையில் உள்ள சில வர்மப் புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் மனதை தன்னிலைப்படுத்த முடியும். மருத்துவர் உதவியுடன் கொண்டைக் கொல்லி, சுண்ணாம்புக் காலம், பொற்சைக் காலம், உறக்க காலம் போன்ற தலையில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டுவதன்மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். சில வர்மப் புள்ளிகளைத் தூண்டி, சோர்வுற்ற மனதுக்கு உற்சாகமளிக்க முடியும்.

Varmam
Varmam

வர்மப் புள்ளிகளைத் தூண்டுவதைப் போல, வர்மத் தடவல் முறை மூலமும் மனதை ரிலாக்ஸ் செய்ய முடியும். வர்ம சிகிச்சை முறைகள் பற்றித் தெரிந்துகொள்ள சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம், அரும்பாக்கத்தில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் மற்றும் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியை அணுகலாம்.

மனம் விட்டுப் பேச மனம் இருந்தால் போதும், மனம் எந்தவித சிக்கலுக்குள் உள்ளாகாது. இன்றைய சூழலில் ஒருவரது மனநலனைப் பேணிக்காப்பதில் மருந்து மாத்திரைகளையும் தாண்டி, மற்றவர்களின் அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்.

யோகம், தியானம்!

அசுர வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் நம்மைத் தடுத்து நிறுத்தி, பொறுமையாகச் செல் மனதுக்கு ஓய்வளிப்பது முக்கியம் என்பதை உணர்த்தும் முறையே யோகாசனமாகும். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே மனதையும் உடலையும் திடப்படுத்தும் வகையிலான பல்வேறு ஆசன முறைகள் குறித்து பேசியிருக்கிறது சித்த மருத்துவம்.

Yoga and Meditation
Yoga and Meditation

மனதில் உள்ள அசுத்தங்களைத் தூக்கி எறிய`சவாசனம்’ எனும் எளிமையான பயிற்சி போதும். கூடவே மனதைக் கட்டுப்படுத்தும் தியானப் பயிற்சி, பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி ஆகியவை மனதை ஒருநிலைப்படுத்த உதவக்கூடியவை. தியானத்தின்போது மூளையின் நுண்ணிய பிணைப்புகளில் நடக்கும் மாற்றங்கள், மனதை சாந்தப்படுத்துகிறது எனும் ஆய்வு பற்றிப் பலரும் அறிந்திருக்கலாம்.

பிரச்னைகளைத் தூக்கி வீசுங்கள்!

பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து செல்லும் மனநிலையை உருவாக்குவது மிக முக்கியம். பிரச்னை ஏற்படும்போது, உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்தல்… மன உளைச்சலுக்கான மாமருந்து. அப்படிப் பகிரும்போது கிடைக்கும் அன்பான ஆறுதல், பிரச்னைகளின் வீரியத்தைக் குறைக்கும்.

Sharing
Sharing
Pixabay
காஷ்மீரில் 41 சதவிகித குழந்தைகளுக்கு கடும் மன அழுத்தம்... எச்சரிக்கும் சர்வே! #NoMoreStress

மனதை சாந்தப்படுத்த மேற்சொன்ன முறைகளை முயன்று பாருங்கள். அதையும் தாண்டி மனஅழுத்தம் அதிகரிக்கும் பட்சத்தில் மருத்துவர் துணையுடன் எளிமையான மருந்துகளை நாடலாம். மனதை சாந்தப்படுத்த மிகப்பெரிய பட்டியலையே வைத்திருக்கிறது சித்த மருத்துவம். எளிமையான வாழ்க்கை முறை, சில பாரம்பர்ய மருத்துவ முறைகளைப் பின்பற்றுவதுடன் அவ்வப்போது மனதுக்கும் உடலுக்கும் ஓய்வு கொடுங்கள். கூடவே சில வாழ்வியல் கோட்பாடுகள் மனதை உற்சாகமாகச் செயல்பட வைக்கும்.

மனம் விட்டுப் பேச மனம் இருந்தால் போதும், மனம் எந்தவித சிக்கலுக்கும் உள்ளாகாது. இன்றைய சூழலில் ஒருவரது மன நலனைப் பேணிக்காப்பதில் மருந்து மாத்திரைகளையும் தாண்டி, மற்றவர்களின் அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்.

அடுத்த கட்டுரைக்கு