Published:Updated:

ஜிம் பயிற்சி ஆண்மை குறைக்குமா? மாதவிடாயின்போது தாம்பத்யம் சரியா?! மருத்துவ விளக்கம்!

செக்ஸ் குறித்து பொதுவாக நிலவிவரும் சந்தேகங்கள், கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன்.

உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நம்மில் மிகவும் சிலரே. பல நேரங்களில் நோயின் தீவிரம் அதிகரித்த பிறகுதான் மருத்துவரை நாடுகிறோம். அதுவும் உடல்நலப் பிரச்னைகளாக இருந்தால் மட்டுமே. மனநலப் பிரச்னையாக இருந்தால் மருத்துவரை அணுகுவதற்குப் பலருக்குத் தயக்கம் இருக்கிறது. அதுவே, பாலியல் தொடர்பான பிரச்னை என்றால் மருத்துவரிடம் செல்ல அதீத தயக்கம் இருக்கிறது.

Sexual Health
Sexual Health

'உடல்நலம் மனநலம் போலவே பாலியல் நலமும் சிறப்பாக இருந்தால்தான் ஒரு நபரால் சமூக பொருளாதார மேம்பாட்டுக்குச் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும்' என்கிறது உலக சுகாதார நிறுவனம். பாலியல் நலன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டுதோறும் செப்டம்பர் 4-ம் தேதி உலக பாலியல் நல தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 'ஒருங்கிணைந்த பாலியல் கல்வி' என்ற கருத்தாக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நாளில் ஆண், பெண்களிடையே செக்ஸ் குறித்து பொதுவாக நிலவிவரும் சந்தேகங்கள், கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன்.

சுயஇன்பம் தவறானதா?

Sexual Health
Sexual Health

நிச்சயமாக இல்லை. தோண்டத் தோண்ட நீர் பெருக்கெடுக்கும் என்பது இந்த விஷயத்துக்கும் பொருந்தும். ஆனால், எதற்கும் ஓர் அளவும் வரைமுறையும் வேண்டும். எந்தப் பழக்கத்துக்கும் அடிமையாகாமல் இருப்பதே நல்லது. ஓரளவுக்கு மேல் சுய இன்பத்தில் ஈடுபடவும் முடியாது என்பதே உடலின் அறிவியல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடிக்கடி சுயஇன்பத்தில் ஈடுபடுவதால் ஆணுறுப்பு சிறிதாகுமா?

கைகால்களின் வளர்ச்சி குழந்தைப் பருவத்திலிருந்து வயது கூடக்கூட எப்படி அதிகரிக்கிறதோ, அதே போலத்தான் ஆணுறுப்பின் வளர்ச்சியும் இருக்கும். சுய இன்பத்தால் அதைப் பெரிதாக்கவோ, சிறியதாக்கவோ முடியாது. மனிதன் மட்டுமன்றி எந்த உயிராலும் இயற்கையாக உள்ள ஓர் உறுப்பைப் பெரிதாக்க முடியாது.

சிறிதாக இருக்கும் ஆணுறுப்பைப் பெரிதாக்கலாம் என்றெல்லாம் மருத்துவத்தில் இதுவரை நிரூபணம் செய்யப்படவில்லை.
Vikatan

சுய இன்பத்தால் நாளடைவில் நரம்புத்தளர்ச்சி, ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படுமா?

நரம்புத்தளச்சி, ஹார்மோன் குறைபாடுகளுக்கும் சுய இன்பப் பழக்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதைச் செய்து முடித்ததும் சிலருக்கு உடல் அசதியாக இருக்கும். தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணத்தில் உண்டாகும் பதற்றத்தால், படபடவென இருக்கலாம். ஒருவர் அடிக்கடி தாம்பத்ய உறவிலோ, சுய இன்பத்திலோ ஈடுபட்டால், அந்த நபருக்கு செக்ஸ் ஹார்மோன் சுரப்பு நன்றாக உள்ளது என்றே அர்த்தம்.

முறையாகப் பயிற்சி பெற்ற ஜிம் டிரெயினரின் வழிகாட்டுதல்படி ஜிம்மில் பயிற்சிகளைச் செய்ய வேண்டியது கட்டாயம்.
பாலியல் மருத்துவர்

உறக்கத்தில் விந்தணுக்கள் வெளியேறுவதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

Sexual Health
Sexual Health

உடலிலிருந்து கழிவு, வாயு பிரிவதைப்போல மிக மிகச் சாதாரணமான நிகழ்வுதான் இது. பகல் பொழுதில் வெளியேற்றப்படாத விந்தணுக்கள், பாத்திரம் நிரம்பியதும் வழியும் நீர்போல வெளியேறுகிறது. அதை, ஆழ்மன ஆசையோடு இணைத்து, கனவாக்கி வெளியேற்றுவது நமது உடல் செய்யும் இயற்கையான செயல்.

சுய இன்பத்தால் பிற்காலத்தில் தந்தைப்பேறு அடைய முடியாமல் போகுமா?

Sexual Health
Sexual Health

பருவத்தே பயிர் செய்ய முடியாதவர்களுக்கு வடிகால் சுய இன்பம் மட்டுமே. உடலுறவு கொள்ள வாய்ப்பில்லாதோர், சுய இன்பத்தின் வழியே அந்தத் தாகத்தைத் தணித்துக்கொள்ள முடியும். இதற்கும் தந்தையாவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

விரைவாக விந்தணுக்கள் வெளியேறுவது ஒரு குறைபாடா?

Sexual Health
Sexual Health

நிச்சயமாக இல்லை. அது அவரவரின் உடல் நிலை, மனநிலையைப் பொறுத்தது. தொடக்க காலத்தில் விரைவாக விந்து வெளியேறுகிறது என்றால், அதை நீங்களாகவே எளிய பயிற்சிகள் மூலம் சரி செய்யலாம். Pause - Stop - Start என்ற முறையைப் பின்பற்றலாம். சுய இன்பத்தில் ஈடுபட்டுக்கொண்டே, விந்து வெளியேறும் முன்னதாகவே பாதியில் நிறுத்திவிட வேண்டும். சில விநாடிகள் கழித்து மீண்டும் தொடங்க வேண்டும். பாலியல் மருத்துவரின் பரிந்துரைப்படி இவ்வாறு குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்து வந்தால், விரைவாக விந்து வெளியேறுவது கட்டுப்படுத்தப்படும். இந்த முறையிலும் பிரச்னை சரியாகாத பட்சத்தில் மருத்துவச் சிகிச்சைக்குச் செல்லலாம்.

ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதால் ஆண்மைக் குறைவு ஏற்படுமா?

Gym
Gym

'கீகல்', 'வெயிட் லிஃப்டிங்' போன்ற சில பயிற்சிகளைச் செய்வதால், உயிரணுக்கள் பெருகும். அதேசமயம் தவிர்க்க வேண்டிய சில பயிற்சிகளும் உள்ளன. பாலியல் மருத்துவர், முறையாகப் பயிற்சி பெற்ற ஜிம் டிரெயினரின் வழிகாட்டுதல்படி ஜிம்மில் பயிற்சிகளைச் செய்ய வேண்டியது கட்டாயம். ஜிம்மில் தரப்படும் புரோட்டின் வகையறா உணவுகள், ஊக்க பானங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இது போன்ற உணவுகள் ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான 'டெஸ்டோஸ்டிரோன்' சுரப்பைக் கண்டிப்பாகப் பாதிக்கும். இதனால், ஆண்மைக்குறைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

பெண்கள் மாதவிடாயின்போது தாம்பத்ய உறவு வைத்துக்கொண்டால், பால்வினை நோய்கள் வருமா?

Menstruation
Menstruation

நிச்சயமாக வராது. மாதவிடாயின்போது தாம்பத்ய உறவில் ஈடுபடும் அளவுக்கு, பெண்ணின் மனநிலையும் உடல்நிலையும் ஏற்புடையதாக இருக்கின்றனவா என்பதைப் பார்க்க வேண்டியது மட்டும் அவசியம். இரண்டில் ஒன்று ஒத்துழைக்காவிட்டாலும் உறவைத் தவிர்ப்பதே நல்லது. இருவருக்கும் விருப்பம் இருக்கும்பட்சத்தில் உடலுறவு கொள்வதில் தவறேதும் இல்லை. உறவுக்குப் பின்னர், உறுப்புகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

பெண்களின் மார்பக அளவை வைத்து, அவர்களது தாம்பத்ய ஆர்வத்தையும் செயல்படும் திறனையும் மதிப்பிட முடியாது.
பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன்.
AIDS
AIDS

ஆணுறுப்பின் முன்தோலை நீக்குவதால் பால்வினை நோய்கள் வராது என்பது உண்மையா?

'மார்க்க கல்யாணம்' எனப்படும் இந்த முறையை முன்னோர் ஏற்படுத்தி வைத்ததற்குக் காரணம், முன்தோலில் அழுக்குகள் சேர்ந்து அதனால் நோய் ஏதும் வரக்கூடாது என்பதற்காகத்தான். தவிர, தோல் நீக்கப்படுவதால் ஆணுறுப்பின் முனையில் உணர்வுத்திறன் சற்று குறையும். அதனால், தாம்பத்யத்தின்போது சற்று நேரம் அதிகமாகச் செயல்பட முடியும். மற்றபடி, தோலை நீக்குவதால் பால்வினை, எய்ட்ஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்பது தவறு.

மார்பகம் பெரிதாக இருக்கும் பெண்களுக்கு தாம்பத்யத்தில் அதிக நாட்டம் இருக்குமா?

Hormone
Hormone

பெண்களின் மார்பக அளவை வைத்து, அவர்களது தாம்பத்ய ஆர்வத்தையும் செயல்படும் திறனையும் மதிப்பிட முடியாது. அவரது உடலில் சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்கள், உடலுறவின்போது இருக்கும் மனநிலை, உடல் ஒத்துழைக்கும் திறன் என எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் அமையும் விதத்தைப் பொறுத்தே அது அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு