Published:Updated:

குழந்தைகள் சாப்பிடும் கேக், சாக்லேட்டுகளில் கவனம்! - எச்சரிக்கும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம்

ஜெ.நிவேதா

வியாபார நோக்கில் உணவுடன் சேர்த்துப் பரிசுப்பொருள்களை விநியோகிக்கக் கூடாது. வேண்டுமெனில், தனியாக கவர் போட்டு பேக் செய்து கொடுக்கலாம்

கேக்
கேக் ( Pixabay )

பல நேரங்களில், குழந்தைகளைக் கவர்வதற்காக சாக்லேட், கேக் போன்ற உணவுப்பொருள்களில் பொம்மைகள், பரிசுப்பொருள்கள் போன்றவற்றையும் சேர்த்துக் கொடுப்பார்கள். அதுவும் உணவென நினைத்துக்கொண்டு குழந்தைகள் அதைத் தவறுதலாக சாப்பிட்டு விடுகிறார்கள்.

பரிசுப்பொருள்
பரிசுப்பொருள்
Pixabay

இதன் காரணமாக அடுத்த சில மணி நேரத்தில் செரிமானப் பிரச்னை தொடங்கி பல்வேறு உடல் உபாதையை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும். சில நேரங்களில் இது குழந்தையின் உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

வியாபார நோக்கில் உணவுடன் சேர்த்து பரிசுப்பொருள்களை விநியோகிக்கக் கூடாது. வேண்டுமெனில், தனியாகக் கவர் போட்டு பேக் செய்து கொடுக்கலாம்.
சாக்லேட்
சாக்லேட்
Pixabay

இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்காக, மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (FSSAI) சார்பில், அதன் நிர்வாக இயக்குநர் ஷோபித் ஜெயின் அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த வாரம் கடிதமொன்று அனுப்பியிருக்கிறார்.

அதில், `இதுபோன்று விநியோகிக்கப்படும் உணவுப்பொருள்கள் யாவும், பாதுகாப்பில்லாத உணவு வகையைச் சேர்ந்தது. பரிசுப்பொருளின் நிறமோ, அமைப்போ உணவுப்பொருளைப் போலவே இருந்தால் குழந்தைகள் குழப்பம் அடைந்துவிடுவர் என்பதால் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சாக்லேட்
சாக்லேட்
Pixabay

வியாபார நோக்கில் உணவுடன் சேர்த்துப் பரிசுப்பொருள்களை விநியோகிக்கக் கூடாது. வேண்டுமெனில், தனியாக கவர் போட்டு பேக் செய்து கொடுக்கலாம்' எனத் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக அந்தந்த மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர் பேக்கரி, ஹோட்டல் உரிமையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.